பதிப்புகளில்

பொது இடங்களில் முதியோர்களை அன்பாக அணுகுவதில் சென்னை, டெல்லி முன்னிலை...

16th Jun 2017
Add to
Shares
112
Comments
Share This
Add to
Shares
112
Comments
Share

பரப்பரப்பான நகரங்களில் ஒன்றான சென்னையில் மக்கள் அவரவர்கள் வேலைகளை கவனிப்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய காலகட்டத்தில் யார் எப்படி போனால் நமக்கென்ன என்று வாழும் மனிதர்களே அதிகம். இருப்பினும் அண்மையில் நடத்தப்பட்ட சர்வேயில், பொது இடங்களில் முதியவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் மக்களில் முதன்மை இடத்தில் டெல்லியும் அதற்கு அடுத்து சென்னைவாசிகளும் இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற மெட்ரோ நகரங்களை காட்டிலும் சென்னை மக்கள் வயதானவர்களை அதிகம் மரியாதையுடன் நடத்துவதாக அந்த ஆய்வு கூறியுள்ளது. 

பட உதவி: Shutterstock

பட உதவி: Shutterstock


’ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற பிரபல தன்னார்வ தொண்டு மையம் முதியவர்கள் வாழ்வு, அவர்கள் வீட்டிற்குள் நடத்தப்படும் விதம், வயதானவர்களுக்கான பிரச்சனைகள் என்று பல விதங்களில் அவர்களுக்கு உதவிகள் புரிய செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் முதியோர்களை மக்கள் எவ்வாறு நடத்துகின்றனர்? அவர்களிடம் அன்பாக பழகுகிறார்களா? என்பன பல விஷயங்கள் அடங்கிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் மற்ற நகரங்களை விட சென்னை மற்றும் புது டெல்லியில் உள்ள மக்கள் பொது இடங்களில் வயதானவர்களை அன்புடன் நடத்துவதாக முடிவுகள் தெரிவிக்கிறது. 

பெங்களுருவில் வாழும் முதியோர்களில் 70% பேர் அந்த ஊர் மக்களால் தவறான முறையிலும், பொது இடங்களில் நேரடியாகவும் மோசமாகவும் நடத்தப்பட்டதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சென்னையில் வசிக்கும் 49% பேரும் டெல்லியில் 23% மட்டுமே தாங்கள் அந்த ஊர் மக்களால் அன்புடன் நடத்தப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

முந்தைய ஆய்வுகளின்படி, எல்லா நகரங்களிலும், சுமார் 50 சதவீத முதியோர்கள் வீட்டிற்குள் மரியாதை இல்லாமல் நடத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் தற்போதைய ஆய்வில், சுமார் 44% முதியோர்கள் இந்தியா முழுதும் உள்ள பொது இடங்களில் அவமரியாதையையும், இழிவுகளையும் சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். 

’உலக முதியோருக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு தினமான ஜூன் 15-ம் தேதி ஹெல்ப் ஏஜ் இந்தியா, 19 நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. சுமார் 4,700 முதியோர்களை டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களுரு, அகமதாபாத், புவனேஷ்வர், கெளஹாத்தி, ஹைதராபாத் மற்றும் லக்னெள நகரங்களில் ஆய்வு செய்த போது இந்த முடிவுகள் கிடைத்துள்ளது. 

ஹெல்ப் ஏஜ் இந்தியா சிஇஒ மேத்யூ செரியன் டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் கூறியபோது,

“முதியோர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி பல ஆண்டுகளாக நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். வீட்டிற்குள் நடக்கும் வன்முறையை தாண்டி பொது இடங்களில் வயதானோர் எப்படி நடத்தப்படுகின்றனர் என்று அறிந்து கொள்ள இந்தாண்டு ஆய்வு நடத்தினோம். இது சிந்திக்கக்கூடிய முடிவுகளை தந்துள்ளது,” என்றார். 

இளம் வயதில் ரத்தம் துடிப்புடன் இருக்கையில் எதையும் செய்ய தோன்றினாலும், நாமும் ஒரு நாள் முதியோர் ஆகி நாடி நரம்பு அடங்க பிறரின் உதவியோடும், துணையோடும் வாழும் நிலை வரும் என்பதை உணர்ந்து வீடு, பொது இடம் என்று எல்லா இடங்களிலும் வயதானவர்களை அன்புடன் நடத்த முயற்சிப்பதே மனிதநேயமாகும். 

Add to
Shares
112
Comments
Share This
Add to
Shares
112
Comments
Share
Report an issue
Authors

Related Tags