பதிப்புகளில்

நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால், பணம்/காசோலை வழியே அதிக கட்டணம் வசூலிக்கும் பிரபல வழக்கறிஞர்கள் தவிப்பு...

23rd Nov 2016
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு சாதாரண மக்களை மட்டுமல்லாமல் நீதிமன்றங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆஜராவதற்கு ரொக்கமாகவே கட்டணம் வசூலிக்கும் வக்கீல்களையும் பாதித்துள்ளது.

”உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் எனது கட்டணம் முழுவதையும் பணமாகவோ அல்லது மொத்தத் தொகைக்குமான காசோலையாகவோ செலுத்தலாம்.” இப்படித்தான் இந்தியாவின் பழைமையான நீதியாளர்களும் சிறந்த கிரிமினல் வக்கீல்களும் தங்கள் க்ளையண்டிடம் சொல்வார்கள்.

image


யுவர் ஸ்டோரியுடன் பகிர்ந்துகொள்ளும்போது ஒரு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கூறுகையில் கட்டணம் செலுத்துவதில் அளிக்கப்படும் நெகிழ்வுத்தன்மையைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். செலுத்தப்படவேண்டிய கட்டணம் 10 லட்ச ரூபாய் என்றும் இந்தத் தொகை உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி பெரும் இரண்டு டஜன் வழக்கறிஞர்களின் மொத்த தொகைக்கு சமமாகும் என்றார். இவர்கள் எப்போதாவது உயர்மட்ட க்ளயண்டுக்காக  மட்டுமே உயர் நீதிமன்றங்களில் தலைகாட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இப்படிப்பட்ட உயர்மட்ட கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞர்களுடன் ஒப்பிடுகையில் சொற்பமான தொகையை கட்டணமாக வசூலிக்கிறார் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஒரு இளைய வழக்கறிஞர். க்ரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்ட இவரது ஒரு க்ளையண்ட் எவ்வளவு செலவானாலும் அதிக தொகை வசூலிக்கும் அந்த குறிப்பிட்ட வழக்கறிஞர்தான் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். வழக்கறிஞருடனான உரையாடலில் குறிப்பாக அவர் பணம் மற்றும் காசோலை இரண்டையும் பெற்றுக்கொள்வதும் க்ளையண்ட்டின் மேல், சுமையை ஏற்றுவதும் அதிர்ச்சியூட்டுவதாக தெரிவித்தார்.

“ஒரு மணி நேரம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கணிசமான தொகையை கட்டணமாக செலுத்தவேண்டும் என்பது தெரிந்தாலும் அவர் அதை தெரிவித்த விதம் அதிர்ச்சியாக இருந்தது. நான் டெல்லியில் இருக்கும் அவரது அலுவலகத்தில் கட்டணத்தை செலுத்த வேண்டும். கையில் பணத்தை எடுத்துசென்று செலுத்துவதில் பிரச்சனை ஏற்படும் என்பதால் நான் முழுத்தொகையையும் ரொக்கமாக செலுத்த தயாராக இல்லை. 10 லட்சம் தொகையை விமான நிலையத்தின் பாதுகாப்பை மீறி யாராவது எடுத்துச் செல்ல முடியுமா? கடைசியில் என்னுடைய க்ளையண்ட் 4 லட்சம் ரூபாயை பணமாகவும் மீதித் தொகையை காசோலையாகவும் செலுத்த ஏற்பாடு செய்தார்” என்றார் பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர். இது நடந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தாலும் அதிர்ச்சி சற்றும் குறையாமல் அந்த உரையாடலை நினைவுகூர்ந்தார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின் பணத்தில் பரிவர்த்தனைகள் செய்பவர்களான வழக்கறிஞர்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாவார்கள். 

”நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அதிக அளவிலான பணத்துடன் தவிக்கிறார்கள் வழக்கறிஞர்கள்” என்றார் மற்றொரு வழக்கறிஞர்.  கூட்டத்தில் கருப்பு ஆடு என்று முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் இவர் தன் பெயரை வெளியிட விரும்பவில்லை.”

தங்களது தோற்றத்திற்கு மெருகேற்றும் விதமாக நீண்ட அங்கியை அணிந்திருக்கும் வழக்கறிஞர்களான இவர்கள் பணம் காசோலை இரண்டுமாக கட்டணத்தை வசூலிப்பதில் பெயர் போனவர்கள். ஆடம்பரம் நிறைந்த இவர்களின் வாழ்க்கையில் ஆடம்பரமான கார்கள், ஆடம்பரமான வீடுகள், விடுமுறையை கழிக்க வெளிநாட்டு சுற்றுலா, ஆடம்பர உணவு என்று நீதிமன்றத்தின் உள்ளும் வெளியிலும் வலம் வருகிறார்கள். 

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படி முதலீடு செய்வார்கள்? பல வழக்கறிஞர்கள் தங்களது சேவைக்கான கட்டணத்தை பணமாகவும் காசோலையாகவும் சமன்படுத்தி பெற்றுக்கொள்கிறார்கள். நிறுவனங்களின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதாக தெரிந்தாலும், ரியல் எஸ்டேட் துறையிலும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கருப்பு மற்றும் வெள்ளை இரண்டும் மூதலீடு செய்யப்படுகிறது.

மும்பையின் புகழ்பெற்ற பார்ஸி லாயர்ஸ் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்காவார்கள். இவர்கள் சட்ட கழுகுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இளைய வழக்கறிஞர்கள் இவர்கள் குறித்து குறிப்பிடுகையில் 20 சதவீத கட்டணத்தை மட்டும் வசூல் செய்வதாகவும், மீதித் தொகையை இவர்களின் ட்ரஸ்டின் பெயருக்கு காசோலையாக வசூலிப்பதாகவும் தெரிவித்தனர். ட்ரஸ்டின் பெயரில் செலுத்தப்படும் தொகைக்கு வரி விலக்கு உண்டு. 

இதனால் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின் அரசாங்கம் ட்ரஸ்ட்கள், சொசைடீஸ் போன்ற வரி விலக்குக்கு உட்பட்ட குழுக்களை விசாரிப்பதில் முனைந்து செயல்பட உள்ளது. 

கடந்த வாரம் முதல் வருமான வரித்துறையினர் அனைத்து விதமான ட்ரஸ்ட், சொசைடீஸ் போன்றவற்றிற்கு நோட்டிஸ் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நாளான நவம்பர் 8-ம் தேதி அவர்களின் கையிருப்பு ரொக்க தொகையை அறிவிக்க வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

வருமான வரித்துறை, வருமான வரி சட்டத்தின் செக்‌ஷன் 133(6) கீழ் வங்கிகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களிடமிருந்து அனைத்து விதமான தகவல்களையும் சேகரிக்க இப்படிப்பட்ட நோட்டீஸ் அனுப்புவதற்கு அதிகாரம் பெற்ற துறையாகும். பெரும்பாலான சிறந்த வழக்கறிஞர்கள் அரசியல்வாதிகளாவார்கள். இவர்களிடன் பதவி பலம் இருக்கும். அல்லது இவர்களது கட்சி ஆட்சியில் இருந்தபோது வலுவான பதவியில் இருந்திருப்பார்கள்.

மூத்த வழக்கறிஞர்களின் உதவியாளர்களிடம் பேசுகையில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் அவர்களின் மூத்த வழக்கறிஞர்கள் இனிமேல் எவ்வாறு கட்டணம் வசூலிப்பார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ”வழக்காளிகள்தான் கஷ்டப்படப்போகிறார்கள்” என்று சிலர் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

ஆங்கில கட்டுரையாளர்: அனில் புதூர் லுல்லா

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags