பதிப்புகளில்

ஆதரவற்றோருக்கு இருப்பிடம் கொடுத்து உதவும் கவிஞர் சுகதகுமாரியின் இல்லம் 'அபயா'

YS TEAM TAMIL
26th Jan 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

ஆதரவற்றோருக்கான பல இல்லங்கள் இருக்கின்றன. ஆனால் “அபயா” சற்றே மாறுபட்ட ஒரு இல்லம். இந்த இல்லம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இதில் வசிப்பவர்கள் பாலியல் கொடுமைக்குட்பட்டவர்கள், சித்தரவதைக்கு ஆளானவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் போன்றவர்கள். இவர்கள் தங்களுடைய பயங்கரமான கடந்த கால நிகழ்வுகளை மறந்து புதிதாக தங்களுக்கேற்ற வேலைகளில் அமர உதவிபெறுகிறார்கள். தன்னம்பிக்கையுடன் இந்த இல்லத்திலிருந்து வெளியேறுகிறார்கள்.

image


சுகதகுமாரி ஒரு கவிஞர். ஆர்வலர். அவருடைய வழிகாட்டலில் உருவானதுதான் “அபயா”. பின்தங்கியவர்களுக்காக 1980-ம் வருடம் தொடங்கப்பட்டது. வெற்றிகரமாக 30 வருடங்களை நிறைவுசெய்திருக்கிறார்கள். இந்த இல்லத்தில் தங்கியவர்கள் பலர் பாலியல் சம்பந்தப்பட்ட கொடுமைக்கு ஆளானவர்கள். இவர்கள் மிகுந்த மன உளைச்சலிலிருந்து விடுபட்டு மறுவாழ்வு பெற்றனர்.

“அபயா” இல்லத்தை நடத்துவதற்கு நிதி பற்றாக்குறை, போதுமான வசதி குறைவு போன்ற பல குறைகள் இருப்பினும், இங்கு வசிப்பவர்கள் கண்களில் தோன்றும் நம்பிக்கையும், உறுதியும்தான் நிறுவனத்தின் உண்மையான வெற்றி என்கிறார் அபயாவின் நிறுவன செயலாளர் சுகதகுமாரி. மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மனநலம் குன்றியவர்களுக்கான மறுவாழ்வு மையம் தொடங்க விரும்புவதாக கூறுகிறார் “சரஸ்வதி சம்மன்” பட்டம் பெற்ற இக்கவிஞர். இதுகுறித்த திட்டங்களை மாநில அரசுக்கு சமர்ப்பித்திருக்கிறார் சுகதகுமாரி.

“நூற்றுக்கணக்கான பின்தங்கியவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு கடந்த 30 வருடங்களாக அடைக்கலம் கொடுத்து வருகிறோம்” என்கிறார். 

“எவ்வளவோ குறைபாடுகள் இருந்தாலும், எல்லாவற்றையும் எதிர்த்து எங்கள் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிவும் தன்னம்பிக்கையும் அளிக்கிறோம்” என்கிறார் அவர்.

ஆதரவற்ற மனநலம் பாதித்த நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையமாக 1985-ல் கேரளாவில் தொடங்கப்பட்டதுதான் 'அபயா'. ஆனால் தற்போது அவர்களுக்காக மட்டுமல்லாது பலதரப்பட்ட மக்களுக்கு தஞ்சமளிக்கும் நிறுவனமாக மாறியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையமாகவும், போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மையமாகவும், பின்தங்கிய பெண் குழந்தைகள் மற்றும் மகளிருக்கான குறுகியகால அடைக்கலத்திற்கான இல்லமாகவும் இருக்கிறது அபயா.

அவருடைய நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் அவரை ஆசிரியர் என்றுதான் அழைப்பார்கள். ஒருமுறை சுகதகுமாரி தற்செயலாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனைக்கு சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட அறைகள் முற்றிலும் சுகாதாரமின்றி இருந்தது. அவர்கள் அரை நிர்வாணமாகவும் உடம்பில் காயத்துடனும் தென்பட்டனர். பசியாலும் வலியாலும் கதறினர். என்னுடைய கைகளை பற்றியவாறும் கால்களை கட்டிக்கொண்டும் பசியால் அழுதனர்.” இந்த காட்சிகளால் நெஞ்சம் உறைந்தது. இதனால் உருவானதுதான் அபயா.

தொடர் போராட்டம் காரணமாக பொதுமக்கள் மருத்துவமனையை கண்காணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் நோயாளிகளின் மனநலம் மேம்பட்டது” என்கிறார் 81 வயது கவிஞர். அபயாவின் சேவைகள் விரிவடைந்தது. “அபயகிராமம்” தொடங்கப்பட்டது. பத்து ஏக்கர் நிலப்பரப்பில் ஒதுக்குப்புறமான “மலையின்கீழு” கிராமத்தில் 1992-ல் தொடங்கப்பட்டது.

“அபயகிராமம்” நிறுவனத்திற்கு அடித்தளமிட்டவர் திபத் நாட்டின் தலைவர் தலைலாமா. அவரது உருக்கமான வார்த்தைகள்தான் மன அழுத்தத்துடன் இருக்கும் நோயாளிகளுக்கு உதவுவதற்கு சுகதகுமாரியை தூண்டியது.

“தங்குமிடம் இல்லாதவர்களும், துரதிஷ்டசாலிகளும் அடைக்கலம் புகுவதற்கு இந்த நிலம் உதவட்டும் என்றார் தலைலாமா. அவருடைய வார்த்தைகளை நிறைவேற்றத்தான் நான் பல வருடங்களாக கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன் “ என்கிறார். 

அபயாவின் கீழ் எட்டு நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவை சிகிச்சையளிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட மன நோயாளிகளுக்கான “கர்மா”, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான குறுகிய மற்றும் நீண்ட கால அடைக்கல இல்லமாக “ஷ்ரத்தா பவனம்”, மன ஆரோக்கியம் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான “மித்ரா” போன்றவை ஆகும்.

மேலும் பிற்படுத்தப்பட்ட பெண்குழந்தைகளுக்கான “அபயபாலா”, பெண்களுக்கான குறுகியகால அடைக்கல இல்லமாக “அதானி”, குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையமாக “போதி” மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பகல் நேர சிகிச்சைமையமாக “பகல்வீடு” போன்றவையாகும். அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கான 24 மணி நேர உதவியும் பெண்களுக்கான சட்ட உதவியும் இங்கே வழங்கப்படுகிறது.

“அபயாவின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி பற்றாக்குறை முக்கிய தடையாக இருக்கிறது. தற்போது 200 பேர் இந்த இல்லத்தில் வசிக்கிறார்கள். 80 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். “நாங்கள் அரசு வழங்கும் மானியங்களையும் தனிப்பட்ட நபர்கள் முன்வந்து அளிக்கும் நன்கொடையையும் சார்ந்தே இருக்கிறோம். இன்னும் பலருக்கு அடைக்கலம் வழங்குவதற்கு நாங்கள் விரும்பினாலும் வசதிபற்றாக்குறை காரணமாக எங்களால் இடமளிக்க முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் போதுமானதாக வழங்க முடியவில்லை.” என்கிறார்.

அபயா எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது மதத்தையோ சார்ந்ததில்லை. இதுதான் அபயாவின் பலம் மற்றும் பலவீனம். ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது மதத்தையோ சார்ந்ததாக இருந்திருந்தால் எங்களுக்கு பல லட்ச ரூபாய் நிதியுதவி கிடைத்திருக்கும்”.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சைலண்ட் பள்ளத்தாக்கில் தொடங்குவதாக இருந்த நீர்மின் திட்டத்தை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்தார். “அரன்முலா “வில் தொடங்கவிருந்த விமான நிலைய கட்டுமான பணிக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டார். குழந்தைகளின் கனவுகளை நனவாக்குவதே நோக்கமாகவும் அதற்காகவே பாடுபடுவதாகவும் கூறுகிறார் கவிஞர் சுகதகுமாரி.

தமிழில் : ஸ்ரீ வித்யா

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக