பதிப்புகளில்

கார்ப்பரேட் பணியை உதறிவிட்டு, ஏழைகளுக்கு கல்வி நிறுவனம் தொடங்கிய சுக்லா போஸ்!

Nithya Ramadoss
22nd Aug 2015
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

பச்சை மற்றும் சிவப்பு நிற பட்டு புடவை, பெரிய பொட்டு, நேர்த்தியான கொண்டைஎன்று அதீத தன்னம்பிக்கையுடன் தோன்றும் சுக்லா போஸ், "பரிக்ருமா ஹுயுமானிட்டி ஃபவுண்டேஷன் " (Parikrma Humanity Foundation) நிறுவனத்தை பற்றி பேச துவங்கினார். பரிக்ரமா (Parikrama) என்று பரவலாக அழைக்கப்படும் வார்த்தையை பரிக்ருமா என்று வைத்துள்ளார் சுக்லா. ''இந்த குறிப்பிட்ட வார்த்தைக்கான வேர் சமஸ்கிருத மொழியில் தான் இருக்கிறது. பரிக்ரமா என்பது தேவநாகரி வழியில் சொல்லப்படுவது" என்று இலக்கண ரீதியில் தெளிவான விளக்கத்தை தருகிறார் சுக்லா. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலிருந்து ஒப்பீட்டு இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்றதால் இது போன்ற சின்ன விஷயங்களை கவனிக்க முடிகிறது என்றும் அவர் சிரிப்புடன் தெரிவித்தார்.

'அனைவருக்கும் சமமான முறையில் வாழ்க்கை' என்ற அடிப்படை கொள்கையோடு பரிக்ருமா நிறுவனத்தை சுக்லா தொடங்கியது மட்டுமல்லாமல், அதனுடைய தலைவர் மற்றும் நிறுவனர் என்ற பொறுப்பையும் வகித்து வருகிறார். குடிசை பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்கும், உலக தரத்திலிருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். 12 ஆண்டுகளுக்கு முன் 165 குழந்தைகளை வைத்து ராஜேந்திரநகரில் ஒரு மொட்டை மாடி பள்ளியாக ஆரம்பித்த இந்த முயற்சி, தற்போது பெங்களுருவின் ஜெயநகர், கோரமங்களா, சங்கர் நகர், நந்தினி லேஅவுட் என்ற நான்கு இடங்களில் கிட்டத்தட்ட 1700 குழந்தைகளுக்கு கல்வி அளித்துவருகின்றது.


பள்ளி குழந்தைகளுடன் சுக்லா போஸ்

பள்ளி குழந்தைகளுடன் சுக்லா போஸ்


போதிய வசதிகள் இல்லாத மக்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் சுக்லாவிடம் வேரூன்றி இருந்தது. குழந்தை பருவத்திலிருந்தே இதற்கான வேலைகளில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். டார்ஜிலிங்கில் வசித்த வங்காள குடும்பத்தை சேர்ந்த சுக்லாவின் தந்தை ஒரு உயரதிகாரி, தாய் ஒரு ஆத்மார்த்தமான இல்லத்தரசி.

"எனது பெற்றோர்களுக்கு நான் எப்போதுமே செல்லப்பிள்ளையாக தான் இருந்திருக்கிறேன். குறிப்பாக, நான் என் அம்மாவுடன் மிகவும் நெருக்கம் இருந்துள்ளேன். 5 முறை கருச்சிதைவு ஏற்பட்ட பின், நான் பிறந்ததால் அவருக்கும் என் மேல் பிரியம் அதிகமாகவே இருந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் என்னுடைய தம்பி பிறந்தாலும், எனக்கான செல்லபிள்ளை ஸ்தானம் எனக்கே இருந்தது. ஆண் ,பெண் பாகுபாடு இல்லாமல் என்னுடைய குழந்தைப்பருவம், நன்றாகவே அமைந்திருந்தது. சிறந்த பள்ளி , கல்லூரிகளிலியே நான் படித்தேன்." இருந்தாலும், தன்னுடைய தந்தை மூலம், சில விஷயங்கள் சுக்லாவின் மனதில் ஆழமாக பதிந்தது. நேர்மையான அரசு ஊழியராக இருந்த சுக்லாவின் தந்தை தன் வீட்டிற்கு வெளியே இருக்கும் ஏழு வாகனங்களுள் எதையுமே உபயோகிக்ககூடாது என்று திடமாக கூறிவிடுவார். காரணம், அரசு வாகனங்களை சொந்த காரணத்திற்கு எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் சுக்லாவின் தந்தை. இதனால், சுக்லா கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் வரை பள்ளிக்கு நடந்து செல்வார். 

"நாங்கள் மிகவும் எளிமையான மற்றும் கோட்பாடுகளுடன் எங்கள் வாழ்க்கையை நடத்தினோம். இன்று நான் இருக்கும் இந்த நிலைமைக்கு என்னுடைய பெற்றோர்களின் நல்ல வளர்ப்பு தான் முழு காரணம் என்று நினைக்கிறேன்." என்று பெருமிதத்தோடு சுக்லா கூறுகிறார். ஒரு நல்ல கல்வி மட்டுமே தன்னம்பிக்கையை வளர்க்கும் என்ற எண்ணத்தில் நம்பிக்கை வைத்திருந்தார் சுக்லா. இந்த நம்பிக்கையே இவருக்கு படிப்பில் நல்ல மதிப்பெண்களையும், நல்ல வளர்ச்சியையும் ஈட்டு தந்தது. கல்லூரி படிப்பை கொல்கத்தாவில் பயின்ற சுக்லா விடுதியில் தங்கி தன்னுடைய படிப்பை மேற்கொண்டார். "அது தான் நான் சுதந்திரமாக இருப்பதற்காக எடுத்த முதல் முயற்சி." என்று சிரிக்கிறார் சுக்லா. தன்னுடைய 19ம் வயதில் 1976ம் ஆண்டு திருமணம் முடிந்தபின், தன் கணவரோடு பூட்டானுக்கு சென்றார்.

முதல் பள்ளி

ஆசிரியர் பணிக்கான முதல் வித்தை சுக்லா, அந்நிய மண்ணான பூட்டானில் தொடங்கினார். அங்கு இந்திய ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு ஒரு புது பள்ளியை தொடங்கினார் சுக்லா. பள்ளி பாடங்களை வடிவமைப்பது, தினசரி பள்ளி நடவடிக்கைகளை கண்காணிப்பது என்று சுக்லாவிற்கு அந்த பள்ளி ஒரு புது பாடத்தை கற்றுத்தந்தது என்றே சொல்லலாம். அங்கு தண்ணீர் பிரச்சனை இருந்ததால், சுக்லா மீண்டும் இந்தியாவிற்கே திரும்பினார். பின், ஒப்பீட்டு இலக்கியத்தில் முதுநிலை பட்டம் முடித்தபின், விருந்தோம்பல் துறையில் பணியாற்ற துவங்கினார். தவிர, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ படிப்பையும் முடித்தார்.

கார்ப்பரேட் துறையில் பல சாதனைகள்

சுக்லா தன்னுடைய முதல் பணியை ஓபராய் கிராண்ட் ஹோட்டலில் தொடங்கி, மெல்ல மெல்ல கார்ப்பரேட் துறையில் ஒரு நல்ல வளர்ச்சியை அடைந்தார். தான் ஊழியர்களுக்கான, ஒரு செய்தி பத்திரிகையை முதன்முதலில் ஆரம்பித்தது பற்றி பகிர்ந்துக்கொண்டார். "வேலையை தவிர, தங்கள் வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களை பற்றி விளக்கும் முயற்சியே அந்த செய்தி பத்திரிகை. துணை பணியாளர்களின் திறன் இதன் மூலம் தெரியவந்தது." என்று விளக்கினார் சுக்லா. அந்த செய்தி பத்திரிகை, நல்ல வரவேற்பை பெற்றது. தனக்கு கீழ் பணி புரியும் ஊழியர்களுடன் இருக்கும் நெருக்கம் மற்றும் மரியாதை பற்றியும் இதன்மூலம் சுக்லா உணர்ந்தார். தவிர, கல்லூரி நாட்களிலிருந்தே அன்னை தெரசாவுடன் சேவை பணியில் 7 ஆண்டுகளாக ஈடுபட்ட அனுபவம் சுக்லாவிற்கு உண்டு. ஆதரவற்றவர்களுக்காக சேவை செய்யும் நிர்மல் ஹ்ரிடே (Nirmal Hriday) என்ற மையத்தில் இருந்த சுக்லா அதன் பின், சிஷு பவன் என்கிற கைவிடப்பட்ட குழந்தைகளை கவனிக்கும் மையத்தில் தன்னுடைய சேவை பணியை தொடர்ந்தார்.

கார்ப்பரேட் உலகிலிருந்து விடைபெற்றார்

26 ஆண்டுகள் கார்ப்பரேட் வேலைக்கு பின், சுக்லாவிற்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. "என்னுடைய கார்ப்பரேட் வேலையில் உச்சியில் இருக்கும் போது, வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது." என்று விவரிக்கும் சுக்லா 2000ம் ஆண்டில் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து, ஒரு சாதாரண துறையாக கருதப்படும் சேவை துறையில் ஈடுபட்டார். ஒரு பிரபல என்.ஜி.ஓ நிறுவனத்தின் இந்தியா கிளையின் தலைவராக பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கல்வியையே தன்னுடைய பிரதான திட்டமாக வைத்து சுக்லா அந்த நிறுவனத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

"சந்திப்பு, பார்ட்டி என்ற கார்ப்பரேட் விஷயங்களிலிருந்து விலகினேன். என்னுடைய இந்த முடிவு என்னுடைய கணவருக்கும் மகளுக்கும் சற்று அதிர்ச்சியை தந்தாலும், எனக்கு துணையாக இருந்தார்கள். என்னுடைய வாகனம், உலகம் என்று எல்லாமே சில காலங்களுக்கு சுருங்கி போயிருந்தது என்றே சொல்லலாம்."

என்.ஜி.ஓ நிறுவனத்தில் வெற்றியை கண்ட சுக்லா, 2003ம் ஆண்டில் தன்னுடைய சொந்த சேமிப்பிலிருந்து "பரிக்ருமா" நிறுவனத்தை தொடங்கினார். சில சறுக்கல்களும் பல நஷ்டங்கள் ஏற்பட்டாலும், தன்னுடைய திட்டத்தில் இருந்த அசாதாரண நம்பிக்கையால் அவர் எல்லாவற்றையும் கச்சிதமாக சமாளித்தார்.


சுக்லா போஸ் இந்த குழந்தைகளுக்கு ஒரு பெரும் வளர்ச்சிய எற்படுத்தி தர நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றார்.

சுக்லா போஸ் இந்த குழந்தைகளுக்கு ஒரு பெரும் வளர்ச்சிய எற்படுத்தி தர நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றார்.


கார்ப்பரேட் பணியில் தான் கற்றுக்கொண்ட சில சின்ன விஷயங்களை சுக்லா பரிக்ருமாவில் செயல்படுத்தினார். அதுமட்டுமல்லாமல், ஒரு சின்ன குழுவிற்கு நம்பிக்கை அளிப்பது மற்றும், அவர்களுடன் உரையாடுவது போன்ற விஷயங்கள் மூலம் சுக்லா தன்னுடைய பாதையில் வெற்றி அடைய தொடங்கினார். கடின உழைப்பு மற்றும் கொள்கைகளை நிறைவேற்றுவது போன்ற பாதையில் பரிக்ருமா பயணித்தது. அந்த உழைப்பும், முயற்சியும் இன்று இவருக்குவெற்றியை தேடி தந்துள்ளது. தவிர, பரிக்ருமா மூலம் படித்த மாணவர்கள், இன்று வெற்றிகரமாக பல துறைகளில் அங்கம் வகிக்கின்றனர். இது சரியான முயற்சி மற்றும் உந்துதலுக்கான எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். தற்போது பரிக்ருமாவின் பாடத்திட்டம் கார்ன்வெல் பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.எம்.பி பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுக்லாவின் பொழுதுபோக்கு, விருப்பங்கள்...

சுக்லாவின் பிரதான பொழுது போக்கு புத்தகங்கள் படிப்பதே. தற்போது வின்ஸ்டன் சர்ச்சிலுடைய மனைவி, க்ளெமென்டைன் ஸ்பென்சர் சர்ச்சிலின் சுயசரிதையை படித்து முடிக்கவிருக்கிறார். தவிர, சுக்லாவிற்கு, தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் சமைப்பதில் ஆர்வம் அதிகம். அதிகாலை 4.30 மணியளவில் தன்னுடைய நாளை தொடங்கும் சுக்லா, சமையல் மற்றும் தனக்கான நேரத்தை செலவழித்த பின், தன்னுடைய வேலைக்கு செல்வது வழக்கம். சராசரி பெண்களை போல சுக்லாவிற்கும் சில தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பதில் விருப்பம் உண்டு. மலை ஏறுவதில் ஆர்வம் இருக்கும் சுக்லாவின் வீட்டில் 5 நாய்களும் தன்னுடைய பள்ளிகளில் ஒரு நாயும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுக்லாவை கவர்ந்த நபர்கள்

சுக்லா தன்னுடைய முன்மாதிரியாக 3 நபர்களை வைத்திருக்கிறார். அன்னை தெரசா, சார் நிக்கோலஸ் விண்டன் (நாஸி பிடியிலிருந்த 669 செக்கஸ்லோவாகியா குழந்தைகளை இரண்டாம் உலக போரின் போது மீட்ட பிரிட்டன் நபர்) மற்றும் தலாய் லாமா. "இவர்களுடைய சாதாரண குணமும், தான் என்கிற தற்பெருமையின்மையும் இவர்களை தனித்துவ நபர்களாக மாற்றியிருக்கிறது." என்று விவரிக்கிறார் சுக்லா.

சுக்லாவின் ஒரே கனவு 20 வருடங்களுக்கு பின் காலை 8.15 மணிக்கு ஒரு பள்ளி கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதே. "அந்த பள்ளி பரிக்ருமா மாணவனால் நிறுவப்பட்டிருக்க வேண்டும்." என்று தன் கனவை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக