பதிப்புகளில்

'ரத்தன் டாடா'- ஸ்டார்ட் அப்களின் காதலர்!

18th Feb 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

டாடா கால்பதிக்காத துறைகள் என்பது மிகக் கொஞ்சம்தான். டெலிகாம், சாப்ட்வேர், பேஷன், சில்லறை வர்த்தகம் என எங்கும் எதிலும் டாடாவின் முத்திரையை காண முடியும். இப்போது அந்த பட்டியலில் ஸ்டார்ட் அப்களும் இணைந்து உள்ளன. ஆனால் அந்த முதலீடுகளைக் கூட தனிதன்மையோடு கையாள ரத்தன் டாடாவால் மட்டுமே முடியும். FirstCry என்ற குழந்தைகளுக்கான பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் கடைசியாக அவர் முதலீடு செய்துள்ளார். இது கடந்த 2 ஆண்டுகளில் அவர் முதலீடு செய்யும் 25வது ஸ்டார்ட் அப் ஆகும்.

 

image


அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக ஆன்லைன் வர்த்தகம் கோலோச்சும் நம் நாட்டில் டாடா போன்ற மிகப்பெரிய முதலீட்டாளர் கடந்த 18 மாதங்களில் 8 ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வதென்பது சாதாரண விஷயமில்லை. அதிலும் இந்தியாவின் மிக முக்கிய மூன்று ஸ்டார்ட் அப்களான Ola, Paytm, Snapdeal ஆகிய நிறுவனங்களில் இவரின் முதலீடு முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக காரணங்களுக்காக போராடும் Ampere, Swasth India போன்ற ஸ்டார்ட் அப்களிலும் இவர் முதலீடு செய்துள்ளார். லாஜிஸ்டிக்ஸ் மட்டும்தான் இன்னும் இவர் கால் பதிக்காத துறை.

நீங்கள் அதற்கு முன்னால் எவ்வளவு கோடி முதலீடு வைத்திருந்தீர்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் ரத்தன் டாடா போன்ற ஜாம்பவான் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது அதை இந்த உலகமே உற்றுப் பார்க்கிறது. 5 பில்லியன் மதிப்பு கொண்ட ஓலாவின் பங்கு முதலீட்டிற்கு முன் 15,87,392 ரூபாயாக இருந்தது. டாடாவின் முதலீட்டிற்கு பின் அது 29,44,805 ரூபாயாக உயர்ந்தது.

எவ்வளவு முதலீடு செய்கிறோம் என அவர் வெளிப்படையாக அறிவிப்பதில்லை. ஆனால் ஸ்டார்ட் அப்களுக்கு நிதியுதவியை தாண்டியும் சில பலன்கள் இந்த முதலீடுகளால் கிடைக்கின்றன. "இந்த முதலீடு எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆதரவு. இதனால் எங்களின் பொறுப்புணர்ச்சி அதிகரித்திருக்கிறது" என்கிறார் ஓலாவின் சி.இ.ஓ பவிஷ் அகர்வால். 

சில இளம் தொழில்முனைவோர்களோடு மூத்த முதலீட்டாளர்கள் கைகோர்க்கும்போது நடக்கும் மேஜிக்கை வார்த்தையால் விவரிக்க முடியாது. அதுவும் டாடா போன்ற ஒரு வழிகாட்டி கிடைத்தால்? "இந்தியர்கள் அனைவருக்கும் வாகனசேவையை வழங்கவேண்டும் என்ற எங்களின் கொள்கைக்கு டாடா மிகப்பெரிய ஊக்கசக்தியாக இருப்பார்" என்கிறார் பவிஷ்.

டாடா முதலீடுகள் வளரும் நிறுவனங்களுக்கு போதுமான புகழையும் வெளிச்சத்தையும் அளிக்கின்றன. டாடாவின் முதலீட்டிற்கு பின் அந்நிறுவனங்களின் மதிப்பு அதிகரித்திருக்கிறது. BlueStone நிறுவனத்தின் மதிப்பு 34.86 சதவீதத்திலிருந்து 50.29 சதவீதமாக உயர்ந்தது இப்படித்தான்.

ஆகஸ்ட் 2015-ல் நம் தளத்தை படித்த ரத்தன் டாடா நம் நிறுவனத்தில் முதலீடு செய்தார். இதன்மூலம் நம் தளத்தில் முதலீடு செய்துள்ள Kalaari Capital, Qualcomm Ventures, TV Mohandas Pai ஆகியோரோடு டாடாவும் இணைந்தார். அவர் முதலீடு செய்துள்ள ஒரே ஒரு மீடியா நிறுவனம் யுவர்ஸ்டோரிதான்.

டிசம்பர் 2015-ல் பிரபல அமெரிக்க தொண்டு நிறுவனமான கான் அகாடமி டாடா டிரஸ்ட்டோடு கைகோர்த்தது. NCERT அங்கீகரிக்கும் ஆன்லைன் பாடங்களை மாணவர்களுக்கு கொடுப்பதே இதன் நோக்கம்.

IDG Ventures India, Kalaari CapitaL, Jungle Ventures ஆகிய நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் உள்ளார் ரத்தன் டாடா. Kalaari Capital – Urban Ladder, BlueStone,Jungle Ventures’ protégé Crayon Data ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். LetsVenture நிறுவனத்தில் முதலீடு செய்ததோடு ஆலோசகராகவும் உள்ளார்.

2016ன் தொடக்கத்திலேயே மேலும் நான்கு ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ரத்தன் டாடா. இதனால் ஸ்டார்ட் அப்கள் காட்டில் இந்த ஆண்டும் மழைதான். 

___________________________________________________________________________________________________________ தொடர்பு கட்டுரை:

புதிய அத்தியாயத்தின் தொடக்கம்!

___________________________________________________________________________________________________________

image


ஆக்கம்: ஆதிரா நாயர் | தமிழில்: சமரன் சேரமான்

கிராபிக்ஸ்: கோகுல் கே

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


தொடர்பு கட்டுரைகள்:

அடுத்த மாபெரும் புரட்சி? கல்வியை இலவசமாக்க, கான் அகாடமியுடன் கைகோர்க்கும் ரத்தன் டாடா

சிங்கப்பூர் நிறுவனம் க்ரயான் டேட்டாவில் ரத்தன் டாட்டா முதலீடு


Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக