பதிப்புகளில்

சமமான வாய்ப்பளித்து திருநங்கைகளை பணிக்கு சேர்த்துக் கொள்ளும் கொச்சி மெட்ரோ!

YS TEAM TAMIL
30th Jul 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

கொச்சி மெட்ரோ ரெயில் (கே.எம்.ஆர்எல்) ஆனது, திருநங்கைகளுக்கு வாடிக்கையாளர் சேவை, தூய்மையாக்கம், கூட்ட நெரிசலை மேம்படுத்துதல் முதலிய பணிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவிலே முதல் முறை திருநங்கைகளை ஊழியர்களாக பணியில் அமர்த்திய மெட்ரோ சேவை எனும் பெருமையை கொச்சி மெட்ரோ ரெயில் பெறும். அடுத்த வருடம் கொச்சி மெட்ரோ ரெயில் அதன் சேவையைத் தொடங்க உள்ளது. திருநங்கைகள் சந்திக்கும் சமூக களங்கங்களை மனதில் கொண்டு இம்முடிவை எடுத்ததாக, கொச்சி மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எலியாஸ் ஜார்ஜ் கூறினார்.

படம்: <a href=

படம்:

இந்தியா டைம்ஸ்a12bc34de56fgmedium"/>

"முக்கிய துறைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் போராடும் திருநங்கை சமூகத்திற்கு, ஒரு மெட்ரோ ரெயில் துறை வேலை கொடுப்பதும் இதுவே முதல் முறை. இவர்கள் கொச்சி மெட்ரோவின் ஊழியர்களாய் இருக்கமாட்டார்கள்; ஆனால் இவ்வமைப்பின் ஒரு பங்காய் இருப்பர்" என்றார் எலியாஸ். 

இவர்களுக்கு பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டு, அச்சோதனையின் அடிப்படையில் வேலைகள் வழங்கப்படும். இந்தியா டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, அதிகமான பெண் ஊழியர்களைக் கொண்டு கொச்சி மெட்ரோ இயங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் சுமார் 25,000 திருநங்கைகள் இருகின்றனர். கடந்த வருடம், இந்திய வரலாற்றிலேயே முதல் முறை கேரளா அரசு தான் திருநங்கைகளுக்கென ஒரு செயல் திட்டம் அறிவித்தது. சுப்ரீம்கோர்ட்-இன் தீர்ப்பு (2014) மற்றும் மாநிலத்தின் கணக்கெடுப்பு முடிவை கணக்கில் கொண்டு, "திருநங்கைகளுக்கான அரசியலமைப்பு உரிமைகளைச் செயலாக்குவது அவசியம்" எனும் கொள்கை திட்டத்தை, கேரளத்தின் சமூக நீதித் துறை வெளியீட்டது.

இத்திட்டமானது, திருநங்கைகள் மற்றும் இடையிலிங்க மக்களின் (Intersex people) எல்லா வகையினருக்கும் பொருந்தும். சுப்ரீம்கோர்ட்-இன் தீர்ப்பு படி, சிறுபான்மையோர், தன்னை ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது திருநங்கையாகவோ சுய அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையையும் இத்திட்டம் வலியுறுத்துக்கிறது. மேலும் சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகள், வளங்கள் மற்றும் சேவைகள், சட்டத்தின் கீழ் சமமாக மதிக்கப்படும் உரிமை, வன்முறை இன்றி வாழ்க்கை வாழும் உரிமை மற்றும் முடிவுகளை நிர்ணயிக்கும் துறைகளில் ஒப்பான உரிமை முதலியவை, இவர்களை சமமான முறையில் அணுகவும் இத்திட்டம் வழிசெய்துள்ளது.

கட்டுரை: Think Change India

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக