பதிப்புகளில்

’மிஸ் டெஃப் ஏசியா’ பட்டம் வென்ற முதல் இந்திய காதுகேளாத பெண்!

posted on 30th October 2018
Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share

நிஷ்தா துதேஜா, ‘மிஸ் அண்ட் மிஸ்டர் காது கேளாதோர்’க்கான ஐரோபா-ஆசிய உலக அழகிப் போட்டி 2018ல் வென்ற முதல் இந்தியா பெண்ணாகியுள்ளார். ப்ரேகில் நடைப்பெற்ற இப்போட்டியில் வென்றுள்ள 23 வயது நிஷ்தா, குறைபாடு வெற்றிக்கு தடையல்ல என்று நிரூபித்துள்ளார். 

image


பானிபட்டைச் சேர்ந்த நிஷ்தா, பிறக்கும்போதே காது கேளாமல் இருந்தார். வெங்கடேஷ்வரா கல்லூரியில் காமர்ஸ் மாணவியான அவர், தற்போது மும்பை மித்திபாய் கல்லூரியில் எக்கனாமிக்ஸ் முதுகலை பட்டம் படிக்கிறார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்பூரில் நடந்த இந்திய காதுகேளாதோருக்கான அழகிப் போட்டியில் பட்டம் வென்றார். அப்போது பேசிய அவர்,

”எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் என் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்போது நான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உதவி புரிய ஆசைப் படுகிறேன். என்னைப் பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகளுக்கு பச்சாதாபம் தேவையிலை. அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டாலே போதும்,” என்கிறார்.

நிஷ்தா சிவண்டோஸ் இந்தியா (Siemens Hearing Instruments) நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிடராக உள்ளார். இந்நிறுவனம் காது கேளாதோருக்கான ஹியரிங் ஏய்ட் சாதனத்தை தயாரிக்கும் முன்னணி இடத்தில் உள்ளது. நிஷ்தா ஒரு சர்வதேச ஜூடோ விளையாட்டு வீரரும் ஆவார்.

image


“என்ன ஒரு தருணம் அது. அதை நாள் முழுதும் மறக்கமாட்டேன். அந்த விழா இரவு அற்புதமாக இருந்தது. முதல் முறையாக சர்வதேச அளவில் இந்தியா காதுகேளாதோர் அழகுப் போட்டியில் வென்றுள்ளது. அதைப் பெற்றுள்ள நான் பெருமை கொள்கிறேன்,”

என்று இந்தியா டுடே பேட்டியில் பட்டம் வென்றவுடன் கூறினார். தீவிர விளையாட்டு விராங்கனையான நிஷ்தா, பல்கேரியாவில் நடைப்பெற்ற Deaflympics 2013லும், யூகேவில் நடைப்பெற்ற உலக காதுகேளாதோர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2015லும், Deaflympics 2017லும் பங்குப்பெற்றுள்ளார் என்று நியூஸ் 18 செய்திகள் தெரிவிக்கின்றன. 

கட்டுரை: Think Change India

Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக