பதிப்புகளில்

50 ஆயிரம் ஏழைக் குழந்தைகளின் வாழ்வில் கால்பந்து விளையாட்டு மூலம் மாற்றத்தை ஏற்படுத்திய பிடி மாஸ்டர்!

நாடு முழுவதுமுள்ள நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு விளையாட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும் தனிப்பட்ட வளர்ச்சித் திட்டங்களையும் வழங்குகிறது 'ஸ்லம் சாக்கர்' அமைப்பு. 

25th Dec 2017
Add to
Shares
125
Comments
Share This
Add to
Shares
125
Comments
Share

2015-ம் ஆண்டு ஆம்ஸ்டெர்டாமில் நடைபெற்ற ஹோம்லெஸ் உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணியின் தலைவராக இருந்தவர் ரீனா பஞ்சல். அவரது ஆர்வமும் திறனும் சிறந்த பெண் வீரருக்கான விருதைப் பெற்றுத்தந்தது. ஆனால் விருது பெறுவதற்கு சில காலம் முன்பு வீட்டை விட்டு வெளியேறி கால்பந்து விளையாட்டில் இந்திய அணி சார்பில் விளையாடுவது குறித்து கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத நிலையில் இருந்தார்.

ரீனா ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இங்கு பெண்கள் கால்பந்து விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இந்த விளையாட்டின் மீதான தனது விருப்பத்தை பல காலம் வெளிப்படுத்தாமல் இருந்தார்.

image


ஆனால் வீட்டிலும் வெளியிலும் அவருக்கு சாதகமான சூழல் இல்லாதபோதும் அவர் தொடர்ந்து தனது ஆர்வத்தில் ஈடுபாட்டுடன் இருந்தார். 2014-ம் ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். அதன் பிறகு 2015 ஹோம்லெஸ் உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் விளையாடினார்.

ரீனா போன்ற குழந்தைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வர பாடுபடும் ’ஸ்லம் சாக்கர்’ (Slum Soccer) என்கிற நாக்பூரைச் சேர்ந்த நிறுவனத்தால்தான் இது சாத்தியமானது.

ஸ்லம் சாக்கர்

ஸ்லம் சாக்கர் 2001-ம் ஆண்டு நாக்பூரில் ஓய்வுபெற்ற விளையாட்டு ஆசிரியரான விஜய் பார்சே என்பவரால் நிறுவப்பட்டது. அருகாமையிலிருந்த குடிசைப்பகுதியைச் சேர்ந்த சில குழந்தைகளுக்கு கால்பந்து விளையாட பயிற்சியளிக்கத் துவங்கியபோதுதான் இத்தகைய முயற்சியில் ஈடுபடவேண்டும் என்கிற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது.

image


இந்தக் குழந்தைகள் கால்பந்து விளையாட்டின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஒன்றுகூடுவதை கவனித்தார். அருகிலிருந்த மைதானத்தில் சுமார் 12 குழந்தைகளுக்கு பயிற்சியளித்தார். ஒரு புதிய விளையாட்டை கற்றுக்கொள்ள அவர்கள் எவ்வாறு ஒன்று கூடினார்கள் என்பதை கவனித்தார்.

அந்தக் குழந்தைகள் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியைக் கண்டறிந்ததில் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்கள் என்பதைக் கண்டார். அப்போதுதான் குடிசைப்பகுதியில் வாழும் குழந்தைகளின் வாழ்வில் கால்பந்து விளையாட்டைக் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை உணர்ந்தார்.

ஆரம்பத்தில் வழக்குமொழியில் சோபட்பட்டி கால்பந்து என்று அழைக்கப்பட்ட இந்த விளையாட்டு நலிந்த மற்றும் ஏழ்மையான பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் போதைப்பழக்கம், சமூக விரோத நடவடிக்கைகள், ஏழ்மை நிலை, தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டு உருவானது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 170 மில்லியன் மக்கள் வசிக்க இடமின்றி தெருக்களில் உள்ளனர். இந்த எண்ணிக்கையானது உலகம் முழுவதுமுள்ள குடிசை வாழ் மக்கள்தொகையின் மொத்த எண்ணிக்கையில் 17 சதவீதமாகும்.

image


மக்களின் வீடற்ற நிலையை மேம்படுத்த இந்திய அரசாங்கம் பெரிதாக ஏதும் செய்யவில்லை. இங்குதான் ஸ்லம் சாக்கர் மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. தங்குமிடமற்ற இந்தியர்களை அணுகி கால்பந்து விளையாட்டை சமூக மேம்பாட்டிற்கான சாதனமாக பயன்படுத்துகிறது.

”சமூக மாற்றத்திற்கு விளையாட்டை ஒரு சாதனமாக பயன்படுத்துகிறோம்,” என்றார் விஜயின் மகன் அபிஜீத் பார்சே. இவர் ஸ்லம் சாக்கரின் தற்போதைய சிஇஓ. 2007-ம் ஆண்டு தனது அப்பாவிடமிருந்து இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இன்று ஸ்லம் சாக்கர் ஏழு திட்டங்களைக் கொண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக நாட்டின் ஆறு மாநிலங்களில் கிட்டத்தட்ட 70,000 குழந்தைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வார இறுதி நாட்களில் ஒரு சாதாரண பயிற்சியாக துவங்கப்பட்டது இன்று ஒரு நிறுவனமாக உருவாகி கால்பந்து பயிற்சி முகாம்கள், கல்வி மற்றும் சுகாதார பயிற்சி பட்டறைகள் என முழுவீச்சில் செயல்படுகிறது.

நாட்டின் 63 மாவட்டங்களைச் சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் என அனைவரிடமும் சமூக வளர்ச்சிக்கான திட்டங்கள் ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சவால்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள்

ஸ்லம் சாக்கர் உருவாக்குவதில் சந்தித்த சவால்கள் குறித்து அபிஜீத் குறிப்பிடுகையில்,

மக்கள் விளையாட்டை பார்க்கும் கண்ணோட்டம்தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. குழந்தைகள் மைதானத்தில் விளையாட்டிற்கு நேரம் செலவிடுவதைக் காட்டிலும் வகுப்பறையில் படிப்பதற்கே நேரம் செலவிடவேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருந்தது.

”ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஸ்பான்சர்கள் என அனைவருக்குமே இந்த கண்ணோட்டம் இருந்தது, ஆனால் விளையாட்டு குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய நேர்மறை தாக்கத்தை நாங்கள் நிரூபித்தோம். எங்களுடன் பணியாற்றிய பலர் இன்று ப்ரோக்ராம் மேனேஜர்களாக இணைந்திருந்துள்ளனர்,” என்றார்.

பயிற்சியாளர்களுக்கான பயிற்சி திட்டம், வாழ்வாதார பயிற்சி திட்டம், சுகாதார் முகாம்கள், இளைஞர்களுக்கான தலைமைப்பண்பு திட்டம் போன்றவை நிறுவனத்தின் ஏழு திட்டங்களில் அடங்கும்.

தனிப்பட்ட அளவில் மாற்றம் இருக்கவேண்டும் என்பதில் ஸ்லம் சாசர் நம்பிக்கை கொண்டுள்ளதால் பயிற்சியாளராவதற்கு ஆலோசனை வழங்கும் திட்டத்தில் முன்னாள் பங்கேற்பாளர்களே பயிற்சியளிக்கின்றனர். இந்த பயிற்சியுடன் இளைஞர்கள் தலைமைத்துவத்துடன் செயல்படுவதற்கான திட்டமும் உள்ளது. இதில் தலைமைத்துவப் பண்புகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்தவர்களைக் கண்டறிந்து பல்வேறு திறன்களில் பயிற்சியளிக்கிறது. இதனால் அவர்கள் திறன்கள் மேம்படுத்தப்பட்டு நிறுவனத்தில் உயர் பதவிகள் வகிக்கமுடியும்.

”வாழ்க்கைத் திறன்கள், குழந்தைகள் உரிமைகள், சுகாதாரம் என அனைத்துப் பகுதிகளிலும் இந்த திட்டங்கள் கவனம் செலுத்துகிறது. இதை கால்பந்து வாயிலாக வேடிக்கையாக செயல்படுத்தமுடிகிறது. குறிப்பாக பெண்களையும் ஆண்களையும் ஒன்றாக விளையாடவைக்கிறேன்,” என்றார் அபிஜீத்.
image


வாழ்வாதார திட்டங்கள் விளையாடுவோரின் வேலைவாய்ப்பு பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பதில் கவனம் செலுத்துகிறது. அருகாமையிலுள்ள தொழிற்சாலை அல்லது நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளை கவனித்து அந்த குறிப்பிட்ட பணிக்குத் தகுந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கேற்ற திறன்களில் பயிற்சியளிக்கப்படுகிறது.

Edukick என்கிற ப்ராஜெக்டின் மூலம் ஸ்லம் சாக்கர் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. இதில் சமூகத்தின் நலிந்த பிரிவைச் சேர்ந்த குழச்தைகளுக்கு ஆரம்பக் கல்வி அளிப்பதை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும் ஸ்லம் சாக்கர் மகளிர் கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

பெண்கள் விளையாட்டில் பங்கேற்பதை உறுதிசெய்யும் விதத்தில் ’மகளிர் கால்பந்து மேம்பாடு’ ப்ராஜெக்ட் தற்போது மூன்று மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாக்கம்

பல்வேறு திட்டங்கள் வாயிலாக குடிசைப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பல போட்டிகளில் பங்கேற்பதை உறுதிசெய்கிறது இவ்வமைப்பு. ’நேஷனல் இன்க்ளூஷன் கப்’ போட்டியில் 400 பேர் பங்கேற்றனர்.

நாடு முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 1,200 குழந்தைகள் நாக்பூரில் நடைபெற்ற தி சோபட்பட்டி செண்ட்ரல் டோர்னமெண்ட்டிலும், கேம்ஸா சாக்கர் லீக்கில் 420 குழந்தைகள் பங்கேற்றனர்.

ஹோம்லெஸ் உலகக் கோப்பையில் இந்தியா சார்பில் விளையாட ஸ்லம் சாக்கர் 16 குழந்தைகளுக்கு பயிற்சியளித்துள்ளது.

இன்று ஒரு ஆண்டிற்கு குறைந்தது 500 குழந்தைகளை சென்றடைகிறது ஸ்லம் சாக்கர். நகர்புற குடிசைப்பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை அதன் திட்டங்களில் சேர்த்துக்கொண்டுள்ளது. இத்திட்டங்கள் மூலம் உடற்பயிற்சி, ஊட்டச்சத்து, கல்வி, கால்பந்து விளையாட்டிற்கான வழிகாட்டல் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் 700 குழந்தைகளையும் கூடுதலாக 50 நகரங்களையும் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது ஸ்லம் சாக்கர். அடுத்து வரும் ஆண்டுகளில் பல பயிற்சியாளர்களையும் ஆலோசகர்களையும் உருவாக்க விரும்புகின்றனர்.

ஆங்கில கட்டுரையாளர் : ஹேமா வைஷ்ணவி

Add to
Shares
125
Comments
Share This
Add to
Shares
125
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக