பதிப்புகளில்

ஏஞ்சல் வரி சிக்கலுக்கு தீர்வு காண சுற்றறிக்கை; அமிதாப் காந்த் உறுதி

15th Feb 2018
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

ஏஞ்சல் முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி; நிட்டி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் காந்த், தேவதை வரி காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வை அரசு உருவாக்கி கொண்டிருப்பதாக கூறுகிறார்.

மிகவும் விவாதிக்கப்பட்ட பிரச்சனையான தேவதை வரி (Angel Tax) பிரச்சனைக்கு பட்ஜெட் 2018 ஒரு தீர்வு காணும் என ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. எனினும், இது குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில், தில்லியில் நடந்த டெஸ்ட் வென்சர்சின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய, நிட்டி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் காந்த், தேவதை வரி பிரச்சனைக்கான தீர்வை அரசு கண்டறிந்திருப்பதாகவும், விரைவில் இதற்கான சுற்றறிக்கை வெளியாகும் என்றும் தொழில்முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்தார்.

தேவதை வரி (Angel tax ) இந்திய வருமான வரிச்சட்டம் 1961, பிரிவு 56 (2) (viib) – ஐ குறிக்கிறது. இதன்படி, வருமானவரித்துறை அதிகாரிகள், துவக்க நிலை ஸ்டார்ட் அப் முயற்சிக்கு கிடைக்கக் கூடியது என கருதப்படக்கூடியதை விட அதிக மதிப்பில், இந்திய தேவதை முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடு பெறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் வரி கோருகின்றனர்.

2018, பிப்ரவரி 6 ம் தேதி, மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை, ஒரு சுற்றறிக்கை மூலம் நிலுவையில் உள்ள தொகையை பெற நெருக்கடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதோடு, நிலுவையில் உள்ள முறையீடுகளை மார்ச் 31 ம் தேதிக்குள் பைசல் செய்யுமாறும் கேட்டுக்கொண்டது.

தில்லியில் நடைபெற்ற லெட்ஸ் இகினேட் 2018 ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் மாநாட்டில் தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இதர ஸ்டார்ட் அப் சூழல் தொடர்புடையவர்கள் மத்தியில் உரையாற்றிய நிட்டி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் காந்த், இந்தியாவில் ஸ்டார்ட் அப் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, தொழில்முனைவு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் அரசு மற்றும் நிட்டி ஆயோக் அமைப்பு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். தேவதை வரி பிரச்சனைக்கு தீர்வு காண் அரசு வருமானவரித்துறையுடன் விரிவான ஆலோசானையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

image


“தேவதை வரி ஒரு பிரச்சனையாக இருக்கிறது. தேவதை முதலீட்டாளர்கள் யாருக்கும் தொல்லை தர வேண்டாம் என அதிகாரிகளுக்கு வருமான வரித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்குத் தீர்வு காண துறையுடன் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

தேவதை முதலீட்டாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளால் அணுகப்பட்டாமல் இருக்கும் வகையிலான சுற்றறிக்கையை அரசு விரைவில் வெளியிடும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

“ஒரு தீர்வை கண்டறிந்துவிட்டோம் என நினைக்கிறேன். அதற்கு மிக அருகே வந்துவிட்டோம். தேவதை முதலீட்டாளர்கள் வருமானவரித்துறை அதிகாரிகளால் அணுகப்பட மாட்டார்கள் என சொல்லக்கூடிய சுற்றறிக்கை விரைவில்வெளியாகும், இதற்கான செயல்முறை வகுக்கப்பட்டு வருகிறது. உங்கள் அனைவருக்கும் ஆதரவு அளிக்கப்படும், இந்தியாவில் தேவைதை முதலீடு இயக்கம் வளர்ந்து செழிக்க வழி செய்யப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஸ்டார்ட் அப் அல்லது நிறுவனங்கள் மீது வெளிப்புற முதலீட்டாளர்களின் முதலீடுகள் மீது விதிக்கப்படும் 30-9 சதவீத வரி தேவதை வரி என குறிப்பிடப்படுகிறது. ஆனால் முழுத்தொகையும் வரிக்கு உள்ளாவதில்லை. வருமானவரித்துறை சட்டத்தால் இதர வருமானம் என வகைப்படுத்தப்படும், ஸ்டார்ட் அப்பின் நியாயமான மதிப்பை விட அதிகமான தொகைக்கே இது பொருந்தும். ஆனால் நல்லெண்ணம் போன்ற கண்ணுக்குத்தெரியாத அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் ரொக்க வரவை மட்டுமே கொண்டு ஸ்டார்ட் அப்கள் மதிப்பு கணிக்கப்படும் போது இது பிரச்சனையாகிறது. இது நியாயமான மதிப்பு என்பதை சிக்கலாக்கலாம். அதிகாரிகள் அதிக மதிப்பு என கருதி அதிக வரி வசூலிக்கும் நிலை ஏற்படலாம்.

2012 ம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகரிஜி பட்ஜெட் தாக்கல் செய்தது முதல் இந்த பிரச்சனை இருக்கிறது. வரி விதிப்பே பல முதலீட்டாளர்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இதன் காரணமாக பல தேவதை முதலீட்டாளர்கள் ஸ்டார்ட் அப் கனவுகளுக்கு நிதி அளிக்க தயங்குகின்றனர்.

தேவதை முதலீடு 2016-ல் 901இல் இருந்து 2017-ல் 435 ஆக குறைந்துவிட்டது என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 374 மில்லியன் டாலரில் இருந்து 245 மில்லியன் டாலராக குறைந்துள்ளதுல் ஆனால் நிட்டி ஆயோக் சி.இ.ஓ அளித்துள்ள உறுதிமொழி இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆங்கில கட்டுரையாளர்: லிப்சா மன்னன்; தமிழில் சைபர்சிம்மன் 

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags