பதிப்புகளில்

இணைய உலகின் டிராவிட் : சுலேகா.காம்

YS TEAM TAMIL
12th May 2018
Add to
Shares
32
Comments
Share This
Add to
Shares
32
Comments
Share

உள்ளுரில் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் சேவை அளிக்கும் ’சுலேகா’ தன்னிடம் 50,000 மேற்பட்ட சிறு மற்றும் குறுதொழில்களை கொண்டுள்ளது, மேலும் 30 லட்சத்திற்கும் அதிகமான தொழில்களை தன் தளத்தில் இலவசமாக விளம்பரப்படுத்தி உள்ளது.

image


சிலவருடங்கள் முன்னோக்கிச் சென்றால், ஆன்-லைன் மூலம் வீடு தேட, பழைய பொருட்களை வாங்க விற்க, ஒரே தளமாக சுலேகா மட்டுமே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தாலும், ஃபிளிப்கார்ட் துவங்கிய காலத்தில் தான் சுலேகாவும் துவங்கப்பட்டது. ஃபிளிப்கார்ட்டின் பெயரைவிடவும் சுலேகாவின் பெயர் 2007ல் பிரபலமாக இருந்தது. இணையம் என்ற ஒரு விஷயம் சாதாரண மனிதன் வாழ்கையின் அங்கமாக மாறும் முன்னரே சுலேகா நாடுமுழுவதும் தனக்கென ஒரு இடம் கொண்டிருந்தது. அப்படி இருக்க இன்றைய நிலையில் சுலேகா எவ்வாறு உள்ளது?

சுலேகாவின் நிறுவனர் சத்ய பிரபாகர் அதன் இறந்தகாலம் நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் அலசியுள்ளார் இந்த கட்டுரையில்...

அமிஞ்சிக்கரை 2 அமெரிக்கா :

சென்னையில் பிறந்து வளர்ந்த சத்யா, 1985ல் அமெரிக்கா சென்று கணினி பொறியியலில் மேற்படிப்பும், மேலாண்மை படிப்பும் படித்துமுடித்து, ஹனிவெல், ஏடீ&டீ போன்ற நிறுவனங்களில் வேலைபார்த்து வந்தார். அதன் பின்னர் தனது மனைவி சங்கீதா மற்றும் சிலரோடு இணைந்து ஸ்மார்ட் இன்பர்மேஷன் வர்ல்ட்வைட் என்ற நிருவனத்தை துவக்கினர். இந்த நிறுவனத்திடம் தான் சுலேகா.காம் என்ற இணைய முகவரி சொந்தமாக உள்ளது.

நண்பர்கள் மற்றும் சொந்தங்களிடம் முதலீடு பெற்று 1998ல் Sulekha.com அமெரிக்காவில் துவங்கப்பட்டது. முதலில் சமூக வலைபூக்களுக்கான தளமாக துவங்கப்பட்டது. ஆனால் முகநூல் மற்றும் லிங்க்ட்இன் வந்த பிறகு வலைபூக்கள் தேவை குறைந்தது.

“வலைபூக்களில் படிப்போருக்கு வாங்கும் எண்ணம் இராது. அவர்கள் பொழுதுபோக்கு நாடியே இதுபோன்ற தளங்களுக்கு வந்தனர். எனவே முழுவதும் தகவல்கள் நிறைந்த ஒரு தளத்தில் விளம்பரம் கொடுக்க எவரும் முன்வரவில்லை. மேலும் தளத்தில் இருந்த தகவல்களும் அனுபவம் குறைந்தவர்களால் எழுதப்பட்டதால், அவற்றின் தரம் குறைந்தே இருந்தது,” என்கிறார் சத்யா.

தளத்தை உபயோகித்தவர்கள் விளம்பரங்களை அதிகமாக நாடாததால், வருமானம் வருவது குறைந்தது. எனவே 2006 ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடும் சூழல் உருவானது. ஆனால் சத்யா இணையதள முகவரியை பெற்று, ஆன்லைன் விளம்பரங்கள் உள்ள தளமாக மாற்றினார். 2007 ஆம் வருடம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியா வந்தார் சத்யா.

பணம் மட்டுமே முக்கியம் அல்ல :

அமெரிக்காவில் உள்ள நார்வெஸ்ட் வெண்சர் பார்ட்னர்ஸ் நிறுவனம் முதலில் இந்தியாவில் முதலீடு செய்த நிறுவனம் சுலேகாதான். தற்போது வரை வெறும் $50 மில்லியன் டாலர் மட்டுமே இந்நிறுவனம் முதலீடாக பெற்றுள்ளது. அதுவும் 3 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது. அடுத்த கட்ட முதலீட்டை திரட்ட எந்த அவசரமும் இன்றி பொறுமையாக உள்ளார் சத்யா.

“அதிகப்படியான பணம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று சத்யா கருதுகிறார்.“ 

நிலைத்து நிற்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்க கொஞ்சம் காலம் வேண்டும். எனவே பொறுமையாக வளர்வதே எங்கள் நோக்கம் என்கிறார் அவர். இந்த வார்த்தைகள் அவரது தொழிலிலும் எதிரோளிகின்றது.

“சுலேகா தற்போது வாழ்வியல், கல்வி போன்றவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது. மிக அதிக தேவை இருக்கும், பயணச்சீட்டு, திரையரங்கு சீட்டு விற்பனை, விடுதிகளில் இடம் தேடித்தருதல், உணவு வாங்கி வருதல், பயணிக்க வாகனம் பதிவு செய்தல் போன்ற துறைகளில் இறங்கவில்லை. அவற்றுக்கு மிகப்பெரிய முதலீடு அவசியம். 

“மிகவும் ஆபத்து நிறைந்த தொழில்கள் மட்டுமல்ல லாபம் எடுப்பதும் தற்போது உள்ள சந்தை நிலையில் கடினம்,” என்கிறார் சத்யா.

அவரை பொருத்த வரையில், ஆன்லைன் மூலம் உணவு வாங்கும் ஒரு நபர் அதனை அவரது இல்லத்தில். கொடுக்க 40 ரூபாய்க்கு அதிகமாக செலவு செய்யமாட்டார். மேலும் இந்த துறையில் அதிகம் போட்டி இருப்பதால், அனைவருக்கும் கிடைக்கும் லாபம் குறைவே. எனவே அதில் இறங்குவதில் விருப்பம் இல்லை. அவர் கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

குறைவான வரத்து ஆனால் அதிக மதிப்பு உடைய வேலைவாய்ப்பு, திருமணம், பழைய கார்கள், அசையா சொத்துக்கள் துறைகளும் எங்களுக்கு அவசியம் அல்ல. இவற்றில் வாழ்வில் ஒரு முறைதான் ஒருவர் ஒரு வர்த்தகம் நிகழ்த்துவார்,” என்கிறார் அவர்.

உள்ளூர் தேவைகள் அதிகரித்துள்ளன :

சுலேகாவின் நோக்கம் தெளிவாக உள்ளது. வாடிக்கையாளர் கோரும் சேவை எதுவாக இருந்தாலும் அதனை முற்றிலும் இலவசமாக அவருக்கு வழங்குதல். எனவே பழைய பொருட்களுக்கான சந்தையை மற்றும் வாடைகைக்கு வீடுகள் பற்றிய தகவலையும் 2007ல் துவங்கினார்கள். மேலும் 2011ல் இருந்து உள்ளூர் தொழில்களுக்கான விளம்பரங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

2015ல் உள்ளூர் தொழில்களுக்கான தளமாக சுலேகா உருவெடுத்தது. தற்போது அவர்களிடம் 50000 மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவங்களின் தகவல்கள் உள்ளன. மேலும் 30 லட்சம் தொழில்கள் இலவசச் சேவை பெறுகின்றன.

”சுலேகாவின் மூலம் பணபரிமாற்றம் நிகழ்வது இல்லை. ஆனால் சத்யா, சிறு குறு தொழில்களுக்கு அதிக மதிப்பு மிக்க சேவை வழங்கப்படுகிறது என்கிறார். எங்களிடம் உள்ள தொழில்களில் 70% மிகவும் சிறிய மிகவும் குறுகிய தொழில்களாகும். அவர்களுக்கு மிகபெரிய முதலீடு கிடையாது. எனவே அவர்கள் முழுமையாக கவனம் செலுத்தி எளிதாக வளர்ச்சி அடைகின்றனர். எனவே அவர்களில் முதல் தேர்வாக சுலேகா உள்ளது” என்கிறார் அவர்.

கடந்த இருவருடங்களில் சுலேகா தனது தளத்தின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, 40 நகரங்கள், 225 வகைகள்,1000 துணை வகைகள் என விரிவடைந்துள்ளது. மேலும் ஏஐ பயன்படுத்தி, அவர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.

image


மூன்றில் இருந்து ஒன்று :

சத்யாவின் முன்பு மூன்று வழிகள் தென்பட்டன.

1. ஜஸ்ட் டயல் போன்று தகவல் வழங்கும் ஒரு தளம்.

2. உணவுகளை இல்லங்களில் கொடுக்கும் சேவை

3. தொழில்நுட்ப வசதி கொண்டு, வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்யும் சேவை நிறுவனம்.

தான் ஏன் அந்த மூன்றாவது வழியை தேர்வு செய்தேன் என்பதை சத்யா விளக்கினார். “இந்த வழியில், வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து சரியான வல்லுனர்களிடம் அவர்களை சேர்ப்பது தான் எங்கள் வேலை. தெற்கு மும்பையில் உங்களுக்கு ஒரு சட்டவல்லுனரின் சேவை தேவையெனில், உங்களுக்கு நாங்கள் எட்டு விடைகளை கொடுப்போம். அந்த எட்டில் கட்டாயம் மூன்றாவது உங்களுக்கு ஏற்றார் போன்று இருக்கும். உங்களின் விருப்பத்தை நீங்கள் தெரிவித்த உடன், அவர்கள் உங்களை அவர்களின் விலைப் பட்டியலோடு தொடர்புகொள்வர். அந்த வல்லுனர்களுக்கு வாடிக்கையாளர் கொடுக்கும் விடைகளை வைத்து நாங்கள் மதிப்பீடு தருவோம்”.

“தினமும் சுலேகாவிற்கு 5 மில்லியன் டேட்டா புள்ளிகள் கிடைகின்றன. அவற்றை கொண்டு என்ன என்ன சேவைகள் எங்கள் மூலம் பூர்த்தி அடைகின்றன, எந்த அளவுக்கு விரிவான சேவை நாங்கள் வழங்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம். இணையத்தின் உபயோகம் அதிகம், ஆக ஆக, வாய்ப்புகளும் அதிகம் ஆகின்றன. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடவும் தற்போது அதிகமாக வாய்ப்புகள் இரண்டாம் நிலை நகரங்களில் இணைய நிறுவனங்களுக்கு கிடைகின்றன. மேலும் சுலேகா நேரடியாக எந்த சேவையும் வழங்காததால், பல நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வது அவர்களுக்கு கடினமான காரியம் அல்ல.”

ஆனால் அனைத்து நகரங்களிலும், ஒரே அளவிலான வாடிக்கையாளரை கொண்டிருப்பது கடினமான காரியம். மேலும் சுலேகாவின் வல்லுனர்கள் சுலேகாவின் செயலியை மட்டுமே பயன்படுத்தவேண்டும். போட்டியாளரின் செயலியை பயன்படுத்துவது ஆகாது.

நிலைத்து நிற்கும் மாதிரி :

சுலேகாவில் ஒவ்வொரு விளம்பரதாரரும் அவர்கள் நகரத்திற்கு ஏற்றவாறு ஒரு கட்டணத்தை செலுத்துகிறார். 200-300 வரை இந்த கட்டணம் உள்ளது. மேலும் மற்ற நிறுவனங்கள் போன்று நிகழும் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் தரகு வாங்குவதில்லை. சேவை வாடிக்கையளர்களுக்கு இலவசமே.

கடைசியாக முதலீடு பெற்றபோது மற்ற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யவும், தேவையான தொழில்நுட்பங்களை பெறவும் அது பயன்பட்டுள்ளது. இன்று மூன்றாம் நிலை நகரங்களான திண்டுக்கல், வைசாக், புவனேஸ்வர், திருச்சி மதுரை ஆகியவை சுலேகாவின் வருவாயில் 14% பெற்று தருகின்றன. 20 நகரங்களில் பணிபுரியும் 1200 ஊழியர்களில், தொழில்நுட்ப பிரிவினர் மட்டுமே 150 நபர்கள் ஆகும்.

முதல் நிலை நகரங்கள் மூலம் 60% வருவாய் வருகின்றது, வெளிநாடுகளில் (அமெரிக்கா, கனடா) இருந்து 24 % கிடைகின்றது. வெளிநாடுகளில் ஊழியர்கள் இல்லை என்றாலும், அங்கும் தேவையான பட்டியலை வழங்குகிறது சுலேகா. இந்திய உணவு, ஜோதிடம், மற்றும் பல. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு வாடைகைக்கு வீடு பார்த்தல், வீட்டுக்கு தேவையான வேலைகளை செய்ய ஆட்களை அனுப்புதல் போன்றவற்றை சுலேகா மூலம் செய்கின்றனர்.

image


2017-18 ஆண்டில் சுலேகா லாபமீட்டியதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும், நிறுவனம் பங்குச்சந்தையில் பெயரிடப்படுவதை பற்றி எந்த கருத்தும் சத்யா கூறவில்லை. 

”எங்கள் பங்குதாரர்களுக்கு சரியாக விலை கொடுக்க நாங்கள் முயன்று வருகின்றோம். ஆனால் அதனை பற்றி கூறவேண்டும் என்றால் உடனடியாக நடக்கப்போவது இல்லை,” என்று நமக்கான பேட்டியில் குறிப்பிட்டார்.

சுலேகாவின் நோக்கம் அது இருக்கும் சூழலை வளர்ப்பதே. வங்கிகளோடு இணைந்து குறுநிறுவனங்களுக்கு கடன் அளிப்பதில் ஈடுபட்டு வருகிறது சுலேகா. இந்த வங்கிகளுக்கும் தள்ளுபடி விலையில் சேவை வழங்கி வருகிறது.

புதிய தலைமுறைக்கு கூறுவது என்னவென்றால் :

சத்யா நிறுவனம் ஆரம்பித்த புதிதில் இருந்து உலகம் நிறைய மாற்றங்களை கண்டுள்ளது. ஸ்டார்ட் அப், டிஸ்ரப்ஷன், இன்னோவேஷன் போன்ற வார்த்தைகள் மிகவும் பிரபலமாகியுள்ளன. அப்படி இருக்க புதிய தலைமுறை தொழில்முனைவோர் எளிதாக பெரிதாக வளர இயலுமா?

”2007 ஆம் ஆண்டு நாங்கள் சந்தித்த சிக்கல்கள் என்னவென்றால் , இணையத்தின் பயன்பாடு குறைந்திருந்தது, எனவே எங்களுக்கான பயனீட்டாளர்கள் குறைவாக இருந்தனர். ஆனால் 2018ல், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரே அளவு வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற சரியான தொழில்நுட்பத்தை கையாளவேண்டும். உங்கள் போட்டியாளரை காட்டிலும் கட்டணத்தில் குறைவாக இருக்கவேண்டும்.”

அவரை பொறுத்தவரை அமெரிக்காவோ, இந்தியாவோ, இந்த சூழலில் தொழில்முனைவை பெரிதாக்குவது கடினம். காரணம் வாய்ப்புகள் குறைந்துள்ளன. ”எளிதாக முதலீடு கிடைகின்றது. சீனா எந்த வெளிநாட்டு நிறுவனத்தையும் அனுமதிப்பதில்லை. ஆனால் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியும் உள்ளது.

“பல துறைகளில், முக்கியமாக இணைய வாடிக்கையாளர் பகுதியில் இனி புதிய புகுதலுக்கு இடமில்லை. நம்மிடம் தற்போது யூடியூப், முகநூல், வாட்ஸ்அப், ஊபர், லிங்க்ட் இன் போன்றவை உள்ளன,” என்கிறார் அவர்.

இதன் காரணமாக எதிர்காலம் இருண்டு விட்டது என்று பொருள் அல்ல. கடைசி ஒரு வருடத்தில் சுலேகாவில் வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்ய வெற்றிகரமாக ஏஐ பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்கள் அடுத்த திட்டம், அடுத்த அடுத்த துறைகளுக்கு மற்றும் நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வதே.

சத்யா நம்புவது என்னவென்றால், ஒருநபர் தொழில்கள் இனி வரும்காலத்தில் அதிகரிக்கும் என்பதாகும். அவர்களோடு இணைந்து எதிர்காலத்தில் சுலேகா பணியாற்றும் என்று கூறியுள்ளார்.

புதிய புகுதலுக்கு தயராகாது, பெரிதாக வளர்வதற்கான பார்வை இல்லாது எந்த தொழிலிலும் நீடித்து நின்றதில்லை. Su என்றால் நல்ல என்று பொருள். Lekha என்றால் எழுதுவது என்று பொருள். எனவே ஒரு வெற்றிக்கதையை தற்போது சுலேகா எழுதுவதாக நாம் நம்பலாம்.

கட்டுரையாளர் : அதிரா நாயர் | தமிழில் : கெளதம் தவமணி

Add to
Shares
32
Comments
Share This
Add to
Shares
32
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக