பதிப்புகளில்

தொழில்நுட்ப நிபுணர் மற்றும் தடகள வீராங்கனை மஞ்சுளா ஸ்ரீதர் துவக்கிய 'ஆர்க்பைட்'

Vishnu Ram
13th Oct 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

மஞ்சுளா ஸ்ரீதர், ஒரு பெண் தொழில்நுட்ப நிபுணர், தொழில் முனைவர், சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனை, இவை அவரின் மணிமகுடத்தில் உள்ள சில வைரக்கற்கள் எனலாம். கர்நாடக மாநிலத்தில் உட்பகுதிகளில் வளர்த்தபோதே மஞ்சுளா ஒரு பொறுப்பான நிலைக்கு உயர்வதற்கான முழுமையான மனப்பான்மையை வளர்த்துக்கொண்டார். படிப்பில் சிறந்து விளங்கிய மஞ்சுளா, மைசூர் பல்கலைகழகத்திலிருந்து மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்று தர வரிசையில் பல்கலைகழகத்திலேயே 5 வது இடம் பிடித்தார். பொறியியல் பட்டம் பெற்ற பின் பெங்களுரில் தனது முதல் பணியினை ஜெர்மன் நிறுவனமான, போஷ் டெலிகாம் (Bosh Telecom) மில் தொடங்கினார்.

image


உயர் நிலை தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட அவர், படிப்படியாக முன்னேறி அமெரிக்காவில் உள்ள லுசென்ட்/பெல் லாப்ஸ் (Lucent/Bell Labs) நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அவரின் ஆய்வுகள் பல காப்புரிமைகளை தாக்கல் செய்ய காரணமாக அமைந்தது. அவர், டிஎம்டிஎஸ் (DMTS ) எனும் தொழில்நுட்பத்தின் சிறப்புமிகு உறுப்பினரானார். ( Distinguished member of technology) மேலும் அவர், லுசென்ட் (Lucent) நிறுவன ஆதரவில் ஐ ஐ டி சிகாகோவில் செக்யூரிட்டயை முதன்மை பாடமாக கொண்டு எம்.எஸ் முடித்தார். "இத்தருணத்தில் தான் தொழில்முனைவு எனும் வண்டு என்னை தாக்கியது. நான் இந்தியாவிற்கு திரும்ப வர தீர்மானித்தேன், பின் ஓஜஸ்(Aujas) எனுன் நிறுவனத்தினை தொடங்க இணையாக இருந்தேன்". இது மஞ்சுளாவிற்கு ஒரு கடுமையான கற்றுக்கொள்ளும் அனுபவமாக அமைந்தது. இந்த நிறுவனம் தொழில்முனைவு பற்றிய அனுபவத்தையும் நுண்ணறிவையும் தந்தது என்கிறார். "மூன்றாண்டுகளுக்கு மேல் ஓஜஸ் நிறுவனத்தை வளர்த்த பிறகு, சேவை நிறுவனமாக இருந்த ஓஜஸ் பற்பல கலாசார காரணங்களால் மாற ஆரம்பித்ததால் நான் அங்கிருந்து விலகினேன்" என்கிறார் மஞ்சுளா.

ஒரு இடைவேளைக்கு பிறகு அவர் மீண்டும் சிறிது காலம் கார்பரேட் உலகில் நுழைந்தார். இப்பொழுது கட்டண பாதுகாப்பு நிறுவனமாக உள்ள ஆர்காட் நிறுவனத்தில் சேர்ந்தார். மேலும் அவர், தீவிரமான பயிற்சியினை மேற்கொண்டு பொருதிறனுள்ள தடகள விளையாட்டு வீராங்கனையானார். அவர் எப்படியோ சமாளித்து பாதி ஐயன்மேன் ( half Ironman ) ஆனார் ! இதோ அவர் டெட்எக்ஸ் (TedX) ல் பேசியது.


இது அவருக்கு மீண்டும் நம்பிக்கை பெற உதவியதுடன், அடுத்த சவாலுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ளவும் உதவியது. "நான், ஐயன் சென்ஸ் (ironsense) எனும் தகவல் பத்திரப்படுத்தும் மற்றுமொரு உயர்-தொழில்நுட்ப திட்டத்தை துவக்கினேன். அது, குறியீட்டுகளை வெளிப்படுத்தாமல் பகிர்வு செய்யும் என்கிறார் மஞ்சுளா. அவர் சிலிகான் வேலிக்கு சென்று பல மாதிரிகளை படித்தார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான முதலீடுகள் கிடைப்பது கடினம் என்பதை உணர்ந்தார்.

அப்பொழுது தான் "ஆர்க்பைட்" (Argbyte ) எனும் யோசனை தோன்றியது. இது, முந்தயதற்கு மாற்றாக வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக அவர்களது பிரச்சனைகளுக்கு உதவும் தளம். சைபர் செக்யூரிட்டியை மேலும் விரிவடைய செய்வது பற்றி தான் மஞ்சுளா நம்மிடையே முன் வைக்கிறார். ஒவ்வொருவரது ஆன்லைன் செக்யூரிட்டி பிரச்சனைகளுக்கு தீர்வு காண "ஆர்க்பைட்" உதவுகிறது. இந்நிறுவனம், தனது கருத்து கோட்பாட்டினை இவ்வாறாக விளக்குகிறது :

"ஆன்லைனில் தொல்லை கொடுப்பது மிகவும் வேதனைக்குரிய செயலாக இருக்கும் போது, யார் அந்த குற்றம் செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது பாதிக்கப்பட்டவருக்கு மேலும் அதிர்ச்சி வலியினை ஏற்படுத்துகிறது. சில சமயம் சித்தப்ரம்மை பிடித்தது போல இருக்கும், ஏனெனில் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. சட்ட அமலாக்க பிரிவிடம் முறையிடுவதே இதற்கான முதல் படியாக இருப்பினும், பலர் அவ்வாறு விரும்பமாட்டார்கள். மேலும் சட்ட அமலாக்க அலுவலர்களின் பணி மிகுதி காரணமாக இது போன்ற சிறு பிரச்சனைகளில் அக்கறை செலுத்தமாட்டார்கள். இந்த தருணத்தில் தான் நாங்கள் உதவுகிறோம். நாங்கள் சரியான முறையில் பிரச்சனையை கூர்ந்து ஆராய்ந்து , பயனுள்ள தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பிரச்சனையை நிவர்த்தி செய்யும் வழிமுறை நுட்பத்தினை அளிப்போம். சிலரின் பிரச்சனைகளுக்கு இது தான் வழி என்று நாங்கள் முடிவு செய்தால், சட்ட அமலாக்க அலுவலர்களுடனும் சேர்ந்து பணி செய்வோம்".

ஒரு மாதத்திற்கு முன்பு தான், மஞ்சுளா பீட்டா வடிவத்தில் இத்தளத்தை துவக்கினார். "ஆன்லைனில் தொல்லை என்பது பலருக்கு வழக்கமானதாக இருந்தாலும், ஆனால் சில பிரச்சனை தீவிரமாக வளர்ந்து விடுகிறது. தகாத இ -மெயில்கள், கடத்தப்பட்ட அக்கௌன்ட் கள் போன்ற பிரச்சனைகளை அணுகுவது கடினமாக இருக்கும். டிஜிட்டல் இந்தியா (Digital India) பிரச்சார திட்டத்தின் மூலமாக ஒட்டுமொத்த அனைவரும் ஆன்லைனில் வந்துவிடுவார்கள். அவர்கள், குற்றம் புரிபவர்கலாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்கலாகவோ பிரச்சனைகளின் சிக்குவர். சட்ட அமலாக்க பிரிவினர் அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள். பெரும்பாலோர் பாதுகாப்பு முறைகளை செயல்படுத்த முனைவார்கள்", என அவர் கூறுகிறார். மேலும் ஏழை கல்லூரி மாணவர்களுக்கு இலவச/ சார்பு-போனோ (pro-bono) ஆலோசனை மற்றும் வழிகளுக்கான அனுகுதல் முறையான அரவிந்த் கண் மருத்துவ மையம் மாதிரியை செயல்படுத்த வேண்டும் என்று மஞ்சுளா விரும்புகிறார்.

"ஆர்க்பைட்" என்பது ஒரு ஒன் -உமன் ஆர்மி, (One-Woman army) சில ஆலோசகர்கள் மஞ்சுளாவிற்கு உதவி செய்து வருகின்றனர். "நான் ஒரு சுய தொழில்முனைவர் என்பதால் இந்த நிறுவனத்தை சிறிய அளவிலேயே வைத்திருக்கிறேன். மேலும் என்னுடன் கடந்த காலங்களில் பொதுத்துறையில் பெரும் பணிகளை செய்து முடித்த உறுதியான ஆலோசகர்கள் உதவியாக இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு பல உன்னத மாதிரிகளை அடைய உதவி செய்கிறார்கள். எண்ணிக்கைகள் பெருக இன்னும் பலரை நான் சேர்த்துக்கொள்வேன்", என்கிறார் அவர். ஆலோசனை வழங்குதலே தற்போதைய வருவாய் மாதிரியாகும், ஆனால் வெகு விரைவில் சாஸ் (SaaS) எனும் மென்பொருள் சேவையை (Software as a Service) நோக்கி நகர்ந்து எங்கள் செயல்பாட்டினை ஆன்லைனில் கொண்டு வருவோம் என்கிறார்.

இணையதள முகவரி: ArgByte

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags