பதிப்புகளில்

உள்ளூரோ! வெளியூரோ! இடமாற்றத்திற்கான சேவையை திறம்பட வழங்கும் 'பிக்கோல்'

YS TEAM TAMIL
28th Dec 2015
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

தீபு சந்திரன் ஏப்ரல் 2015ம் ஆண்டு 'பிக்கோல்' என்ற நிறுவனத்தை துவங்கினார். இது இடமாற்றம் செய்ய உதவும் ஒரு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பெங்களூரை மையப்படுத்தி இயங்கக்கூடிய ஒன்றாகும். இந்நிறுவனம் தொழில்நுட்பம், பகுப்பாய்வு, செயல்பாட்டு பின்புலத்தை உள்ளடக்கிய இடமாற்றச் சேவையை வழங்குகிறது.

image


தீபு ஐஐஎம் பெங்களூரில் படித்தவர்.

“தளவாடங்கள் மற்றும் வீட்டு சேவைகளில் மிகப்பெரிய ஆய்வை செய்ததன் மூலம், வாடிக்கையாளர்கள் இடமாற்றத்தின் போது என்னவெல்லாம் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை கண்டறிந்தோம். அதன் பிறகு உருவானது தான் பிக்கோல் நிறுவனம். பெரும்பாலான பிரச்சினைகளுக்கு முக்கியகாரணம் பொறுப்புகூறல், நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை. இதை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்களின் தனித்துவமான கவனிப்பின் மூலம் சரிசெய்தோம்” என்கிறார்.

இவர்கள் தரப்படுத்தப்பட்ட சேவை அனுபவத்தை பல்வேறு வகையான கட்டணத்தில் வழங்குகிறார்கள். தங்களின் அல்காரிதத்தை பயன்படுத்தி எவ்வளவு பொருட்கள் இருக்கிறது என்பதை பட்டியலிட்டு அதற்கு ஏற்ற லாரி அளவு, பேக்கிங் செய்ய தேவைப்படுபவை மற்றும் கட்டணத்தை கணக்கிட்டுவிடுகிறார்கள். வாடிக்கையாளர்கள் புக் செய்த உடன் இடமாற்றம் செய்யக்கூடிய சரியான குழுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு விடுகிறது என்பதால் வாடிக்கையாளர்கள் எந்த பரபரப்புக்கும் ஆளாகாமல் நிம்மதியாக இருக்கலாம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிக்கோல் கைபேசி செயலி மூலமே ஆர்டர் செய்கிறார்கள். இந்த செயலி கூகிள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.

இப்போதைக்கு 1200 திறமையான நகர்த்திகளும், 300 லாரிகளும் இவர்களிடம் இணைந்திருக்கிறார்கள். மேம்பட்ட தரத்திலான சேவையை வழங்குவதற்காக தங்களிடம் இணைப்பு பெற்ற விற்பனையாளர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள். இவர்கள் பல்வேறு சோதனைகளுக்கு பிறகே ஒருவரை தங்களோடு இணைத்துக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சியின் போது செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என தெளிவாக சொல்லித் தந்து விடுகிறார்கள். உதாரணமாக பேக்கிங்கிற்கு என்ன மாதிரியான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பன போன்றவற்றை தெளிவாக விளக்கிவிடுகிறார்கள்.

“ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தும்போது, எங்களிடம் இருக்கும் தகவல் அமைப்பு மூலம் எந்ததெந்த இடங்களுக்கு பொருட்கள் செல்கிறது என்பதை கவனித்து அதற்கேற்ற சமகால விலைப்பட்டியலை கணிக்கிறோம். இதன்மூலம் என்னென்ன ஊர்திகளை பயன்படுத்த வேண்டும் என்று உறுதிபடுத்திக்கொள்கிறோம். இதன்மூலம் திட்டமற்ற நடைமுறைகளை தவிர்க்கிறோம்” என்கிறார் தீபு.

தொழில் பின்னணி

தீபுவுக்கு இது இரண்டாவது தொழில் முயற்சி. 2010ம் ஆண்டு இன்னோமந்த்ரா என்ற நிறுவனத்தில் இணை நிறுவனராக பணியாற்றினார். இது ஒரு ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் வெற்றிகரமாக இயங்கியதை தொடர்ந்து பிக்கோல் நிறுவனத்தை துவங்கினார்.

இன்னோமந்த்ரா நிறுவனம் மூலமாக கூகிள், நெட்எப், ஏபிபி மற்றும் லார்சன் & டர்போ நிறுவனங்களோடு பணியாற்றி இருக்கிறார். லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்தில் தன் பணியை துவங்கிய தீபு, அங்கு புதுப்பொருட்களை மேலாண்மை செய்யக்கூடிய உத்திகளை உருவாக்கும் பொறுப்பில் இருந்திருக்கிறார். 2008ம் ஆண்டு கர்நாடக அரசும், கன்ஃபெடரேசன் ஆஃப் இண்டியன் இண்டர்ஸ்ட்ரி (CII)யும் இணைந்து இந்தியா இன்னொவேஷன் விருதை இவருக்கு வழங்கினர்.

குழு உருவாக்கம்

ஜெயராம், சிபி மேத்யூ மற்றும் சூரஜ் வலிம்ப் ஆகியோர் இணை நிறுவனர்களாக இருக்கிறார்கள். ஜெயராம் ஐஐஎம் லக்னோவில் பயின்றவர். இதற்கு முன்பு, தான் உருவாக்கிய நிறுவனத்தில் பயணத்திற்கு உதவக்கூடிய கைபேசி செயலியை உருவாக்கியவர். இங்கு நிறுவன கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை மேம்படுத்தலை கையாள்கிறார்.

சிபி முன்பு என்ஐடி கேலிகட்டில் பயின்றவர். எச்பி நிறுவனத்தில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியவர். இங்கு தொழில்நுட்பக் குழுவை கையாள்கிறார். சூரஜ் வேலிங்கர் மேலாண்மை கல்வியகத்தில் மேலாண்மை பயின்றவர். ஹிடாச்சி மற்றும் டாடா க்ரோமாவில் பணியாற்றியவர். செயல்பாட்டுத் தலைவராக இருக்கிறார். இந்நிறுவனத்தில் பத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் உட்பட 26 பேர் பணியாற்றுகிறார்கள். இந்த குழுவில் பல்வேறு இரண்டாவது முறை தொழில்முனைவோர் இடம் பெற்றிருக்கிறார்கள். சித்தார்த் குலடி, ஸ்ரீஜு ஸ்ரீகுமார், ரோஹன், ஆனந்த் ஜேகப், அன்கிட் கைட், ஆதித்ய பிரபு மற்றும் அருண் ஆர்.எஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

வருமானம்

இந்நிறுவனம் ஆயிரம் மடங்கு வளர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாதம் 50 லட்சம் வருவாயை ஈட்டக்கூடியது. இதுவரை 6000க்கும் அதிகமான வீடுகளை காலி செய்ய உதவியிருக்கிறார்கள்.

முதலில் பெங்களூரில் தான் துவங்கினார்கள். தற்பொழுது மும்பை, என்சிஆர், ஹைதராபாத், சென்னை, புனே மற்றும் பத்து இரண்டாம் கட்ட நகரங்களில் செயல்படுகிறார்கள். மத்திய கிழக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயரவும் உதவியிருக்கிறார்கள்.

ஆரம்பகால வாடிக்கையாளர்கள் முகநூல் பதிவுகளை பார்த்து வந்ததாக தெரிவிக்கும் தீபு, 40 சதவீத வாடிக்கையாளர்கள் ஏற்கனவே சேவை பெற்றவர்கள் மூலம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமாதத்திற்கு சராசரியாக 100 இடங்களில் உள்ள ஆயிரம் வீடுகளை காலி செய்ய உதவியிருக்கிறார்கள். 80 சதவீத ஆர்டர்கள் பெருநகரங்களிலிருந்தே வருபவை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஓராண்டில் 20 இரண்டாம் கட்ட நகரங்களை நோக்கி நகர திட்டமிட்டிருக்கிறார்கள்.

பிக்கோல், க்ளவுட் அடிப்படையில் ஆர்டர்களை கையாண்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதே இதன் வருவாய் ஈட்டலுக்கான அடிப்படைக் காரணமாகும். இந்த க்ளவுட் அமைப்பு Saas அடிப்படையில் இயங்கக்கூடிய ஒன்றாகும். வாடிக்கையாளர்களிடமிருந்து விபரத்தை பெற்று தேதி, துவங்கும் இடம், சேரும் இடம், ஸ்லாட் விருப்பங்கள் மற்றும் பேக்கிங் விவரக்குறிப்புகள் ஆகியவற்றை சேமித்து வைக்கிறது. தங்கள் தொழில்நுட்ப உத்தியை பயன்படுத்தி சரியான லாரி, எந்தவழியாக செல்ல வேண்டும், சரக்கு சேகரித்தல் மற்றும் உகந்த கட்டண நிர்ணயத்தை பெறுகிறார்கள்.

அடுத்த மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகளில் 500 கோடி என்ற இலக்கை அடைய திட்டமிட்டிருக்கிறார்கள்.

யுவர்ஸ்டோரி ஆய்வு

ஆரம்பகாலத்தில் இது பொருட்களை விநியோகிக்கும் துறையின் ஒரு அங்கமாகவே கருதப்பட்டது. கடந்த ஆண்டு இந்தத் துறை கணிசமான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல புதுநிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத்தின் மூலமாக இந்தத் துறையை வேறு ஒரு கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார்கள்.

எம்எம் மூவர்ஸ் & பேகர்ஸ், ரீலொகேட்எக்ஸ்பி, ஜிப்பான், அகர்வால் மூவர்ஸ் மற்றும் பேக்கர்ஸ், ஈஇஜட்மூவ், பி.எம்.ரீலொகேசன்ஸ் போன்றோர் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் ஆகும்.

இந்தத் துறையின் மதிப்பு 2லிருந்து 5 பில்லியன் மதிப்புடையதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இது புது தொழில்நுட்பம், கைபேசி செயலி, கண்காணிப்பு கருவிகள் மற்றும் மென்பொருட்கள் உதவியால் தான் சாத்தியமாகியிருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

இணையதள முகவரிள்: Pikkol

ஆங்கிலத்தில் : APARAJITA CHOUDHURY | தமிழில் : Swara Vaithee

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக