பதிப்புகளில்

இ-மெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்...

16th Apr 2018
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share

ஓல்ட் ஈஸ் கோல்ட் என்று சொல்லப்படுவது இமெயிலுக்கு நிச்சயம் பொருந்தும். அதனால் தான் தகவல் தொடர்புக்கு மேசேஜிங் செயலிகள் எல்லாம் வந்த பிறகும் இமெயில் இன்னமும் தாக்குப்பிடித்து நிற்கிறது. அதைவிட முக்கியமாக இமெயில் இன்னமும் பொருத்தமானதாக நீடிக்கிறது. அலுவலக பயன்பாட்டிற்கும் சரி, தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் சரி இமெயில் தொடர்பு எண்ணற்ற விதங்களில் ஏற்றதாக இருக்கிறது. இமெயில் அனுப்பி வைக்கும் வசதியை கொண்டு புதுமையான சேவைகளையும் உருவாக்குவதும் சாத்தியமாகிறது.

image


இதற்கு அழகான உதாரணமாக அமெரிக்க மென்பொருள் வல்லுனர் பிராட்போர்டு உல்ப், இமெயில் சார்ந்த சுவாரஸ்யமான சேவையை உருவாக்கி இருக்கிறார். தினம் ஒரு இமெயில் அனுப்பும் பழைய உத்தியை பயன்படுத்தி அவர் இந்த புதிய சேவையை உருவாக்கி இருக்கிறார். டூத்பேஸ்ப்ட்.காபி (toothpaste.coffee) எனும் விநோதமான பெயர் கொண்ட இந்த சேவையை அறிமுகம் செய்து கொள்ளும் போது உங்களுக்கும் நிச்சயம் வியப்பு ஏற்படும். அந்த அளவுக்கு ஈர்ப்புள்ளதாக இந்த சேவை அமைந்துள்ளது.

30 நாளில் ஆங்கிலம் கற்கலாம் என்றெல்லாம் கூறப்படுவது போல, ’30 நாட்களுக்கான புதுமையான சவால்கள்’ என இந்த சேவை குறிப்பிடுகிறது. இதில் பங்கேற்க உங்கள் இமெயில் முகவரியை சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு தினமும் உங்கள் இன்பாக்சிற்கு ஒரு மெயில் எட்டிப்பார்க்கும். அந்த மெயிலில் உங்களுக்கான சவால் இடம் பெற்றிருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த சவாலை எதிர்கொண்டு பதில் மெயில் அனுப்பி வைப்பது தான்.

சவால்கள் என்றால் எப்படிப்பட்டவை?

ஏதேனும் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண உங்களை யோசிக்கும்படி தூண்டும் நோக்கம் கொண்டவையாக இந்த சவால்கள் அமைந்திருக்கும் என டூத்பேஸ்ட்.காபி இணையதளம் தெரிவிக்கிறது. இமெயிலில் அனுப்பி வைக்கப்படும் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் யோசித்து அதற்கான தீர்வை அனுப்பி வைக்க வேண்டும்.

நீங்கள் அனுப்பி வைக்கும் தீர்வு எப்படி எல்லாம் இருக்கலாம் என்பதற்கான அடிப்படை வழிகாட்டுதலும் கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கலாம், ஏற்கனவே உள்ளதை மேம்படுத்தலாம், மாற்றி அமைக்கலாம், புதிய வழி காணலாம் மற்றும் முற்றிலும் புதிய தீர்வை உருவாக்கலாம் என ஐந்து விதமான வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இமெயில் வரும் சவாலுக்கு ஏற்ப நீங்களாக யோசித்து ஒரு புதிய தீர்வை உருவாக்கி அனுப்ப வேண்டும் என்பது தான் இந்த சேவையின் நோக்கம். இப்படி தினம் ஒரு இமெயில் சவால் வந்து சேரும். பயனாளிகள் தங்கள் யோசனைகளை பதில் மெயிலாக அனுப்பி வைக்கலாம் அல்லது இந்த சேவைக்காக என்று உருவாக்கப்பட்டுள்ள டிவிட்டர் முகவரி மூலம் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளலாம்.

புதிய பொருள் அல்லது புதிய சேவையை உருவாக்க வேண்டும் எனும் விருப்பத்துடன் ஸ்டார்ட் அப் மனநிலையில் உள்ளவர்களுக்கு இந்த சேவை நிச்சயம் ஈர்ப்புடையதாக இருக்கும். பொதுவாக கிரியேட்டிவாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டிருப்பவர்களும் இந்த சேவையை பயனுள்ளதாக நினைக்கலாம்.

பொதுவான ஒரு பிரச்சனை குறித்து யோசித்து அதற்கான தீர்வுகளை பலவித கோணங்களில் யோசித்து பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு சுவாரஸ்யமானது தான். அடுத்ததாக என்ன சவால் இமெயிலில் வரும் எனும் எதிர்பார்ப்போடு, சக உறுப்பினர்கள் எத்தகைய யோசனைகளை எல்லாம் சமர்பித்திருக்கின்றனர் என தெரிந்து கொள்வதும் கூட சுவாரஸ்யமாகவே இருக்கும். புதிய சேவைக்கான ஊக்கமாக கூட இவை அமையலாம்.

அந்த வகையில் இந்த சேவையை இணையம் சார்ந்த கூட்டு ஆலோசனை முயற்சி என குறிப்பிடலாம். இந்த சேவையை உருவாக்கிய மென்பொருளாலர் உல்பும் அப்படி தான் கருதுகிறார். உருவாக்குனர்களும், புதுமையாளர்களும் ஒரிடத்தில் கூடி, பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை பகிர்ந்து கொண்டு அவற்றுக்கான யோசனைகளை கலந்தாலோசிக்கும் வகையிலான ஒரு இணைய சமூகத்தை உருவாக்க முடிந்தால் எப்படி இருக்கும் எனும் எண்ணத்தின் விளைவாக இந்த தளத்தை அமைத்ததாக, உல்ப் இந்த சேவை தொடர்பாக எழுதியுள்ள மீடியம் வலைப்பதிவில் ( https://medium.com/@Bradford_Wolf/toothpaste-coffee-fdab2fe4f369) குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக நிறுவனங்கள், பிரச்சனைக்கு தீர்வு காண நடத்தப்படும் ஆலோசனைகள் பிரைன் ஸ்டார்மிங் என குறிப்பிடப்படுகிறது அல்லவா? அதே போல பிக்சார் அனிமேஷன் நிறுவனம் இதற்காக என்ரே பிரைன் டிரெஸ்ட் எனும் குழுவை உருவாக்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதே பாணியில் இணையத்தில் ஒரு கூட்டு பிரைன் டிரஸ்ட்டை உருவாக்கும் முயற்சியாக, 30 நாட்களுக்கான இமெயில் சவாலை அனுப்பி வைத்து அவை சார்ந்த கூட்டு தீர்வு சமூகத்தை உருவாக்க முயல்வதாக உல்ப் குறிப்பிட்டுள்ளார்.

image


இந்த சேவை அறிமுகமாகி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், இதுவரை அனுப்பி வைக்கப்பட்ட சவால்கள் சார்ந்த தீர்வுகள் மற்றும் அவற்றின் அடிப்படையிலான உரையாடல்களை இந்த தளத்திலும், தொடர்புடைய டிவிட்டர் முகவரியிலும் பார்க்க முடிகிறது. பலரும் ஆர்வத்துடன் தங்கள் யோசனைகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்த புதுமையான சேவை எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என பார்க்கலாம்.

இமெயில் அனுப்பி வைக்கும் வசதியை, கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து இப்படி புதுமையாக பயன்படுத்தலாம் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த சேவைக்கு ஒரு சபாஷ் போடலாம். நீங்களும் கூட, இதே நோக்கில் சிந்திக்கலாம். நிற்க, இமெயிலின் அருமையை இன்னும் நன்றாக விளக்கிக் கூறும் கட்டுரையை மைக் எல்கன் என்பவர் எழுதியிருக்கிறார். 

இமெயிலை எப்படி சமூக வலைப்பின்னல் சேவையாக பயன்படுத்தலாம் என்பது இந்த கட்டுரையின் மையம். ஃபேஸ்புக்கின் தகவல் திரட்டல் செய்திகளால் அதிருப்தி இணைய உலகம் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில், இமெயில் எப்படி இதற்கு ஒரு தீர்வாகும் என இந்தக்கட்டுரை விளக்குகிறது. : https://www.computerworld.com/article/3267698/email/why-email-is-the-best-social-network.html

Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக