பதிப்புகளில்

142 நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட அஷான்க் துபே எம்பிஏ படிப்பை கனவாகக் கொண்டுள்ளவர்களுக்கு உதவுகிறார்

பொறியாளர் அல்லாத ஆங்கிலப் புலமையில்லாத ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட பயத்தை போக்கி 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் CAT மற்றும் IIT-JEE தேர்வுகளில் வெற்றிபெற உதவியுள்ளார்.

7th May 2017
Add to
Shares
34.9k
Comments
Share This
Add to
Shares
34.9k
Comments
Share

2017-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி மாலை 3.45 மணியளவில் 28 வயதான அஷாங்க் துபே ஃபேஸ்புக் வாயிலாக ஒரு நல்ல செய்தியை தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டார். ஐஐஎம் நடத்தும் தேசிய அளவிலான மேலாண்மை நுழைவுத் தேர்வான காமன் அட்மிஷன் டெஸ்ட்டில் (CAT) தேர்ச்சி பெற்றுவிட்டார். வாய்மொழித் திறன் மற்றும் வாசித்து புரிந்துகொள்ளுதல், தரவு விளக்கம் மற்றும் லாஜிக்கல் ரீசனிங், க்வாண்டிடேடிவ் திறன் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளில் 98.6, 99.99 மற்றும் 99.96 பெர்சண்டைல் பெற்றார். இந்தியா முழுவதிலும் 100 பெர்சண்டைல் ஒட்டுமொத்த மதிப்பெண் பெற்ற 20 பேரில் அஷாங்க் ஒருவர்.

அஷான்க் மற்றவர்களைப் போல இந்தியாவின் மதிப்புமிக்க மேலாண்மை நிறுவனங்களில் சேருவதற்காக CAT எழுதவில்லை. ஆங்கில மொழியின் மேல் அவருக்கு இருந்த பயத்தை போக்குவதற்காகவே எழுதினார். கணிதப் பிரிவில் பட்டம் பெற்ற இவர் 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் அதிகம் சிரமப்பட்டார். ஆங்கிலத்தில் பேசும் திறன் குறைவாக இருந்ததால் பல நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டார். கோரமங்கலாவிலுள்ள அவரது அலுவலகத்தில் யுவர் ஸ்டோரியுடன் உரையாடுகையில்,

ஒரு வருடத்திற்குள் 142 நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டேன். என்னிடம் அந்த நிறுவனங்களின் பட்டியல் உள்ளது.

இன்று, 2017-ம் ஆண்டில் அவரது கனவு வேலையை அடைவதற்கு பதிலாக ஆயிரக்கணக்கானோர் தங்களது கனவு B-ஸ்கூலுக்குள் நுழைய உதவுகிறார்.

 

image


பொறியியல் படிப்பிற்கு பதிலாக கணக்கை தேர்ந்தெடுத்தார்

ஞாயிற்றுக்கிழமை மதிய வகுப்பை முடித்த கையோடு வகுப்பறைக்கு அருகிலிருந்த அவரது அறையில் அமர்ந்திருந்த அஷான்க் தன்னுடைய வெற்றிக்கதையை நினைவுகூர்ந்தார். இளம் வயதிலிருந்தே கணிதப் பாடத்தில் அதிக விருப்பமிருந்ததால் பொறியியல் துறையை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக கணிதப் பிரிவில் பட்டம் பெற எண்ணினார். ஆனால் பட்டப்படிப்பை முடித்தவுடன் அதிர்ச்சியடைந்தார். அவர் நினைவுகூறுகையில்,

இந்தியாவில் கணிதம் முடித்த பட்டதாரியை யாரும் மதிப்பதில்லை. எண்கள் அல்லது பகுப்பாய்வு திறனுக்கு துளியும் சம்பந்தமில்லாத பணியையே வழங்கவே முன்வந்தனர். இந்த நாட்டில் பொறியியல் படிப்பு முடிக்காதது ஒரு மிகப்பெரிய பாவச்செயல் என்றே நினைக்கத்தோன்றுகிறது.

தொடர்ந்து நிராகரிக்கப்பட்டபோதும் தனது பகுப்பாய்வு திறனை ஊக்குவிக்காத பணிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்கிற கொள்கையில் திடமாக இருந்தார். இதனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே 142 நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டார். அந்த சமயத்தில் பணத்தட்டுப்பாடு இருந்தது. மன அழுத்தம் அதிகமாகவே இருந்தது. இவற்றுடன் அவரது ஆங்கிலம் பேசும் திறன் மோசமாக இருந்தது பணியில் சேருவதற்கு மற்றொரு தடையாக இருந்ததை உணர்ந்தார். அவர் பொறியாளர் அல்ல, ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியவில்லை, வெகுவாக பாராட்டக்கூடிய அளவிலான திறன் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் அஷான்க்கின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே காணப்பட்டது.

CAT கனவு

அஷான்க் எம்பிஏ படிக்க விரும்பவில்லை. ஆனால் 2009-ல் CAT மற்றும் CAT போன்ற எம்பிஏ நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் திறனைச் சார்ந்தே அவரது வாழ்க்கைப் பாதை இருக்கும் என்பதை உணர்ந்தார். எணகள் சார்ந்த் திறன்களில் அவருக்கு நம்பிக்கை இருந்ததால் வாய்மொழித் திறனை மேம்படுத்த ஒரு மாத கால அவகாசம் எடுத்துக்கொண்ட பிறகே CAT 2009 எழுதினார். அவர் விவரிக்கையில்,

அந்த வருடம்தான் CAT ஆன்லைனில் தொடங்கியது. ஜனவரி மாதம் 2009-ம் ஆண்டுதான் எனக்கான இ-மெயில் முகவரியைத் துவங்கினேன். இதன்மூலம் எனக்கிருந்த டிஜிட்டல் திறனை அறியலாம்.

ரிசல்ட் வெளியான அந்தத் தருணம் வலி வேதனையுடன் இணைந்த ஒரு மகிச்சியை அஷான்க்கால் உணரமுடிந்தது. Quant பிரிவில் 99.65 ஸ்கோர் செய்திருந்தார். ஆனால் வாய்மொழிப் பிரிவில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தார். இதனால் ஒட்டுமொத்த மதிப்பெண் குறைந்தது. அவர் கலக்கமடைந்தார்.

இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் Quantitative திறனைக் கொண்டே வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். Quant ஆசிரியராக டெல்லியிலுள்ள CAT கோச்சிங் நிறுவனத்தில் பணிபுரியத் துவங்கினார். சம்பளம் அதிகமில்லையெனினும் பணி சூழல் அவருக்குப் பிடித்திருந்தது. பல Quant கேள்விகளிலும் அதன் தீர்வுகளிலும் கவனம் செலுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ”வெவ்வேறு CAT/GMAT ஃபாரம்களிலிருந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தீர்வளித்தேன். மெல்ல மெல்ல நானே கேள்விகளை தொகுக்கத் தொடங்கினேன்.” என்று நினைவுகூர்ந்தார்.

CAT-ல் அதிக ஸ்கோர் பெறுவதற்கு ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தார். quant கற்றுக்கொடுக்க விரும்பினார். அதனுடன் மற்றொரு நோக்கமும் அவருள் எழுந்தது. ஆங்கிலம் பேசும் திறன் மோசமாக இருந்தாலும் அவரால் வெற்றியடையமுடியும் என்பதை நிரூபிக்க நினைத்தார். அவர் கூறுகையில்,

எந்த ஒரு quant கேள்வியை எடுத்துக்கொண்டாலும் ஐந்து நிமிடங்களில் ஐந்து வெவ்வேறு முறையில் அதற்கு விடையளிக்கும் திறன் யாருக்கு உள்ளதோ அவர்தான் சிறந்த ஆசிரியர். இதை நான் நிரூபிக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். கற்றுக்கொடுக்கும் மொழி ஆங்கிலமா, இந்தியா அல்லது சைகை மொழியா என்பது முக்கியமல்ல.

திருப்புமுனை

கொச்சிங் நிறுவனத்தில் பின்னணியில் பணிபுரிந்து வந்தாலும் ஆசிரியராக முன்னிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு அஷாங்க்கிற்கு கிடைத்தது. மாணவர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு காரணமாக அஷாங்க் விரைவிலேயே முழு நேர ஆசிரியராக பொறுப்பேற்றார். அவர் கூறுகையில்,

இப்படித்தான் ஆசிரியர் பணி மீதான ஆர்வம் துவங்கியது. என்னுடைய நன்மைக்காகவே அந்த 142 நிறுவனங்களும் என்னை நிராக்கரித்தது. என்னுடைய வாழ்க்கைப்பாதையை கண்டறிந்துவிட்டேன்.

ஆனால் அஷாங்க் அவரது எம்பிஏ கனவை கைவிடவில்லை. தொடர்ந்து கேள்விகளுக்கான தீர்வுகளை கண்டறிந்தவாறே அடுத்தடுத்த CAT தேர்வுகளை எழுதினார். ஆனால் கிட்டத்தட்ட அதே ரிசல்ட்தான் கிடைத்தது. Quant-ல் 99.xx பெர்சண்டைல் பெற்றபோதும் வாய்மொழிப் பிரிவில் 80 பெர்சண்டைலுக்கும் குறைவாகவே பெற முடிந்தது. இதனால் அவரது கனவு B-School எட்டா உயரத்திலேயே இருந்தது.

புதிய துவக்கம்

அதன் பிறகு ஜனவரி மாதம் 2012-ம் ஆண்டு அவரது கனவாக இருந்த எம்பிஏ படிப்பதை விட்டுவிட்டு அவரது பலமான quant-ல் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்தார். பெங்களூருவிற்கு சென்று அவரது நண்பர்களுடன் இணைந்து ’டெஸ்ட்க்ராக்கர்’ (TestCracker) எனும் நிறுவனத்தைத் துவங்க திட்டமிட்டார். Quant பிரிவை அவர் பார்த்துக்கொள்வதாகவும் வாய்மொழிப் பிரிவை மற்றவர்கள் கவனித்துக்கொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

முதல் ஆறு மாதங்கள் கடினமாகவே கடந்தது. கோரமங்கலாவில் TestCracker அலுவலகம் அமைக்கப்பட்டபோதும் அதிகமான வாடகை மற்றும் பிற CAT பயிற்சி மையங்களுடனான போட்டி காரணமாக TestCracker அதிக லாபம் ஈட்டி சிறப்பாக செயல்படமுடியவில்லை. முயற்சியை கைவிட எண்ணினார். ஆனால் சிறிது காலம் பொறுமையாக இருக்க முடிவெடுத்தார். அடுத்தகட்ட முயற்சியாக க்ரைஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஜோதி நிவாஸ் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்கத் தொடங்கினார்.


image


ஒரு ப்ராண்டை உருவாக்கவும் கோரமங்கலா அலுவலகத்தில் வார இறுதியில் நடைபெறும் வகுப்புகளுக்கு அதிகம் பேரை இணைத்துக்கொள்ளவும் உதவியது. IIT-JEE, வங்கி நுழைவுத்தேர்வுகள் போன்றவற்றையும் குழுவினர் முயற்சித்தனர். இருப்பினும் தொடர்ந்து CAT-ல் கவனம் செலுத்தி வந்தனர். இதுவரை சுய முதலீட்டில் இயங்கி CAT மற்றும் IIT-JEE தேர்வுகளுக்காக 2,500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்க்கு பயிற்சியளித்துள்ளதாக தெரிவித்தார் அஷான்க். 2017-ம் வருடத்திற்கான மாணவர்கள் சேர்க்கையில் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகிறது டெஸ்ட்க்ராக்கர்.

எங்களது தத்துவம் மிகவும் எளிமையானது. போரில் நீங்கள் அமைதியாக செயல்படும்போது சேதம் குறைவாக இருக்கும். CAT 2015 மற்றும் 2016-ல் சிறந்த ரிசல்ட் அளித்துள்ளோம். எங்களது பயணம் இப்போதுதான் துவங்கியுள்ளது.

இதுவரை அஷான்க் எட்டு முறை CAT எழுதியுள்ளார். ஐஐஎம்-ல் சேருவதற்காக் இல்லாமல் அந்த வருட தேர்வு முறை குறித்து அறியவும் இரண்டு லட்சம் பேருடன் ஒப்பிட்டு அவரை மதிப்பிடவும் எழுதுகிறார். எட்டு முறை 99 பெர்சண்டைல் எடுத்துள்ளதாகவும் 2015-ல் 100 பெர்சண்டைல் எடுத்ததாகவும் தெரிவித்தார். இருந்தும் CAT 2016 வரை வாய்மொழித் திறன் மோசமாகவே இருந்தது.

எதிர்கால திட்டம் 

ஒவ்வொரு வருடமும் எழுதுவது போலவே CAT 2016 தேர்விற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அவர் ஒட்டுமொத்தமாக 100 பெர்சண்டைல் எடுக்கவேண்டும் என்று அவரது குழுவினர் உற்சாகப்படுத்தினர். ஐஐஎம்-ல் சேரவேண்டும் என்பதை நோக்கமாகக் கொள்ளாமல் ஆங்கில மொழியில் தன்னை சிறப்பித்துக் கொள்வதற்கே தயாரானார். படிப்பதற்கு கடுமையான திட்டமிட்டு நண்பர்களின் ஆலோசனையை பின்பற்றி வெற்றியடைந்தார். அவர் கூறுகையில்,

CAT 2016-ல் quant-ல் நூறு பெர்சண்டைல் என்னால் எடுக்கமுடியவில்லை. ஆனால் வாய்மொழி பிரிவில் (VA&RC) என்னால் 98.6 பெர்சண்டைல் எடுக்கமுடிந்தது.


image


ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட பலத்தை எப்போதும் குறைவாக மதிப்பிடக்கூடாது என்பதுதான் அவரது வாழ்க்கைப் பயணத்திலிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விஷயம் என்கிறார் அஷான்க். ஒருவர் தான் பயணிக்கத் தகுந்த சரியான திசையை தேர்ந்தெடுத்து விடாமுயற்சியுடன் பிரச்சனைகளை தீர்ப்பதுதான் முக்கியம் என்கிறார் அவர். அவர் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கையில் மோசமான சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தபோது அவர் மிகவும் நம்பிக்கையும் எதிர்கொண்டார்.

தன்னிறைவை உணர்ந்த அன்றுதான் நான் அதிகம் பயந்தேன். எனவே 2010-ம் ஆண்டு quant பிரிவு இருக்கும் அனைத்து தேர்வுகளிலும் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் விடைகாண தீர்மானித்தேன். நான் விடைகண்ட கேள்விகளின் எண்ணிக்கையை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதுவரை 13,060 கேள்விகளுக்கு விடைகண்டுள்ளேன். இப்போதும் ஒரு வாரத்திற்கு நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கண்டறிந்து வருகிறேன்.

TestCracker குழுவில் தற்போது 25 பேர் உள்ளனர். டிஜிட்டல் வாயிலாக இந்தியா முழுவதும் சென்றடைவதே அஷான்ங்க்கின் நோக்கமாகும். அவர் கூறுகையில்,

வெவ்வேறு அணுகுமுறையை முயற்சித்து வருகிறோம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கலந்த மாடலும் முயற்சியில் உள்ளது. தொடர்ந்து கருத்துக்களை கேட்டு அதற்கேற்றவாறு செயல்பட்டு வருகிறோம்.

துறை குறித்த கண்ணோட்டம்

ஆஃப்லைன் வகுப்பறை மாடலிலிருந்து மெல்ல ஆன்லைன் கல்வி தொழில்நுட்ப சந்தைக்கு ‘TestCracker’ மூலம் நுழைய திட்டமிட்டுள்ளார் அஷான்க். இந்தத் துறை இந்தியாவில் செயல்பட்டு வரும்போதும் சிறப்பான ஆசிரியர்கள் மற்றும் ஆன்லைன் வளங்களின் பற்றாக்குறை காரணமாக நல்ல சந்தை வாய்ப்பு இந்தத் துறையில் உள்ளது. ரெட்சீர் கன்சல்டிங்கின் அறிக்கைபடி 2016-ம் ஆண்டு இறுதிவரை கல்வி தொழில்நுட்ப சந்தையின் அளவு 2.5 பில்லியன் டாலர்கள். அடுத்த மூன்றாண்டுகளில் 15 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

Chan-Zuckerberg initiative, Verlinvest, Sequioa India போன்ற முதலீட்டாளர்களிடமிருந்து 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி உயர்த்தியிருக்கும் Byjus இந்தியாவில் கல்வி தொழில்நுட்பப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Simplilearn, Embibe, PaGaLGuY.com, Handa Ka Funda மற்றும் Toppr போன்றவை இந்திய கல்வித் துறையில் வளர்ச்சியை நோக்கி செயல்பட்டு வருகிறது.

Massive open online courses (MOOC) பொறுத்தவரை 2015-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கான் அகாடமி (Khan Academy) டாடா ட்ரஸ்ட்ஸ் (Tata Trusts)-உடன் இணைந்து இந்தியாவிற்காக பிரதேயமாக உருவாக்கப்பட்ட இலவச ஆன்லைன் கண்டெண்ட்களை வழங்குகிறது. Unacademy, Coursera மற்றும் Udacity போன்றவை டிஜிட்டல் வாயிலாக இந்தியாவில் கால்பதித்த மற்ற சில ஆன்லைன் கோர்ஸ்களாகும்.

ஆங்கில் கட்டுரையாளர் : ஹர்ஷித் மல்யா

Add to
Shares
34.9k
Comments
Share This
Add to
Shares
34.9k
Comments
Share
Report an issue
Authors

Related Tags