பதிப்புகளில்

பிளாகுகளை பிசினஸ் ஆக்குங்கள், கனவை நனவாக்குங்கள்!

siva tamilselva
7th Nov 2015
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

நான் ஒரு பிளாகர்.

நல்லது, அதை ஃப்ரொபஷனலா பண்றீங்களா?

image


வலைப்பதிவு அதாவது பிளாகிங் பற்றி என்ன வேண்டுமானாலும் கருதலாம். ஆனால் அதுவும் ஒரு தொழில். வெறும் பொழுது போக்கு அம்சம் அல்ல. தோல்வியடைந்த எழுத்தாளர்களுக்குக் கூட கடைசிப் புகலிடம் அதுதான். நமது ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கான இடம். போரடித்துப் போயிருக்கும் நடுத்தர வயதுக்காரர்கள், பிடிக்காத வேலையைக் கட்டிக் கொண்டு அழுபவர்களுக்கு ஒரு வெளிப்பாட்டுக்கான இடம் அது. ஏனெனில் அவர்கள் எப்போதுமே ரகசியமாக தங்களது உறவுகளைப் பூரணப்படுத்துவதற்கான கனவில் மிதந்து கொண்டிருப்பவர்கள்.

அந்தக் கஷ்டம் இப்போது சுலபமாகி விட்டது. வித்தியாசமான தலைப்புகளில் பேசும் ஆர்வமுடைய வாசகர்களை ஒன்றிணைக்கும் டிஜிட்டல் புரட்சிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். டிஜிட்டல் இந்தியா, உங்கள் கீ போர்டுதான் உங்கள் சிஇஓ என்று உங்களது கேரியரை முறைப்படுத்தி விட்டது. இதன் மூலம் ஏளனம் செய்தவர்களின் சவப்பெட்டியின் கடைசி ஆணியையும் அது அடித்து விட்டது.

ஒருசில பிளாகர்கள் அவர்களுக்கு சாதகமாக இத்தகைய திருப்பு முனையை எதிர்பார்த்தாலும், அவர்களது உலகின் மெய்நிகர் உண்மையைக் கட்டமைக்க தங்களது ரத்தத்தையும் வேர்வையும் சிந்துகின்றனர். வலிமையான பிளாகுகளுடனும் இணையதளங்களுடனும் சேர்ந்து அவர்கள் இயங்குகின்றனர். உலகம் தனது இயக்கத்தை எப்படி டிஜிட்டலைஸ் ஆக்குவது என்று பரபரத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் நன்னெறியாளர்கள் – இணையம் தவிர வேறெதுவும் தெரியாதவர்களை அப்படித்தான் அழைக்க விரும்புகிறேன். அது போன்ற ஐந்து நிறுவனங்கள் பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவர்கள் பிளாக் வைத்து இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் பிளாகுகள் சாதாரணமாக ஆரம்பித்து இன்று மிகப்பிரபலமாகி இருக்கிறது. அவர்களின் அற்புதமான பயணம் இப்படி அமைந்தது.

குன்சும் (kunzum)

ஒரு இதயப்பூர்வமான கருத்தியலைக் கொண்ட ஒரு பயண பிளாக் அது. பயணம் தொடர்பான அனைத்து அம்சங்களும் உடையதாக அதைக் கட்டமைக்க திட்டமிட்டார் அஜய். இப்படித்தான் அந்த குன்சும் பிராண்ட் பிறந்தது. ஆரம்பத்தில் அது பயண நாட்குறிப்பாக இருந்தது. பின்னர் அது பிரபலமான இணையதளமானது. அதன்பிறகு அது குன்சும் ட்ராவல் கஃபே ஆகி தற்போது அதற்கே உரித்தான பயணக் குறிப்புகள் கொண்ட ஆன்லைன் சேனல் குன்சும் டிவியாக வளர்ந்துள்ளது.

image


இந்த யோசனை எப்படி வந்தது?

“குன்சும் ஒரு சமூக நிறுவனமாகத்தான் தொடங்கியது. எனது பிளாக், இந்திய பயணக் கதையை உலகம் முழுவதும் விற்பனை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். சுற்றுலாத்துறையை வளர்க்க விரும்பினேன். அதன்மூலம் நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்க முயற்சித்தேன்” என்கிறார் அஜய் ஜெயின். இப்படிப் பயண விரும்பியாக இருந்து பின் தொழில்முனைவரான அஜய்ஜெயின். ஆரம்பத்தில் அவருடைய உணர்வுக்கான வெளிப்பாட்டுத் தளமாக மட்டுமே அவரது பிளாக் இருந்தது. பின்னர் அதுவே அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, தற்போது ஒரு குட்டி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக அவரை உயர்த்தியுள்ளது.

இது ஏன் தனித்தன்மை வாய்ந்தது?

உண்மையில் பயணம் எத்தனை அற்புதமானது என்று உலகுக்குக் காட்டுவது மட்டும்தான் அவரின் நோக்கமாக இருந்தது. இதற்காக பயணம் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஒரு அழகிய பிளாகை மட்டும் அவர் உருவாக்கவில்லை. டெல்லியின் ஹஸ்காஸ் வில்லேஜில் குன்சும் ட்ராவல் கபே ஒன்றையும் தொடங்கினார்.

வரவேற்பும் வருமானமும்

“தொழில்முனைவராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் என்னால் வெறுமனே எழுதுவதோடு நிற்க முடியவில்லை. குன்சும்-ஐ தொடங்கினேன். ஏனெனில் ஒவ்வொரு மைல்கல்லையும் ஆச்சரியத்தோடு கடக்கும் பயணத்தில் நான் இருந்தேன். இப்படித்தான் குன்சும் வர்த்தகம் வளர்ந்தது.”

பிளாகும் வளர்ந்து கொண்டிருந்தது. 70 ஆயிரம் சந்தாதாரர்கள் சேர்ந்து விட்டனர். ஷேர் செய்வதன் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் ட்ராவல் கஃபேவும் அதற்கான சொந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ட்ராவல் கஃபே முகம் தெரியாதவர்கள் சந்திக்க வாய்ப்பளிக்கிறது. அவர்களுடன் ஏற்படும் வித்தியாசமான அனுபவத்தின் மூலம் புதிய மனிதர்களையும் இடங்களையும் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசை கொண்டவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறது.

பாப்க்சோ (Popxo)

பிரியங்கா கில் ஒரு லைஃப்ஸ்டைல் பத்திரிகையாளர். நம்ரதாபோஸ்டார்ம், ஒரு மேலாண்மை ஆலோசகர். இருவரும் பேஷன் துறையில் ஆர்வம் கொண்டவர்கள். தினமும் சில மணி நேரங்களாவது அது தொடர்பான விஷயங்களில் செலவு செய்பவர்கள். அவர்கள் இருவரும் லைஃப்ஸ்டைல் தொடர்பாக டிஜிட்டல் உலகில் ஏதேனும் செய்ய விரும்பினர்.

இந்த யோசனை எப்படி வந்தது?

பேஷன் விபரங்கள் பளபளப்பான பேப்பர்களில் அச்சிட்டு பத்திரிகைகளில்தான் வருகின்றன. அதன் மூலம்தான் இளம் பெண்களை அவை போய்ச் சேர்கின்றன. அதையே டிஜிட்டல் வடிவில் இணையத்தில் கொடுத்தால் நகரப் பெண்கள் நிறையப் பேருக்கு அது போய்ச் சேரும் என்று யோசித்தோம். ஏனெனில் இந்தப் பெண்கள் சமூக வலைத்தளங்களிலும் மெபைல் போன்களிலும் தான் தங்களது நேரத்தைப் பெரும்பாலும் செலவு செய்கின்றனர். எனவே டிஜிட்டல் வடிவில் கொடுத்தால் அவர்களைப் போய்ச் சேரும் என்று முடிவு செய்தோம். போப்க்சோஓ-வை (POPxo) ஆரம்பித்தோம்.

image


இது ஏன் தனித்தன்மையானது?

பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு (அது சாதாரணமான விஷயமாகக் கூட இருக்கலாம்) தீர்வு அதில் இடம்பெற்றிருக்கும். ஒரு போதகரைப் போல அது வழிகாட்டுவதால் அது தனித்தன்மையுடன் காணப்படுகிறது.

வரவேற்பும் வருமானமும்

போப்க்சோ இணையதளம் ஏழே மாதத்தில் 10 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி விட்டது. இந்த இணையதளத்திற்கு சாதாரணமாக வந்து போகிறவர்களின் எண்ணிக்கை 40 லட்சம். கூகிள் இண்டியா தலைவர் ராஜன் ஆனந்தன், கேரட்லேனின் மிதுன் சஞ்செட்டி மற்றும் சிலருடன் சேர்ந்து ஹூசேன் கன்ஜி இந்த இணையதளத்தைத் தொடங்கினர். இது தற்போது 3 கோடி ரூபாய் வர்த்தகத்தைத் தொட்டிருக்கிறது.

மிஸ் மாலினி புகழ் மாலினி (Miss Malini)

பொழுது போக்காக தெலோ டவுனிலும், திரைத்துறையிலும் கால்பதிக்க விரும்பும் ஒவ்வொருவரும் தேடும் பேஷன் போட்டோகிராபர் மிஸ்மாலினி. அவரின் இணைய தளத்தில் உள்ள லோகோவில் உள்ள முகம் அவரது சொந்த வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது என்று நிறையப் பேருக்குத் தெரியாது. அவரது நிறுவனமும் பிராண்ட்டும் தன்னை விடப் பெரிதாக வளர்ந்திருக்கிறது என்று அவர் சொல்லிக் கொள்வதில்லை. அது ஒரு சந்தோஷமான பிரச்சனைதான்.

image


எப்படி வந்தது இந்த யோசனை?

பொதுவாக பொழுது போக்கு பத்திரிகை உலகில் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம்தான். ஒரு இணையதளம் எங்களில் ஒருவரை போஸ் கொடுக்கச் சொல்லி அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு எங்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தியது. கவர்ச்சிப் படங்களில் போதை காணும் சாமான்யர்களின் சந்தோஷத்தில் அவர் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். “சமூக வலைத்தளங்களும் டிஜிட்டல் உலகமும் இந்தியாவில் வளர்ந்து கொண்டிருந்தது உண்மையில் எனக்கு அதிர்ஷ்டம்தான். நான் எனது பிளாகை தொடங்கினேன்.” என்கிறார் மாலினி.

இது ஏன் வித்தியாசமானது?

நவீன வாழ்க்கையில் எதார்த்தத்திற்கும் சந்தையில் அதன் பிரதிபலிப்புக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்ததாக மாலினி கருதினார். மேலும் ஷோபிஸ் (showbiz) உலகம் குறித்த செய்திகளிலும் சந்தோஷமும் பாசிட்டிவ் அம்சங்களும் குறைவாகவே இருந்தன என நினைத்தார். சந்தோஷமான உள்ளடக்கம் உடைய ஒரு தளத்தை உருவாக்க முடிவு செய்தார்.

வரவேற்பும் வருமானமும்

2010ல் மிஸ் மாலினி.காம் தொடங்கிய போது அதன் வாசகர் எண்ணிக்கை மாதத்திற்கு 10 ஆயிரம் பேர். தற்போது அது 5 லட்சம் பேராக உயர்ந்துள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்காவின் முன்னணி ஆரம்ப முதலீட்டாளர்களெல்லாம் (angel investors) இதில் முதலீடு செய்துள்ளனர். கூகிள் இந்தியாவின் ராஜன் ஆனந்தன், செக்.காம், மேட்ச்.காமின் நிறுவனர்கள், எக்ஸ்க்ளூசிவ்லி.இன் இணையதளத்தின் ஷெர் சிங், டி.ஏ.அசோசியேட்ஸ்சின் இயக்குனர் இன்னும் இவர்களைப் போன்ற வெற்றிகரமான தொழிலதிபர்களும் முதலீட்டாளர்களும் இதில் முதலீடு செய்துள்ளனர்.

ஸ்டெயில் பியஸ்டா (StyleFiesta)

துடுக்குத்தனம் நிறைந்த பெண் மசூம் மின்னவாலா. பேஷன் உலகத்தால் ஈர்க்கப்பட்டவர். அந்த உலகத்தின் வழக்கமான விதிகள் எதையும் பின்பற்றாமல் புதிதாய் ஏதாவது செய்ய ஆசைப்பட்டார். ஸ்டெயில் பியஸ்டா பிளாகை தொடங்கினார். விரைவிலேயே அது விற்பனை மையமாகி விட்டது. புது பேஷன் பற்றி தெரிந்து கொள்ள இங்கே போங்கள் என்று சொல்லுமளவுக்கு பிரபலமாகி விட்டது.

image


இந்த யோசனை எப்படி வந்தது?

முதலில் தன்னைச் சுற்றி அவர் பார்த்த பேஷன் மாதிரிகளைச் தனது அலமாரியில் அடுக்கிக் காட்சிக்கு வைத்தார். பிறகுதான் தனது பிளாக் பார்வையாளர்களைக் கவர தான் வரையறுக்கும் பேஷன் மாதிரியே போதுமானது என்பதைக் கண்டார். புதிய ட்ரெண்டை தானே உருவாக்கினார். உலகம் எதை நுகருமோ அதைப் புரிந்து கொண்டு தனது பேஷன் மாதிரிகளை பிளாகில் காட்சிப்படுத்தினார்.

இது ஏன் தனித்துவமானது?

அவரது மொழி அதீத பேன்சியான பெண்களுக்கானதில்லை. சாதாரணப் பெண்களுக்கானது. ஒரு தோழியைப் போல, ஒரு துணையைப் போல, சமூக வாழ்க்கையில் அவர்களைப் போல, தேவைகளில் அவர்களைப் போலவே தேவை உள்ள பெண்ணாகப் பேசினார். பிற பிளாகர்கள் வர்த்தகத்தில் இறங்குவதற்கு முன்பே தனது பேஷன் நுட்பத்தை ஆவணப்படுத்த தொடங்கி விட்டார் மசூம் மின்னவாலா.

வருமானமும் வரவேற்பும்

கிடைத்த வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்துவதுதான் தொழில்முனைவேருக்கு அழகு. அதைச் செய்தார் மின்னவாலா. தனக்குப் பிடித்தமான நகைகளுக்கு ஆன்லைன் ஷாப் ஒன்றைத் தொடங்கினார். இணைய வழி வணிகத்தின் முதல் ஒரு சில வர்த்தகர்களில் ஒருவரானார். எது இப்போதைக்கு ஹாட், எது பேஷன் இல்லை எனும் பலதரப்பட்ட விவரங்களையும் அளிக்கும் தளமாக அவரின் தளம் விளங்கியது.

ஐபி லீடர்ஸ்.இன் (Ipleaders.in)

ஐபிலீடர்ஸ்.இன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் தளம். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கண்டறிந்து அதைக் களையும் தளம். நிறுவனத்தின் கொள்கைகள், கட்டமைப்பு மற்றும் சட்ட உதவிகளை வழங்கும் தளம்.

image


இந்த யோசனை எப்படி வந்தது?

ஐிபிலீடர்ஸ் முதலில் சட்ட உதவி நிர்வாகப் பணிகளுடன் தொடங்கியது. ஒரு நிறுவனம் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட வழிமுறைகள் என்னென்ன எனக் கண்டறிந்து சொல்வது, சட்டப்பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது ஆகிய பணிகளை மேற்கொண்டது. சட்ட ஆலோசனைகளை வழங்குவது மட்டுமல்லாமல் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கும் சமூகம் சார் தொழில்களுக்கும் தேவையான ரிஸ்க் மேனேஜ்மென்ட் எனப்படும் பிரச்சனைகளைக் கையாளும் படிப்புகளையும் அதற்குத் தேவையான தொழில் நுட்பத்தையும் ஜிபிலீடர்ஸ் வழங்குகிறது.

இது ஏன் தனித்தன்மையானது?

எந்த ஒரு தொழிலுக்கும் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர, பிளாகைப் பொருத்தவரையில் வேறொரு பிரச்சனையும் இருந்தது. “நான் பிளாக்.ஐபிலீடர்ஸ்.இன் ஐ தொடங்கிய போது பார்வையாளர்கள் அதிகம் வரவில்லை. நாங்கள் பிளாகில் போடும் பதிவுகளை யாரும் படிக்க விரும்பவில்லை என்றுதான் நாங்கள் கருதினோம். ஏனெனில் எங்கள் பதிவுகள் அனைத்தும் சட்டம் தொடர்பானவை. பெரும்பான்மையானவர்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனினும் விரைவிலேயே நிலைமை மாறியது. அதன்பிறகு அந்தத் தளம் எப்படி வெற்றிகரமாக மாறியது என்றும் மக்கள் அதை விலைமதிக்க முடியாத சேவை ஆற்றும் தளமாக எப்படிப் பார்த்தார்கள் என்றும் விளக்குகிறார் ஐபிலீடர்ஸ்சின் நிறுவனர் ராமானுஜ் முகர்ஜி. “சட்டம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் அதற்கான தேவை இருக்கிறது என்றும் நாங்கள் புரிந்து கொண்டோம்” என்கிறார் அவர்.

வரவேற்பும் வருமானமும்

மக்களுக்கு தேவையான விஷயத்தைக் கொடுக்கும் விதத்தில் - அவர்களுக்கு உதவிகரமாக - ஒரு பிளாக் இயங்கினால் அந்தத் தளத்திற்கு வருவோர் எண்ணிக்கை மாதந்தோறும் இரண்டு இலக்கங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கும்.

நல்ல உள்ளடக்கம், வேலை வாய்ப்பு ஆகிய இரண்டையும் வழங்கியது ஐபிலீடர்ஸ். இதன் மூலம் எப்படி அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்தது என்று ராமானுஜ் விளக்குகிறார். “கூகுள் தேடுபொறி மூலம்தான் நிறையப் பார்வையாளர்கள் வந்தனர்” என்கிறார் அவர். சட்ட நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவது, உங்கள் நிறுவனத்தின் மொத்த சட்டப் பிரச்சனைகளையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்பது ஆகியவற்றின் மூலம் பிளாக் நிறையப் பணம் ஈட்டியது. அது மட்டுமல்ல. கொல்கத்தாவில் உள்ள நீதித்துறை விஞ்ஞானத்திற்கான தேசியப் பல்கலைக்கழகத்தில் என்டர்ப்ரனர்ஷிப் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் பிசினஸ் லாஸ் (Entrepreneurship Administration & Business Laws) தொடர்பான டிப்ளமோ படிப்பையும் அவர்கள் வடிவமைத்துள்ளனர்.

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags