பதிப்புகளில்

’MobileSparks 2016’- இந்தியாவின் சிறந்த 10 மொபைல் ஸ்டார்ட்-அப்ஸ் ஒரு பார்வை!

YS TEAM TAMIL
20th Nov 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

யுவர்ஸ்டோரி நடத்திய ’டெக்ஸ்பார்க்ஸ்’ நிகழ்ச்சியில் சிறந்த 30 இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்’களை அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக யுவர்ஸ்டோரியின் ‘மொபைல் ஸ்பார்க்ஸ்’, மொபைல் போன் துறையில் சிறந்து விளங்கும் ஸ்டார்ட்-அப்’ களை வெளியிட்டது. 

யுவர்ஸ்டோரியின் ‘மொபைல்ஸ்பார்க்ஸ்’ இந்த ஆண்டு தனது ஐந்தாவது பதிப்பை சிறப்பாக நடத்தியது. Haptik, CultureAlley, DriveU, MyChildApp, Squadrun, மற்றும் MadStreetDen போன்ற பிரபல மொபைல் துறையில் உள்ள ஸ்டார்ட்-அப்’ கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

image


5BARz: நம் மொபைல் போன்களில் சிக்னல் பிரச்சனை இல்லாதோரே இருக்கமுடியாது. பல நெட்வர்க்கில் செயல்படும் மொபைல் போன்களின் சிக்னலை மேம்படுத்த உதவும் 5BARz ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இவர்கள் காரியர்-க்ரேட் தொழில்நுட்பத்தை கொண்டு தயாரித்துள்ள கருவியை வாடிக்கையாளர்கள் வீடு, அலுவலகங்களில் இருக்கும்போது போனுடன் இணைத்து கொண்டால் உங்கள் போனின் சிக்னல் அதிகரிக்கும். 

Adoro: இது பேஷனுக்கான உதவியாளன் போல் இயங்கும் ஆப். செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயங்கும் இது, பயனாளிகளுக்கு ஏற்ற பொருட்கள், ஆடைகள் மற்றும் ஸ்டைல்களை அவரவரின் விருப்பத்திற்கேற்ப வெளிப்படுத்தி உதவும். 

Appaie: மென்பொருள் தயாரிப்பை தானியங்கி ஆக்க உருவாக்கப்பட்டுள்ள ஆப் இது. தகவல்கள், பாட்’கள் பற்றிய விளக்கங்கள், பாடங்கள், மற்றும் மெஷின் லேர்னிங் குறித்தும் இதில் உள்ளது. இதில் உள்ள பாட்’கள் கோடிங் செய்து, டெவலப்பர்களுக்குத் தேவையான உத்தரவை தந்து ஒரு மென்பொருளை உருவாக்க, செயல்படுத்த உதவும். 

Datamail: மொபைல் துறையில் உள்ள மொழிப் பிரச்சனையை களைந்து எரிய உதவும் தளம். இது பல மொழிகளில் இ-மெயில் ஐடி’க்களை தயாரித்து தரும். Xgenplus தயாரித்துள்ள இந்த தீர்வு, ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் தெரியாத மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

Finomena: இது ஒரு எண்ட் டூ எண்ட் பிக் டேட்டா அடிப்படையில் இயங்கும் பயனர்களுக்கு உதவும் நிதி சம்மந்தமான தளம். ஆன்லைல் மற்றும் ஆஃப்லைனில் இருக்கும் இது 500 மில்லியன் இந்தியர்களுக்கு உதவக்கூடியது. கடன் கேட்போர் பெரும்பாலும் காரணங்கள் இல்லாமல் மறுக்கப்படுகின்றனர். இதை மாற்றி அமைத்து, சரியான கருத்துக்களுடன், இத்துறையை வெளிப்படையாக ஆக்க முயற்சிக்கிறது. 

GreyKernel: பிறரின் தொழில் வளர்ச்சிக்கும், தயாரிப்பை விளம்பரப்படுத்த உதவும் தளம். இது 360 டிகிரி வீடியோ, போட்டோ மற்றும் உரையாடல்களை உருவாக்கி தயாரிக்கும். 

Markt.ooo: இது ஜீரோ கமிஷன் சந்தை இடம் ஆகும். இ-காமர்ஸ் தளத்தில் இயங்கும் வர்த்தகர்களுக்கு உதவுகிறது Markt.ooo. அவர்களிடம் உள்ள சரக்கு மற்றும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வாங்கியுள்ள விகிதம் குறித்து தகவல் அளிக்கும்.  

MoneyTap: இது செயலி வடிவில் உள்ள கடன் அளிக்கும் தளம். உங்களுக்கு தேவையான கடனை கேட்ட நேரத்தில், கோலாட்டரல் எதுவும் கேட்காமல் உடனடியாக அளிக்கும். இது முழுநேர நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும். மாத சம்பளம் ரூ.25000 மேலுள்ளவர்களுக்கு இது கடனை அளிக்கும். 

Pictor: இ-காமர்ஸ் சந்தையில் உள்ள வர்த்தகர்கள் தங்களின் பொருட்களின் படத்தை ஆன்லைனில் வெளியிட அழகாக ஆக்கித் தரும் தளம். நீங்கள் ஒரு படத்தை க்ளிக் செய்து இவர்களுக்கு அனுப்பினால் அதை மெருக்கேற்றி, பார்வையாளர்களை கவரும் வகையில் டச்-அப் செய்து தருவார்கள்.

StintMint: பெரிய நிறுவனங்கள் தங்களிடம் உள்ள உழைக்கும் வர்கத்தின் தேவைகளை அறியவைக்கும் தளம். இவர்கள் வேலை மற்றும் தொழிலாளர்கள் மேலாண்மையில் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க செயல்பட்டு வருகின்றனர். 

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக