ஃபேஸ்புக்கில் 275 மில்லியன் போலிக் கணக்குகள் கண்டுபிடிப்பு...

ஃபேஸ்புக்கில் போலிக் கணக்குகள் என்றால் என்ன தெரியுமா?

14th Feb 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ஃபேஸ்புக் சேவையில், 2.50 பில்லியன் மொத்த மாதாந்திர தீவிரப் பயனாளிகள் எண்ணிக்கையில் 275 மில்லியன் போலி கணக்குகள் இருப்பதாக ஃபேஸ்புக் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்

"2019 டிசம்பர் 31ம் தேதி வாக்கில், 2.50 பில்லியன் தீவிர மாதாந்திர பயனாளிகளைப் பெற்றிருந்தோம். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 8 சதவீதம் அதிகம். 2018 ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் வளர்ச்சிக்கான முக்கியப் பகுதிகளாக விளங்கின” என அறிக்கை தெரிவிக்கிறது.

"2019 நான்காவது காலாண்டில், உலக அளவிலான தீவிர மாதாந்திர பயனாளிகளில் 11 சதவீதம் போலிக் கணக்குகளாக இருக்கலாம் என கருதுகிறோம். மற்ற வளர்ந்த சந்தைகளை விட, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாம் போன்ற வளரும் சந்தைகளில் இது அதிகமாக உள்ளது,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான கணக்கு தவிர, ஒரு பயனாளி வைத்திருக்கும் கூடுதல் கணக்கு போலி கணக்காக கருதப்படுகிறது.

“போலிக் கணக்குகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. ஒன்று பயனாளிகள் தவறாக வகைப்படுத்தியவை. இந்த கணக்குகள் வர்த்தகம், அமைப்புகள் அல்லது செல்லப்பிராணிகளுக்காக பயனாளிகளால் உருவாக்கப்பட்டவை. இரண்டாவது வகை மீறல் கணக்குகளாகும். ஸ்பேமிங் உள்ளிட்ட ஃபேஸ்புக் நெறிமுறைகளை மீறிய செயல்களுக்காக பயன்படுத்தப்படும் கணக்குகள் இவை,” என ஃபேஸ்புக் அறிக்கை தெரிவிக்கிறது.

"போலி மற்றும் தவறான கணக்குகள் தொடர்பான கணிப்பு, நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட குறுகிய அளவிலான ஆய்வில் தெரிய வந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போலி கணக்குகளைக் கணக்கிடுவது கடினம் என்றும், கணிப்பை விட அதிக அளவில் இவை இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டில் நான்காவது காலாண்டில், உலக அளவிலான மாதாந்திர தீவிர பயனாளிகளில் போலி கணக்குகள் 5 சதவீதமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 டிசம்பர் மாதத்தில், 1.52 பில்லியனாக இருந்த தினசரி தீவிரப் பயனாளிகள் எண்ணிக்கை 2-19 டிசம்பரில் 1.66 பில்லியனாக அதிகரித்துள்ளது. இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.


செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India