பதிப்புகளில்

நீர் மேலாண்மை புரட்சியில் அசத்தும் தஞ்சாவூர் சகோதரர்கள்!

வாட்டர் டேங்குகளில் வீணாக வெளியாகும் நீரை சேமிக்க பயன்படுத்தும் அதிநவீன தானியங்கி கருவியை இந்திய தொழில்நுட்பத்திலேயே உருவாக்கி சந்தைப்படுத்தியுள்ளனர் தஞ்சை சகோதரர்கள் செங்கதிர் தேவன், திருத்தக்க தேவன்.

9th Oct 2018
Add to
Shares
395
Comments
Share This
Add to
Shares
395
Comments
Share

தண்ணீர் பிரச்னை இந்த வார்த்தையை கேட்டிராத மக்களே இல்லாமல் இல்லை. உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை டே ஜூரோ என்னும் அறிவிப்பை வெளியிடும் அளவிற்கான மோசமான வறட்சியை கூட கண்டு விட்டன. எந்தப் பிரச்னையுமே அடுத்த வீட்டில் இருக்கும் வரை ஆயிரம் அட்வைஸ்கள் கேட்காமலே வந்துசேரும். நம் வீட்டு பைப்பை திறக்கும் போது தண்ணீருக்குப் பதில் புஸ் என காற்று வரும் போது தான் இயற்கை நமக்கு வரமாக கொடுத்த தண்ணீரை சேமிக்க நாம் என்ன செய்தோம் என்று யோசனையே வரும். 

தண்ணீர் கிடைக்காமல் நரகங்களாக மாறி வரும் நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு நீர் சேமிப்பிற்கான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப ரீதியாக நாம் அன்றாடம் லிட்டர் கணக்கில் வீணடிக்கும் தண்ணீரை சேமிக்கும் வழியை ஆராய்ச்சி செய்து அதற்கான தீர்வையும் கண்டுள்ளனர் காவிரி டெல்டா மாவட்ட சகோதரர்கள்.

செங்கதிர் தேவன் (வலதுபுறம்), திருத்தக்க தேவன் (இடதுபுறம்)

செங்கதிர் தேவன் (வலதுபுறம்), திருத்தக்க தேவன் (இடதுபுறம்)


எம்இ பட்டதாரியான செங்கதிர்தேவனும், ஐஐடியில் எம்எஸ் பயின்ற திருத்தக்கத் தேவனும் பன்னாட்டு நிறுவனப் பணியை உதறிவிட்டு நாட்டு மக்களுக்காக ஏதேனும் ஆக்கப்பர்வமான செயலை செய்ய வேண்டும் என்று சொந்தமாக ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி இந்திய தொழில்நுட்பம் மூலம் நம் மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் களத்தில் இறங்கியுள்ளனர்.

“2014ம் ஆண்டில் விகேசிபிஎல் (வளர்கதிர் கிரியேட்டாரனிக்ஸ் பிரைவேட் லிமிடெட்) என்ற நிறுவனத்தை சென்னையில் தொடங்கினோம். தொழிற்சாலைகளுக்கு மென்பொருள் மற்றும் ஹார்ட்வேர் சப்ளை செய்வது, பாதுகாப்புத் துறைக்கு தேவையான ஆராய்ச்சிகளை செய்து கொடுப்பது, மெக்கட்ரானிக்ஸ் ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்டவற்றை முதலில் செய்யத் தொடங்கினோம்,”

என்று கூறுகிறார் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், மேலாண் இயக்குனருமான செங்கதிர்தேவன்.

இந்தப் பணிகளை எங்கள் நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதற்காக செய்து வந்தாலும் எங்களுடைய ஆராய்ச்சியின் மூலம் தனி மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் அன்றாடப் பிரச்னைகளுக்கு தீர்வைத் தரும் திட்டங்களையும் உருவாக்கிக் கொண்டே வந்தோம். 

தனி பிராண்டில் எங்கள் நிறுவனம் மூலம் அதனை வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தோம். அந்த வகையில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது சந்தைப் படுத்தப்பட்டு வருவது தான் வாட்டர் டேங்குகளில் பொருத்தப்படும் செயற்கை நுண்ணறிவைக் கொண்ட aitank கருவி என்கிறார் செங்கதிர்.

ஐ டேங்க் என்பது டேங்கில் உள்ள தண்ணீரின் அளவு மேலாண்மைக்காக பயன்படுத்தும் ஒரு கருவி. ஏற்கனவே சந்தைகளில் பல கருவிகள் செயல்பாட்டில் இருக்கும் நிலையில் இதில் என்ன வித்தியாசம்? என்ற போது, இருக்கிறது அது தான் எங்களின் சிறப்பான ஆராய்ச்சியும், தீர்வும் என்கிறார் செங்கதிர் தேவன்.

வாட்டர் டேங்கில் ஒரு கருவியை பொருத்தும் போது குறைந்த பட்சம் 2 மாதங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் டேங்கில் தண்ணீர் குறையும் போது தானாகவே மோட்டார் செயல்படத் தொடங்கி நீரை நிரப்பும். தண்ணீரிலேயே இருக்கும் இந்தக் கருவி விரைவில் செயல்படாமல் போய்விடுகிறது என்ற புகார் மக்களிடையே இருக்கிறது. இதனால் தேவை இருந்தாலும் மக்களுக்கு ஏற்றத் தீர்வைத் தரும் பொருளாக அது இல்லை என்பதை அறிந்து அது குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கினோம் என்கிறார் செங்கதிர் தேவன்.

ஐ டேங்க்-ன் சிறப்பே தண்ணீரை நிரப்புவது மட்டுமின்றி கச்சிதமான நீர் மேலாண்மைக்கான பிற சிறப்பு தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய கருவியாகவும் இது விளங்குவது தான் என்கிறார் செங்கதிர் தேவன். டேங்கில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா, நீரின் தன்மை என்ன, போரில் அல்லது சம்ப்பில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் எவ்வளவு வேகத்தில் டேங்கில் வந்து விழுகிறது என அனைத்தையும் அறிந்து சுயமாக செயல்படும் திறன் கொண்டது, 
image


முழுவதும் தண்ணீரிலேயே இருந்தாலும் இந்தக் கருவி எளிதில் பாதிக்கப்படாது என்பதோடு 20 ஆண்டுகள் வரை உழைக்கும் என்றும் உத்தரவாதம் தருகிறார் செங்கதிர் தேவன். சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள வாட்டர் டேங்கர் அலெர்ட் கருவிகளுக்கும் ஐ டேங்கிற்கும் இருக்கும் வித்தியாசத்தை பட்டியலிடுகிறார் செங்கதிர்தேவன்.

• ஐ டேங்க் 24•7 டேங்கில் தண்ணீர் நிரம்பி இருப்பதை உறுதிபடுத்தும்.

• உப்புத் தண்ணீர், கலங்கலான தண்ணீர் என எந்த வகை நீர் டேங்கில் இருந்தாலும் கருவியை பாதிக்காமல் நீண்ட ஆண்டுகள் உழைக்கும் திறன் கொண்டது.

• சந்தைகளில் கிடைக்கும் அலெர்ட் கருவிகளை பொருத்தும் போது சில நேரங்களில் மின்சாரம் வீட்டில் கீசெர் மற்றும் குழாய் நீரை திறக்கும் போது ஷாக் அடிக்கும் வாய்ப்பு உள்ளது, ஐடேங்கில் அந்த அச்சம் வேண்டாம். ஏனெனில் இது ஷாக் ப்ரூப் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

• ஐடேங்கை பொருத்தும் நாளில் இருந்து மோட்டார் ஆபரேட் செய்ய தனி ஆள் தேவையில்லை, தண்ணீர் குறையும் போது தானாகவே மோட்டாரை ஆன் செய்து தண்ணீரை நிரம்பியதும் தானாகவே ஆஃப் செய்துவிடும். இதனால் குடியிருப்பு வாசிகளுக்கு டென்ஷன் ப்ரீ, வேலைப்பளூ குறைவு மற்றும் தண்ணீரும் அதிகம் வீணாகுவது முற்றிலும் தவிர்க்கப்படும்.

• தண்ணீர் குழயில் வரவில்லை என்றால் மட்டுமே நாம் மோட்டாரை நாடி ஓடுவோம் இதனால் ஒருவேளை போர் வாட்டர் அளவு கீழே இருந்தால் அதிக நேரம் மோட்டார் செயல்பட வேண்டி இருக்கும், இதனால் மின்சார விரயம் என்பதோடு மோட்டாரின் ஆயுளும் விரைவில் பாழாகிவிடும். ஆனால் ஐடேங்கை பொருத்தவரை போரில் தண்ணீரின் அளவு மேலே இருக்கும் போது தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளும் இதனால் மின்சிக்கனம் மற்றும் தண்ணீர் டேங்கில் வற்றிப் போகும் நிலை ஏற்படாது.

• வீடுகளில் மின்சாதன பொருட்களுக்கு பயன்படுத்தும் ஸ்டெபிளைசர்கள் போல ஐ டேங்க் கருவியும் அதிக வோல்டேஜ் மற்றும் குறைவான வோல்டேஜில் இருந்து மோட்டாருக்கு பாதுகாப்பு அளிக்கும்.

• ஒரு வேளை தண்ணீர் இல்லாமல் மோட்டார் ஓடினால் அதனை தானாகவே ஆஃப் செய்து தண்ணீர் மற்றும் வோல்டேஜ் பிரச்னை சீரானதும் தானாகவே மோட்டாரை இயக்கும், இதனால் 30 சதவீதம் வரை மின்கட்டணம் குறையும். (இதனை வாடிக்கையாளர்கள் அனுபவ ரீதியாக உணர்ந்து கருத்துகளை பகிர்ந்துள்ளனர்)

• ஐ டேங்கை வாங்கிய உடன் வாடிக்கையாளரின் அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். விற்பனைக்குப் பிறகான சேவையில் குறைபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. வாடிக்கையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் ஐ டேங்கின் டோல் ப்ரீ எண்ணுக்கு தொடர்பு கொண்டால் புகார்கள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் சேவை வழங்கப்படும் என்கிறார் செங்கதிர்.

அடிப்படை மாடல் ஐ டேங்க் மேற்சொன்ன சிறப்பு அம்சங்களுடன் மட்டுமே செயல்படும். இதிலும் கூடுதலான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட அடுத்த கட்ட ஐ டேங்க் கருவிகளும் உள்ளன. சென்னையில் பல இடங்களில் போர் வாட்டர் கிடைக்காத நிலையில் சம்ப் நீர் அல்லது மெட்ரோ வாட்டரையே நம்பி இருக்கின்றனர். அந்த வகை டேங்குகளில் இதனை பொருத்தும் போது சம்ப்பில் நீர் குறைந்தால் உடனடியாக உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. 

இதே போன்று டேங்க் முழுவதும் காலியாகும் வரை காத்திருக்காமல் நீரின் அளவு குறையத் தொடங்கும் போதே உரிமையாளருக்கும் மெட்ரோ வாட்டர் நிலையத்திற்கும் குறுந்தகவல் அனுப்பி அலெர்ட் செய்யும் வசதியையும் ஐ டேங்க் வழங்குகிறது. இதனால் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று அடிக்கடி சம்ப்பையும் தண்ணீர் தொட்டியையும் திறந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் செங்கதிர்.

நூற்றுக்கணக்கில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள இடங்களில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படும், அத்தகைய இடங்களில் தண்ணீரின் அளவை கணக்கிடுவது சவாலான விஷயமாக இருக்கிறது. ஐடேங்கின் வாட்டர் லெவல் குறியீடு டேங்கில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை லிட்டர் கணக்கில் எளிதில் தகவலாக தந்துவிடும் என்பதும் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒரு விஷயம்.

ஏதேனும் ஒரு வீட்டில் நபர் இல்லாத பட்சத்தில் தண்ணீர் குழாயில் இருந்து அநாவசியமாக நீர் வெளியேறினால் ஐ டேங்க் கருவி அதனை கண்டறிந்து மோட்டாரை இயக்காமல் ஆப் செய்து விடும். இதனால் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும், என்று நம் அலுப்பை தீர்க்கும் அடுக்கடுக்கான விஷயங்களை கூறி ஆச்சரியப்படுத்துகிறார் செங்கதிர் தேவன். 

அடிப்படை வடிவ ஐ டேங்க் ரூ.9,500ல் தொடங்கி தேவைக்கேற்ப ரூ. 10 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐ டேங்க் தற்போது சென்னையில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்திவிட்டு வாய்வழியாக செய்த விளம்பரம் மூலமே நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளோம். 

12 நபர்களை வைத்து ஆராய்ச்சி செய்து பலகட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர் ஐடேங்க் சந்தைக்கு வந்துள்ளது. தற்போது சேல்ஸ், சர்வீஸ், பீல்டு விசிட் குழுக்கள் உள்ளிட்டவற்றை அமைத்து செயல்பட்டு வருகிறோம்.

சென்னையில் மட்டுமே தற்போது சந்தைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதலீட்டாளர்களை பெற்ற பின்னர் நாடு முழுமைக்கும் விற்பனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று தொழில் வியூகம் கூறுகிறார் செங்கதிர். 

ஐ டேங்க் சென்னைப் பெருநகர குடிநீர் வாரியத்தின் அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளிலும் பொருத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அடுத்த 5 ஆண்டில் எல்லா வீடுகளிலும் ஐ டேங்க் இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது விகேசிஎல்பி நிறுவனம்.

ஐ டேங்க் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும் என்பதோடு மின்சிக்கனமும் செய்ய முடியும் என்பதால் இது நிச்சயம் மக்களுக்கு பயனளிக்கும் ஒன்றாக இருக்கும் என்பது இவர்கள் அளிக்கும் உத்தரவாதம்.
image


பன்னாட்டு நிறுவனத்தில் பணி செய்தாலும் சுயமாக ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்று எங்களுக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. பொதுவாகவே மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வளிப்பவை என்று இந்தியாவில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் அனைத்துமே வெளிநாட்டு டெக்னாலஜியைத் தான், ஆனால் நாங்கள் இந்திய மக்களுக்காக இந்திய தொழில்நுட்பத்திலேயே ஆய்வு செய்து தீர்வு தர வேண்டும் என்று விரும்பினோம். 

ஐ டேங்க் போலவே இந்திய மக்களின் இன்னும் பிற பிரச்னைகளுக்கான தீர்வைத் தரும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில திட்டங்களைச் செய்துள்ளோம் அடுத்தடுத்து அதனை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறுகிறார் செங்கதிர் தேவன். 

குடியிருப்புகளில் தொடங்கி குடிநீர் வாரியம், தொழிற்சாலைகளுக்கான நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தில் கால் பதித்துள்ளது ஐ டேங்க். இதன் தொடர்ச்சியாக விவசாய பெருமக்களுக்கு உதவும் வகையிலான ஆராய்ச்சியில் இறங்கிய ஐ டேங்க் ஆராய்ச்சிக் குழு சில சாதனங்களை உருவாக்கியுள்ளது. இவற்றின் மூலம் இருக்கும் நீர் ஆதாரத்தை பயன்படுத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய முடியும் என்கிறார் செங்கதிர்.

மக்கள் நலனுக்காக ஆராய்ச்சித் துறையில் இறங்கியுள்ள செங்கதிர் தேவன், திருத்தக்க தேவனின் முயற்சிகள் அனைத்தும் மக்கள் இவர்களின் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி பலன் அடைவதிலேயே இருக்கிறது. 

Add to
Shares
395
Comments
Share This
Add to
Shares
395
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக