பதிப்புகளில்

ஸ்வைப்பிங் கருவியில் கார்ட் மூலம் பணம் செலுத்தி இனி கேஸ் சிலிண்டர் வாங்கலாம்!

YS TEAM TAMIL
22nd Dec 2016
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

தமிழ்நாட்டில் வசிக்கும் இண்டேன் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் வாங்கும் கேசுக்கான கட்டணத்தை டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் செலுத்தமுடியும். வீடுகளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்ய வரும் ஊழியர்கள், கையில் ஸ்வைப்பிங் மெசினோடு இனி வருவார்கள். வரும் ஜனவர் 1-ஆம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருமென தெரிகிறது. 

image


வங்கிகளிடம் இருந்து ஸ்வைப்பிங் கருவியை பெற்று கேஸ் ஏஜெண்டுகள், டெலிவரி ஊழியர்களிடம் அதை கொடுத்து அனுப்புவார்கள். பிடிஐ செய்திகளின் படி, இண்டேன் கேஸ் மேலதிகாரி ஒருவர் கூறுகையில்,

“ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைத்து, டிஜிட்டல் முறையில் கட்டணங்களை செலுத்த ஊக்குவிக்கும் அரசின் முடிவால், ஸ்வைப்பிங் மெசின் உபயோகிக்க முடிவெடுத்துள்ளோம். வரும் புத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இது தொடங்கும். வங்கிகளிடம் கருவிகளை பெற ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அவை வந்துவிடும். டெலிவரி செய்பவர் கேஸ் சிலிண்டருடன் இதையும் கையில் எடுத்துச்செல்வார்கள்,” என்றார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாடு முழுதும் சலசலப்பை ஏற்படுத்தி, பணத்திற்கான தேவையை அதிகரித்துள்ளது. ஏடிம்’ களில் தொடரும் நீண்ட வரிசைகளால் பணத்தட்டுபாடு நிலவி வருகிறது. வங்கிகளிலும் கூட்ட நெரிசல், மற்றும் குறைவான ரூபாய் நோட்டுகளின் வருகையால் பலரிடம் சில்லறை தட்டுபாடும் ஏற்பட்டுள்ளது. 

பணமில்லா வர்த்தகம் அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனையை அரசு ஊக்குவித்து வருவதால், பல சிறிய வர்த்தகர்கள், ஹோட்டல்கள் மற்றும் பெட்டி கடைகள் கூட ஸ்வைபிங் மெசினை பயன்படுத்தி வர்த்தகம் மேற்கொள்ள தொடங்கி வருகின்றனர். ஆன்லைன் தளங்களான பேடிஎம், ஃப்ரீசார்ஜ் போன்றவை மூலம் வாடிக்கையாளர்கள் கட்டணங்களை செலுத்த ஆரம்பித்துள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் சில நன்மைகளும், பிரச்சனைகளும் சேர்ந்து உள்ளது என்பதை பார்க்கமுடிகிறது. 

அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் டிஜிட்டல்மயமாக்கப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதால், இண்டேன் கேஸ் விற்பனையும் அதே வழியை பின்பற்ற முடிவு செய்து, கார்ட் மூலம் கட்டணத்தை பெற நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. 

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக