பதிப்புகளில்

பள்ளிப் படிப்பை விட்டு தினக்கூலியாகி, தற்போது லட்சங்களில் தொழில் புரியும் அர்ஜுனின் வெற்றிக்கதை!

YS TEAM TAMIL
13th Feb 2018
10+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

அர்ஜுன் சோலான்கியின் அப்பா இறந்தபோது அர்ஜுனின் வயது 14. இரண்டு மகன்களை வளர்ப்பதற்கு அவரது அம்மாவின் வருமானம் போதுமானதாக இல்லை. எனவே அவரது அம்மாவைப் போலவே அவர்களும் பணிபுரிய தங்களது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.

மூன்று வேளை சாப்பிட உணவு கிடைப்பதை உறுதி செய்வதைத் தாண்டி மூவரும் எந்தவித ஆடம்பரம் குறித்தும் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. ஆனால் ஐசிஐசிஐ வழங்கிய திறன் பயிற்சி வகுப்பு குறித்து இளைய மகனான அர்ஜுன் கேள்விப்பட்டதும் அவர்களது நிலைமை முற்றிலுமாக மாறியது.

image


அர்ஜுனின் குடும்பம் மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் பகுதிக்கு அருகில் உள்ள பரோடா சிந்தி என்கிற கிராமத்தில் வசிப்பதாக ’தி க்விண்ட்’ தெரிவிக்கிறது. அவரது பெற்றோர் இருவரும் தினக்கூலியாக பணிபுரிவதால் குடும்பத்திற்கு நிலையான வருமானம் கிடையாது. அதனால் நிலையான எதிர்காலமும் இல்லை. அவரது அப்பாவிற்கு மதுப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தின் நிலைமை மேலும் மோசமாகியது. அதிகப்படியான மது அருந்தியதன் காரணமாக அவரும் உயிரிழந்தார்.

அர்ஜுனின் அம்மா கடுமையாக உழைத்தாலும் அவரால் குழந்தைகளின் பள்ளிப் படிப்பிற்கான கட்டணத்தை கட்ட இயலவில்லை. அன்றாட உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலவில்லை. எனவே அர்ஜுனும் அவரது அண்ணனும் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போதுதான் ஐசிஐசிஐ நிறுவனம் அதன் சமூக பொறுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ’பெயிண்ட் பயன்பாடு தொழில்நுட்பம்’ குறித்த ஒரு இலவச வகுப்பை வழங்கும் விவரம் அர்ஜுனுக்கு தெரியவந்தது.

இரண்டு மாதம் முழுவதும் அர்ஜுனின் தரப்பிலிருந்து ஈட்டப்படும் வருமானம் இன்றி குடும்பத்தை நடத்துவது கடினம் என்றபோதும் அவர்கள் ஆதரவளித்து அர்ஜுன் அந்த வகுப்பிற்குச் செல்ல ஊக்குவித்தனர். ’ஸ்டோரிபிக்’ உடனான நேர்காணலில் தனது கற்றல் குறித்து அவர் விவரிக்கையில்,

வெவ்வேறு விதமான பெயிண்ட், அதன் பயன்பாடு, பொதுவாக எழும் பெயிண்ட் சார்ந்த பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என முழுமையாக கற்றுக்கொண்டேன். நிதி நிர்வாகம், சிறப்பாக வெளிப்படுத்துதல் மற்றும் தொடர்பு கொள்ளும் திறன் போன்றவற்றின் அடிப்படைகளையும் கற்றுக்கொண்டேன். நடைமுறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இது நிஜ உலகிற்கு என்னை தயார்படுத்திக்கொள்ள பெரிதும் உதவியது. எனக்கு பணி இல்லாதபோது எனக்கு வாய்ப்பு இல்லை என நினைத்தேன். ஆனால் நான் ஒரு திறனைக் கற்றறிந்தேன். எவ்வாறு கனவு காணவேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டேன்.

அர்ஜுன் தொடர்ந்து வகுப்பிற்கு வருவாரா என்று ஆரம்பத்தில் அவரது பயிற்சியாளர் சந்தேகித்தார். ஆனால் அர்ஜுன் வெற்றிகரமாக வகுப்பை நிறைவு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அத்துடன் விரைவிலேயே அவரது பணியில் மென் மேலும் சிறப்பிக்கத் துவங்கினார்.

அர்ஜுன் சோலான்கி தற்போது பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை ஏற்று செயல்படுத்துகிறார். தனது குடும்பத்தை பராம்பரிப்பதுடன் தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு அவரது கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் உதவி வருகிறார்.

கட்டுரை : Think Change India

10+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags