பதிப்புகளில்

அவசர கால உதவிக்கு வரும் ‘காவலன்’

மக்கள் பாதுகாப்பிற்கும், ஆபத்து நேரத்தில் உடனடியாக உதவிட இரு செயிலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு!

9th Aug 2018
Add to
Shares
76
Comments
Share This
Add to
Shares
76
Comments
Share

இன்றைய சூழலில் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு மிகக் குறைவாகவே உள்ளது. செய்தித்தாளை திறந்தாலே கொலை, திருட்டு, பலாத்காரம் என ஏகப்பட்ட அசம்பாவித சம்பவங்கள். ஆபத்து எப்பொழுது நம்மை நெருங்கும் என்று தெரியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் ’காவலன் டயல் 100’ மற்றும் ’காவலன் SOS’ என்னும் இரண்டு கைபேசி செயலியை அறிமுகம் படுத்தியுள்ளது தமிழக அரசு.

image


தொழில்நுட்பம் நம் கைநுனியில் கைபேசி வழியாக இருக்கிறது; ஆபத்தான நேரங்களில் உதவ காவலன் செயலியை உங்கள் கைபேசியில் ஏற்றிக் கொள்ளுங்கள். இந்த ஆப் மூலம் எளிதாகவும் நேரடியாகவும் மாநில தகவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசலாம்.

காவலன் SOS மற்றும் காவலன் டயல் 100 செயலியின் நோக்கம்:

தமிழக காவல் துறை ஆபத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்த இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயிலி மூலம் பொது மக்கள் காவல் துறையின் உதவியை உடனடியாக நாடலாம். காவல் துறையை அணுக எந்த எண்ணை பயன்படுத்த வேண்டும் என்று குழம்பாமல் காவலன் செயலி மூலம் சில நொடிகளில் நீங்கள் இருக்கும் இடத்தையும் உங்கள் சிக்கலையும் காவல் துறைக்கு தெரியப்படுத்தி விடலாம்.

அவசர தேவையின்போது அதாவது இயற்கை சீரழிவு, பலாத்காரம், கடத்தல், திருட்டு, ஈவ் டீசிங் போன்ற சிக்கல்களில் இருந்து விடுப்பட இந்த செயலியை நாடலாம் என தமிழக காவல் துறை தெரியப்படுத்தியுள்ளது. மேலும் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடாமலும் புகார்களை அளிக்கலாம்.

காவலன் SOS செயலியின் செயல்பாடு:

இந்த செயலியை கூகுள் பிளே அல்லது IOSல் பெற்று உங்கள் முகவரி, கைபேசிய எண், ஆபத்தின் போது தொடர்புகொள்ள கூடிய இரண்டு உறவினர் அல்லது நண்பர்கள் எண்ணை குறிப்பிட்டு உங்கள் கணக்கை துவங்கலாம்.

image


ஆபத்து நேரத்தில் உங்களுக்கு உதவி வேண்டும் என்றால் செயலியின் SOS பொத்தனை அமுக்கினால் போதும் நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரி, உங்கள் கைபேசி பின் கேமிராவில் மூலம் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு 5 நொடிகளில் காவலர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். தகவல் பெற்ற சில நிமிடங்களிலே உதவி உங்களை தேடி வரும்.

இந்த இரு செயலிகளையும் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

செயலிகளை பதிவிறக்கம் செய்ய: Kavalan Dial 100 | Kavalan SOS

Add to
Shares
76
Comments
Share This
Add to
Shares
76
Comments
Share
Report an issue
Authors

Related Tags