பதிப்புகளில்

72 வது சுதந்திர இந்தியாவின் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண உறுதி கொள்வோம்...

YS TEAM TAMIL
15th Aug 2018
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

ஒவ்வொரு சிக்கலான பிரச்சனைக்கும், தெளிவான, எளிமையான, தவறான பதில் இருக்கிறது”.- எச்.எல்.மெக்கென்

சமுதாயங்கள் சிக்கலானதாக வளரும் போது, அவை எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் மேலும் சிக்கலாகின்றன. சமூகக் காரணிகள், பல அடுக்குத்தன்மை, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் வேரூன்றியிருப்பதால், சமூக மற்றும் மனிதநேய பிரச்சனைகள் எளிமையான தீர்வுக்குள் பிடிபட மறுக்கின்றன.

அழகிய, எளிமையான தீர்வுகள் இல்லை என்று இதற்கு அர்த்தம் அல்ல. மகத்தான சிந்தனையாளர்கள் எளிமையான தீர்வுகளை கண்டறிகின்றனர் என்றாலும் சில நேரங்களில் சிக்கலான பிரச்சனைகள் எளிய தீர்வுகளுக்குள் அடங்குவதில்லை. 

சிக்கலான பிரச்சனைகளின் குணங்கள் எவை? அவற்றை தீர்ப்பது எப்படி?

இதை புரிந்து கொள்வதற்காக, பழைய பெங்களூருவில் உள்ள அமைதியான அலுவலகத்தில் சிவகுமாரை சந்தித்தோம். சிவகுமாருக்கு சிக்கலான பிரச்சனைகள் புதித்தல்ல. இவற்றை புரிந்து கொள்வதில் அவர் வாழ்நாளை செல்விட்டிருக்கிறார். திரட்டப்படும் நிதியின் அளவு வெற்றிக்கான அடையாளமாக கருதப்படும் காலத்தில், அவர் அதிக சத்தமில்லாமல் பில்லியன் டாலருக்கு மேல் நிதி திரட்டி, புகழை விரும்பாமல், அமைதியாக தீர்க்க முடியாத பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருகிறார்.

குர்காவ்னின், மொகமத்பூரில் உள்ள பெண்கள் நோய்த்தடுப்பு மற்றும் நல மேம்பாட்டு மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகின்றனர். 

குர்காவ்னின், மொகமத்பூரில் உள்ள பெண்கள் நோய்த்தடுப்பு மற்றும் நல மேம்பாட்டு மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகின்றனர். 


யுவர்ஸ்டோரி: சிக்கலான பிரச்சனையை எப்படி வரையரை செய்வீர்கள்?

ஷிவ்குமார்: சிக்கலான பிரச்சனைக்கு கீழ்கண்ட குணங்கள் இருக்கும். அ) பிரச்சனைக்கான எந்த தீர்வும் கடினமான நிபந்தனைகளை கொண்டிருக்கும். ஆ) பல்வேறு தரப்பினர் தொடர்பு கொண்டிருப்பதால், அவர்கள் நலன் முரணாக அமையும் இ) சந்தை செயல்பாடும் எளிதாக அமையாது.

யு.ஸ்: சிக்கலான பிரச்சனைகளுக்கான உதாரணங்களை சொல்ல முடியுமா?

ஷிவ்குமார்: ஒவ்வொரு ஆண்டும் 12 மில்லியன் பேருக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவது; இந்தியாவை திறன் பெற வைப்பது; வறுமை ஒழிப்பு; கல்வி குறித்த மறுசிந்தனை; நகர்புற இந்தியாவில் பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மேம்படுத்துவது போன்றவை.

யு.ஸ்: கடைசி உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். இது ஏன் சிக்கலான பிரச்சனை?

ஷிவ்; இதன் சந்தை மதிப்பு ஆண்டுக்கு 300 மில்லியன் டாலர். இதன் மொத்த சந்தை பரப்பை கருத்தில் கொள்ளும் போது, தொழில்முனைவோர் இதில் ஆர்வம் காட்டுவார்கள், முதலீட்டாளர்கள் ஆர்வம் கொள்வார்கள் என நினைக்கலாம். ஆனால் அத்தகைய நிலை இல்லை. இதற்கான காரணங்கள் வெள்ப்படையானவை. தீர்வுகள் சிக்கலானவை மற்றும் நிலையில்லாதவை. இந்த பிரச்சனையை திரிக்க முடியாது எனும் எண்ணத்தை வெல்ல வேண்டும். இதற்கான பாதை மற்றும் லாபம் நிச்சயம் இல்லாதவை. ஆனால், நல்ல தீர்வுக்கு பாலியல் தொழிலாளர்களே கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பார்கள்.

யு.எஸ்: சரி, இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பீர்கள்?

ஷிவ்: என்னுடைய இணை நிறுவனரான ரகு இதை அழகாக விளக்கியுள்ளார்:

‘சமூகத்தின் ஆற்றலோடு, சந்தையின் திறனை இணைக்கும் போது, அவற்றோடு நல்லிதயம் கொண்டவர்கள் அர்ப்பணிப்பு மற்றும் அரசின் வீச்சை இணைக்கும் போது, ஆழமான நீடித்த சமூக தாக்கம் சாத்தியம்.

இந்த பிரச்சனைக்கு இது எப்படி பொருந்துகிறது என பார்க்கலாம்.

என்னுடைய குழு, பெங்களூருவில் உள்ள பாலியல் தொழிலாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. துவக்கத்தில், இந்த பெண்கள் எதிர்கொள்ளும் இன்னல் மற்றும் வலி குறித்த குறைந்த புரிதலே இருந்தது. என்றேனும் ஒரு நாள் தாங்கள் மற்றும் குழந்தைகள் மேம்பட்ட வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நாங்கள் உணரவில்லை. எங்களிடம் இருந்து அவர்கள் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதை நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் தங்கள் பிரச்சனைக்கான சரியான பதிலை தேடுவதற்கான வழியை மட்டும் தான்.

எனவே, அவர்கள் நிலையை மேம்படுத்துவதற்கான எங்களின் ஆர்மப் முயற்சி போதுமான வரவேற்பை பெறவில்லை.

“அவர்கள் எங்களால் பயன்பெறுபவர்கள், திட்டத்தை வகுக்க எங்களுக்குத்தெரியும்” என்பதாக எங்கள் அணுகுமுறை இருந்தது. இதை மாற்றிக்கொள்ள சிறிது காலம் ஆனது. அவர்களை பங்குதாரர்களாக கருதி, அவர்கள் பிரச்சனையை தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளை வழங்கிய போது எல்லாம் மாறத்துவங்கியது. அவர்கள் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்த போது மாற்றம் நம்ப முடியாமல் இருந்தது.

2008 ல் பெங்களூருவில் காவல்துறை துன்புறுத்தல் உச்சத்தில் இருந்த போது, புகார் அளிப்பது, வழக்கு தொடுப்பது, போராட்டம் நடத்துவது என பலவிதமான தேர்வுகள் இருந்தன. எல்லாவற்றையும் முயற்சித்தோம். முன்னாபார் படத்தால் ஊக்கம் பெற்ற பெண் தலைவர் ஒருவர் காந்திகிரி வழியில் போராட்டம் நடத்தினார்.

தங்களை அடித்து உதைத்த காவலர்கள் மற்றும் அவர்கள் மறைவுக்கு அவர் பூங்கொத்து அனுப்பி வைத்தார். இந்த திரைப்பட பாணி செயலுக்கு ஓரளவு கவனம் ஏற்பட்டு, காவல்துறையுடன் பேச்சு வார்த்தை நடத்த முடிந்தது. கொஞ்ச நாட்களில் வன்முறை கணிசமாக குறைந்தது. அடி உதைக்கு உள்ளாகிறவர்கள் அல்லது அது தொடர்பான அச்சம் கொண்டவர்கள் மரியாதையான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியாது. வன்முறை குறைந்ததும், அவர்கள் சுயமரியாதை மீட்கப்பட்டு, நிதி மற்றும் வாழ்க்கை பாதுகாப்பில் கவனம் செலுத்தினர்.

10 ஆண்டுகளில் 13 பேர் கொண்ட குழுவில் இருந்து 13,000 பேர் கொண்ட வலுவான அமைப்பாக உருவானார்கள். தங்கள் சொந்த வங்கியை ஏற்படுத்திக்கொண்டனர். 2 மில்லியன் கடன் வழங்கி வங்கியை லாபமாக நடத்துகின்றனர். 150 பிள்ளைகள் பள்ளியில் சேர, எச்.ஐ.வி பாதிப்பு 20 சதவீத்தில் இருந்து 6 சதவீதமாக குறைய, 1470 பெண்களை போதையில் இருந்து மீட்க உதவியுள்ளனர். பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளனர்.

பாலியில் தொழிலாளர்கள் ,தொடர்புடையவர்கள் இடையிலான கூட்டு , 20,000 பாலியல் தொழிலாளர்கள்,  குழந்தைகள் வாழ்க்கையை மேம்படுத்தியது.

பாலியில் தொழிலாளர்கள் ,தொடர்புடையவர்கள் இடையிலான கூட்டு , 20,000 பாலியல் தொழிலாளர்கள்,  குழந்தைகள் வாழ்க்கையை மேம்படுத்தியது.


இன்று மருத்துவ நல திட்டங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குகின்றனர். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு (அரசும் தான்) மதித்து, இணைது செயல்படாவிட்டால் இது சாத்தியம் இல்லை. அவர்களுக்காக செயல்படும் அதே நேரத்தில் அவர்களுடன் இணைந்து செயல்படுவது தான் இந்த மாயத்திற்குக் காரணம்.

இந்த உதாரணம் பெண் பாலியல் தொழிலாளர் தொடர்பானது என்றாலும் இந்த பாடம், குழந்தைகள், மீனவர்கள், எறுமைமாட்டு வண்டி ஓட்டுனர்கள் சங்கத்தினர், உப்பள தொழிலாளர்கள் என எல்லா தரப்பினருக்கும் பொதுவானது. ஒரு சமூகம் தொடர்பான ஆழ்மான புரிதல், அது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளவிதம், அதன் சமூக நெறிகள், ஊக்கம், தலைமை, வரம்புகள் ஆகியவற்றை தீர்வுகளில் உள்ளடக்க வேண்டும்.

சமூகத்திற்கான மரியாதை மற்றும் அவர்கள் நிலையை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் மீதான நம்பிக்கை மிகவும் முக்கியம். போதிய விழிப்புணர்வு இல்லாத பிரச்சனையால் சமூகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என மாற்றத்தை ஏற்படுத்த முயல்பவர்கள் நினைக்கும் போது, பலன்கள் செயற்கையாகவும், தற்காலிகமாகவும் அமைகின்றன. இந்த அணுகுமுறை, அறியாமை, ஆணவம் மற்றும் அறிவுச்சோம்பலை கொண்டிருக்கிறது.

யு.ஸ்: அற்புதம். ஆக, வர்த்தக செயல்களில் சிறப்பாக செயல்படும் சந்தை காரணிகள் இங்கே தோற்பதாக சொல்கிறீர்களா?

ஷிவ்:சந்தை எப்போதுமே செயல்திறன் மிக்கதல்ல. ஆனால் அவை செயல்படும் போது மற்ற எவற்றையும் விட பொது நலன் அளிக்கும். சந்தை புதுமைக்கு வழிவகுக்கிறது. குறைந்தபட்ச தலையீட்டில் முக்கிய பிரச்சனைகளை தீர்க்கிறது. குறைந்த விலையிலான மூக்கு கண்ணாடி, சானிடரி நாப்கின்கள், புத்தகங்கள் ஆகியவை சந்தையால் எப்படி பொருட்களை உருவாக்கி, தேவையை உருவாக்கி, அதை சிக்கல் இல்லாமல் நிறைவேற்றும்.

சந்தை உருவாக்கும் ஆரோக்கியமான போட்டி, வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை உருவாக்கும். எல்லா பிரச்சனைகளுக்கும் சமமாக சந்தை செயல்படுவதில்லை என்றாலும், தீர்வுகளை உருவாக்கும் போது சந்தை காரணிகளை நினைவில் கொள்வது முக்கியம். அவற்றை அலட்சியம் செய்வது என்பது செயல்திறனற்ற தன்மையை புகுத்தி வளங்கள் மற்றும் முயற்சியை பாழடித்து விடும். சந்தை கொள்கைகள் மற்றும் காரணிகள், சமுக நலன் சார்ந்த கருத்தாக்கங்களுடன் வெற்றிகரமாக கலந்திருக்கும் இடங்களில் எல்லாம் பலன் சிறப்பாக உள்ளது. அமுல் சரியான உதாரணம். மேலும் பல உள்ளன.

யு.ஸ்: ஒரு இறுதி கேள்வி. சிக்கலான பிரச்சனைகளுக்கான நீடித்த தீர்வை உருவாக்கத் தேவையான ஒரு நடவடிக்கை என்ன?

ஷிவ்: பங்குதாரர்களிடையேயான கூட்டு முயற்சி. ஒத்துப்போகும் திறன்களை ஒன்றாக கொண்டுவருவது மற்றும் பங்கேற்புதன்மையை புகுத்தி உரிமை கொள்ள வைப்பது தான் கூட்டு முயற்சியாகும். இப்படி உயர்தரமான கூட்டு முயற்சியை உருவாக்குவது அரிதானது மற்றும் காலம் தேவைப்படக்கூடியது.

ஒட்டு மொத்த முயற்சி பற்றி கவலைப்படாமல் பல்வேறு அளவிலான கூட்டு முயற்சி கொண்ட தீர்வுகளுக்காக முயற்சிக்கலாம். ஆனால் தீர்வு வேகமாக இருக்குமேத்தவிர நீடித்ததாக இருக்காது.

இதை உணர்த்த நூற்றுக்கணக்கான உதாரணங்கள் அளிக்க முடியும். எல்லோருக்கும் புரியக்கூடிய ஒரு உதாரணம் சொல்கிறேன். சிக்கலான பிரச்சனையை அணுகும் போது, கூட்டு முயற்சியின் மூலம் பலன் பெற்றதற்கான அழகான உதாரணம் ஆதார் திட்டமாகும். இந்த திட்டத்தின் பின்னே உள்ள யுனிக் ஐடிண்டிபிகேஷன் அத்தாரட்டி ஆப் இந்தியாவின் செயல் அதிகாரியாக இருந்த ஆர்.எஸ்.சர்மா, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தனது கற்றலை கொண்டு சென்றார். கால் டிராப் முதல் பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டம் வரை சர்ச்சைக்குறிய பல பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பங்குதாரர்களை பங்கேற்க வைத்து தீர்வு காண்பதில் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது.

யு.ஸ்; இது அருமை, உங்கள் நேரத்திற்கு நன்றி!

ஷிவ்குமார் ஒரு சமூக தொழில்முனைவோர், மக்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்கி வருபவர். சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதார துறைகளில் அனுபவம் உள்ளவர். கேட்டலிஸ்ட் குழுமத்தின் நிறுவனரான இவர், நாடுகள் மற்றும் அமைப்புகள் நிதி ஆராரத்தை திரட்டி அவற்றை நல்ல முறையையில் பயன்படுத்த வழிகாட்டி வருபவர். பல்வேறு அரசு சாரா அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தேசிய அளவிலான செயல் குழுக்கள், தொழில்நுட்ப ஆய்வு குழுக்களில் அங்கம் வகிக்கிறார். துரிதமாக செயல்பட வேண்டும் ஆனால் பலன்களுக்கு பொறுமை காக்க வேண்டும் என்பது இவரது நம்பிக்கையாக இருக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர்: டி.என்.ஹரி | தமிழில்; சைபர்சிம்மன் 

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக