பதிப்புகளில்

கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தையை பெற்று எடுத்த முதல் இந்தியப் பெண்!

posted on 24th October 2018
Add to
Shares
111
Comments
Share This
Add to
Shares
111
Comments
Share

கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தையை பெற்று எடுத்த முதல் இந்தியப் பெண் மீனாக்ஷி வலன். குஜராத்தைச் சேர்ந்த 28 வயதான மீனாக்ஷி, கடந்த வியாழன் அன்று புனேவில் ஓர் அழகிய பெண் குழந்தையை பெற்றடுத்துள்ளார். இந்தியாவில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடக்கும் முதல் பிரசவம் இது.

பட உதவி: ட்விட்டர்<br>

பட உதவி: ட்விட்டர்


கருசிதைவால் மீனாக்ஷியின் கருப்பை செயல் இழந்தது, அதனால் மீனாக்ஷியின் தாயார் அவரது கருப்பையை தன் மகளுக்காக தானம் செய்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் மீனாக்ஷிக்கு கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

சிகிச்சைக்கு பிறகு செயற்கை கருத்தரித்தல் மூலம் கற்பமாகி இன்று குழந்தையும் பெற்றெடுத்துவிட்டார். இந்தியாவில் மட்டுமின்றி ஆசிய நாடுகளில் மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நடந்த முதல் பிரசவம் இது.

“ஸ்வீடனில் இது போன்ற பிரசவம் 9 நடந்துள்ளது, அமெரிக்காவில் 2, 12வதாக இந்தியாவில் இங்கு தான் நடந்துள்ளது,” என்கிறார் பிரசவம் பார்த்த மருத்துவர் நீட்டா.

இந்த சிகிச்சைக்கு முன்பு திருமணமாகி 9 ஆண்டுகளாக பல சிக்கல்களை மீனாக்ஷி சந்திதுள்ளார். இதுவரை இரண்டு முறை கற்பம் தரித்து 9 மாதங்கள் சுமந்த பின் கரு கலைந்துள்ளது. அதையும் தாண்டி நான்கு முறை கரு கலைந்துள்ளது. இதனால் தான் மீனாக்ஷின் கருப்பை சேதம் அடைந்துள்ளது.

“எனக்கு குழந்தை பெற வேண்டும், இந்த கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை மட்டுமே எனக்கு இருந்த கடைசி வாய்ப்பு. முழு மனதாக இதை ஏற்றுக்கொண்டேன்,”

என்கிறார் மீனாக்ஷி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த பேட்டியில். முழுமையாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து கருப்பை மாற்று சிகிச்சை செய்த பூனே காலக்சி மருத்துவமனையிலே குழந்தையையும் பெற்றார். 

தகவல் உதவி: டெக்கான் கிரானிக்கல் | கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் 

Add to
Shares
111
Comments
Share This
Add to
Shares
111
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக