பதிப்புகளில்

அம்மாவின் கைப்பக்குவ மீன் குழம்பு, வறுவல், இரால் தொக்கு வேண்டுமா...?

கடல் உணவுகள் மீதான ஆர்வத்தால் சென்னையில் ஆன்லைன் மூலம் சீ ஃபுட்களை விற்பனை செய்யும் Something Fishy தொடங்கிய பொறியாளர்!

Mahmoodha Nowshin
18th Aug 2018
Add to
Shares
65
Comments
Share This
Add to
Shares
65
Comments
Share

பெரும்பாலும் உணவு பிரியர்கள் பல வகையான உணவை தேடி உண்பது வழக்கம். ஆனால் இங்கு ஒரு உணவுப் பிரியர், தனக்கு பிடித்த கடல் உணவுகள் எங்கும் சிறப்பாக அமையவில்லை என்று அதேயே தனது தொழிலாக எடுத்துக்கொண்டார்.

சம்திங் ஃபிஷி (Something Fishy) கடல் உணவு நிறுவனத்தின் நிறுவனர் பூர்ணசந்தர். 2014 பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர், கடல் உணவுப் பிரியர், மற்ற உணவுகளை போல கடல் உணவுகள் எல்லா உணவகங்களிலும் நாம் எதிர்ப்பார்க்கும் அளவு கிடைப்பதில்லை. நமக்கு பிடித்த உணவை உண்ண எல்லா நேரமும் பெரிய உணவகங்களை நாட முடியாது அதை மாற்றும் நோக்கிலே சம்திங் ஃபிஷி உருவானது என்கிறார் பூர்ணச்சந்தர்.

Something Fishy நிறுவனர் பூர்ணசந்தர்

Something Fishy நிறுவனர் பூர்ணசந்தர்


“வேலைக்காக முதலில் வீட்டைவிட்டு வெளியேறிய போது தான் வீட்டு உணவின் அருமை புரிந்தது. பணம் இருந்தாலும் நாம் எதிர்பார்க்கும் அம்மாவின் உணவு ருசி எங்கும் கிடைப்பதில்லை..”

இதுவே உணவு ரீதியான ஸ்டார்ட்-அப் துவங்க முதல் தாக்கம் என்கிறார் பூர்ணச்சந்தர். அதிலும் கடல் உணவை தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம் நண்பர்களுடன் எளிய சீ ஃபுட் உணவுகளை உண்ண வேண்டும் என்றால் பெரிய நட்சத்திர உணவகங்கள் மட்டுமே முதலில் நமக்கு தோன்றுவதாக குறிப்பிடுகிறார்.

“நான் சென்னை மெரினாவை சுற்றி வளர்ந்தாலும் நல்ல கடல் உணவை உண்ண மகாபலிபுரம் வரை செல்வோம். அதுவும் நாம் வீட்டில் உண்பதற்கு இணையாக இல்லை; இதுவே நான் கடல் உணவை தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம்,” என்கிறார்.

பட்டபடிப்பை முடித்துவிட்டு சென்னை மற்றும் பெங்களூரில் 3 வருடம் பணிபுரிந்தப்பின் சுயதொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து சென்னையில் சம்திங் ஃபிஷி இ-காமர்ஸ் நிறுவனத்தை கடந்த ஆண்டு நிறுவினார் இவர்.

image


தனது கருத்தை மட்டும் முன்னிலைப் படுத்தி தொழில் தொடங்குவது சரியில்லை, அதிலும் நிலையற்ற உணவுத் துறையில் நிறைய ஆராய்ச்சிகள் வேண்டும் என்று உணர்ந்து பல ஆராய்ச்சிகள் செய்து கருத்து கணிப்பை மேற்கொண்டார். மாணவர்களில் தொடங்கி பெரியவர்கள் என 600 பேரிடம் கருத்துக்கணிப்பு எடுத்த பின்னரே தனது தொழில் துவக்கத்தில் உறதி கொண்டார் பூர்ணச்சந்தர்.

“கருத்துக்கணிப்பில் கடல் உணவின் சுத்தம், விலை, செய்முறை, நாற்றம் இவை எல்லாம் வெளியில் கடல் உணவை எடுத்துக்கொள்ள தடையாய் இருந்தது,” என்கிறார்.

இதனால் நாம் வீட்டில் உண்ணும் மீன் வறுவல், இரால் தொக்கு, மீன் குழம்பு போன்ற வற்றை அம்மா கைப்பக்குவம் போல் வழங்குவதே இவரது விற்பனை புள்ளியாக எடுத்துக் கொண்டார் இவர். மேலும் தனது குடும்பம் கடல் உணவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டிருந்ததால் மூலப் பொருட்களை பெறுவது அவருக்கு சவாலாக இல்லை. அதனால் தான் சேமித்த பணத்தை முதலீடாக வைத்து இந்த நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

image


சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் தங்களது சேவைகளை வழங்கும் இவரது நிறுவனம் சமைத்த கடல் உணவுகள் மட்டுமின்றி மீன்கள், இறால் மற்றும் ரெடி டு குக் பொருட்களை விற்கின்றனர். நிறுவனத்தை துவங்கி ஓராண்டு ஆன நிலையில் சென்னையில் பிரத்யேகமாக கடல் உணவு உணவகத்தை கூடிய விரைவில் துவங்கவுள்ளது இந்நிறுவனம். மேலும் வேலைக்கு செல்பவர்களுக்கு லன்ச் பாக்ஸ் சேவையையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

“உண்ண கடல் உணவு அல்லது சமைக்க கடல் மீன்கள் என்று நினைத்தாலே சம்திங் ஃபிஷி முன்னிலையில் வர வேண்டும். இதை நோக்கிய எனது பயணம் அமைகிறது, சென்னையில் பெரும் பிராண்டாக உருவாக்கி தேசிய அளவில் எடுத்து செல்வதே எனது நோக்கம்,” என முடிக்கிறார். 

வலைதள முகவரி: Something Fishy

Add to
Shares
65
Comments
Share This
Add to
Shares
65
Comments
Share
Report an issue
Authors

Related Tags