பதிப்புகளில்

பெங்களூரு, சென்னையில் புதுமையான ரெஸ்டோ-பப் நடத்தும் 'Holy Cow Hospitality'

15th Nov 2015
Add to
Shares
86
Comments
Share This
Add to
Shares
86
Comments
Share

எப்போதுமே அடுத்த வேளை சுவையான உணவுக்கான விருப்பம் மற்றும் உணவு மற்றும் பாணங்கள் துறையில் கொண்டிருந்த அனுபவம் ஆகியவை சந்தீப் ஸ்ரீனிவாச நாயக் ( Sundeep Sriniva Nayak) மற்றும் தாஷ்வின் முக்காதிரா( Thashvin Muckatira ),2010 ல் 'ஹோலி கவ் ஹாஸ்பிட்டாலிட்டி' (Holy Cow Hospitality) நிறுவனத்தை துவக்க வைத்தன. பிளான் பி, மதர் க்ளக்கர்ஸ் மற்றும் ஒன் நைட் இன் பாங்காங் ஆகிய பிராண்ட்களை கொண்டுள்ள இந்நிறுவனம் பெங்களூரு மற்றும் சென்னையில் ஐந்து ரெஸ்டாரண்ட்களை பெற்றிருக்கிறது.

அப்போது சந்தீப் சீன ரெஸ்டாரண்ட்களை பிரான்சைஸ் அடிப்படையில் நடத்திக்கொண்டிருந்தார். தாஷ்வின் அமெரிக்க மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். பிரான்சைஸ் அடிப்படையில் செயல்படுவது நீண்டகால நோக்கில் ஏற்றதல்ல என்று சந்தீர்ப் நினைத்தார். கருத்தாக்கம், உணவு வகைகள், செயல்பாடுகள் என எல்லாமே தனது கட்டுப்பாட்டில் உள்ள ரெஸ்டாரண்டை சொந்தமாக நடத்த விரும்பினார்.

சந்தீப் ஸ்ரீனிவாச நாயக் மற்றும் தாஷ்வின் முக்காதிரா

சந்தீப் ஸ்ரீனிவாச நாயக் மற்றும் தாஷ்வின் முக்காதிரா


பயணம் ஆரம்பம்

இந்த இருவரும் சேர்ந்து 2010ல் பெங்களூருவில் 1200 சதுர அடியில் 58 பேர் சாப்பிடும் வசதி கொண்ட முதல் ரெஸ்டாரண்டான 'பிளான்பி' -ஐ ( PlanB ) துவக்கினர். சிக்கன் விங்ஸ், ஸ்டீக்ஸ் போன்ற உணவுகளை வழங்கிய அமெரிக்க பாப் பாணியில் இது அமைந்திருந்தது. இதன் உள் அலங்காரம் கூரையில் குழாய் இணைப்பு மற்றும் வெளியே தெரியும் செங்கல் ஆகியவற்றை கொண்டதாக அமைந்திருந்தது. 2012 ல் ரிச்மாண்ட் டவுனில் இரண்டாவது பிளான் பி துவக்கப்பட்டது.

"காக்டெயில் மது மற்றும் அருமையான உணவை வழங்க கூடியதாக பிளான் பி அறியப்படுகிறது. இறைச்சி மற்றும் சீஸ் அதிகம் கொண்டதாக இதன் உணவு உள்ளது” என்கிறார் சந்தீப்.

பிளான் பி வரவேற்பை பெற்றவுடன் பெங்களூரு இந்திரா நகரில் 2013ல் 'மதர் க்ளக்கர்ஸ்' (Mother Cluckers ) சுவையான பார் உணவை வழங்கும் சுற்றுப்புற பாராக துவக்கப்பட்டது.

பிளான்பி

பிளான்பி


இந்த ஆண்டு துவக்கத்தில் சென்னையில் பிளான் பி துவக்கப்பட்டது. ஆகஸ்ட்டில் பெங்களூருவில் 'ஒன்நைட் இன் பாங்காங்' மையத்தை துவக்கினர். (இங்கு தாய்லாந்து பாணி காக்டெய்ல் மற்றும் தாய்லாந்து உணவை சுவைக்கலாம்). பாங்காங்கில் உள்ள பார்களை ஊக்கமாக கொண்டு இது அமைக்கப்பட்டது.

"இந்த அளவு விரிவாக்கம் செய்ய முடியும் என நாங்கள் நினைக்கவில்லை. நல்ல உணவு மற்றும் பீர் வழங்க கூடிய ஒரு மையத்தை நடத்துவதே எங்கள் நோக்கமாக இருந்தது. அதன் பிறகு தான் லிக்கர் பார் மற்றும் ரெஸ்டாரண்ட் பாணிக்கு மாறினோம். அதிலிருந்து புதிதாக ஒன்றை துவங்கி பயணிப்பது உற்சாகமாக இருக்கிறது” என்கிறார் தாஷ்வின்.

ஒன் நைட் இன் பாங்காங்

ஒன் நைட் இன் பாங்காங்


முதல் ஆறு மாத செயல்பாட்டில் வெற்றியை சுவைப்பது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் கூறுகிறார். அவர்கள் ரூ.80 லட்சம் ஆரம்ப மூலதனத்துடன் துவங்கினர். ஸ்டார்ட் அப்களுக்கு இது அதிக முதலீடாக கருதப்படுகிறது. கேஸ்ட்ரோ பப் அல்லது டைவ் பார் பாணி பெங்களூருவுக்கு புதிதாக இருந்தது என்கிறார் சந்தீப்.

வளர்ச்சிப்பாதை

பெங்களூருவில் ஒரு மையத்துடன் துவங்கிய ஹோலி கவ் ஐந்தாண்டுகளில் 5 ரெஸ்டாரண்ட்களை துவக்கி 400 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.

மதர் குளுக்கர்ஸ்

மதர் குளுக்கர்ஸ்


பெங்களூருவில் உள்ள நான்கு மையங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஒரு மையம் சேர்த்து இதன் ஐந்து மையங்களில், 200 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சொந்த நிதியில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தனது மையங்கள் மூலம் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த அண்டு ரூ.10 கோடி வருவாய் ஈட்டிய இந்நிறுவனம் இந்த ஆண்டு ரூ.20 கோடி வருவாயை இலக்காக கொண்டுள்ளது. பிரான்சைஸ் மாதிரியை பின்பற்றவில்லை என்றும் எல்லா மையங்களுமே தங்களுக்கு சொந்தமானது என்று சந்தீப் கூறுகிறார்.

விரிவாக்க திட்டமாக ஐதராபாத், மும்பை மற்றும் பிற நகரங்களில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 5 புதிய மையங்களை துவக்கி செயல்பட திட்டமிட்டுள்ளது.

இணையதள முகவரி: Holy Cow Hospitality

Add to
Shares
86
Comments
Share This
Add to
Shares
86
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக