பதிப்புகளில்

தொழில்முனை சிந்தனைகளை ஊக்குவிக்கும் 'ஸ்டார்ட்- அப் வீக்கெண்ட்' தொடங்கியது

20th Feb 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

அண்ணா பல்கலைகழகத்தின் குருக்ஷேத்ரா விழாவின் ஒரு பகுதியாக, இளம் தொழில்முனைவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெறும் 'ஸ்டார்ட்-அப் வீக்கெண்ட்' நேற்று மாலை தொடங்கியது.

imageஅறுபதுக்கும் மேற்பட்ட சிந்தனைகளை மாணவர்கள் மற்றும் தொழில்முனையும் ஆர்வமுள்ள பல துறைகளைச் சேர்ந்தவர்களும் பகிர்ந்து கொண்டு தங்கள் ஐடியாக்களை அங்கு கூடியிருந்தவர்களிடம் பிட்ச் செய்தனர். இவர்களின் கனவு மெய்ப்பட மற்றும் இவர்களுடன் சேர்ந்து செயல்பட தேவையான குழுவை தேர்ந்தெடுக்கவும் ஸ்டார்ட்-அப் வீக்கெண்ட் தளம் அமைத்துக் கொடுக்கிறது.

இதில் சில சிந்தனைகள் ஏற்கனவே செயல் முறையில் இருந்தாலும், சில சிந்தனைகள் வித்தியாசமாகவும் கவனத்தை ஈர்பதாகவும் அமைந்தது. பகிர்ந்து கொள்ளப்பட்ட சிந்தனைகள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. இதிலிருந்து சுமார் 20 தொழில்முனை சிந்தனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

image


பங்கெடுத்த பெரும் பகுதியினர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இதில் மிக சிறிய அளவிலயே பெண்கள் இடம்பெற்றது நெருடலகாவே இருந்தது. நூற்றியைம்பதுக்கும் மேற்பட்ட பதிவுகள் பெற்றுள்ளதாக ஸ்டார்ட்-அப் வீக்கெண்ட் நெறியாளர் சுமுக் நம்மிடம் பகரிந்து கொண்டார்.

சிந்தனை பகிர்வுகளின் முடிவில் UMM ஸ்டுடியோ நிறுவனர் சந்தோஷ் பல்வேஷ் தன்னுடைய அனுபவங்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களை ஊக்குவித்தார். அவர் பேசியபோது,

image


"தொழில்முனைவு ஆர்வமுள்ளவர்கள் தங்கள் எண்ணங்களை தொழிலாக யோசிப்பதற்கு முன்பு அதே ஐடியாவுடன் வேறு நிறுவனங்கள் ஏற்கனவே உள்ளதா என்பதை நன்கு ஆராய்ந்துவிட்டு செயலில் இறங்கவேண்டும். மேலும் தொடக்க காலத்தில், தங்களின் எண்ணைத்தை செயலாக்க பலரை குழுவில் சேர்ப்பதை தவிர்த்து முடிந்த அளவு தொழில்நுட்பத்தை அவர்களே கற்றுக்கொண்டு செயல்படுவதே சிறந்தது" என்றார்.


மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் நிபுணர்களின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளின்படி வழிநடத்தப்பட்டு தங்களின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவுள்ளனர்.

இறுதியாக ஞாயிறு அன்று ஜூரி முன்னிலையில் தங்கள் இறுதி தொழில் வடிவத்தை பகிர்ந்து கொள்வர். அதிலிருந்து சிறந்த சிந்தனை மற்றும் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு விருதளிக்கப்படும்.

ஸ்டார்ட்-அப் வீக்எண்ட் நிகழ்வில் தமிழ் யுவர்ஸ்டோரி ஊடக பார்ட்னராக உள்ளது.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags