பதிப்புகளில்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன?

1st Feb 2017
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் 2017-18 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 3/4 முதல் 7 ½ சதவீதம் வரை இருக்குமென மதிப்பீடு ரியல் எஸ்டேட் விலைகள் வீழ்ச்சியை அடுத்து நடுத்தர வகுப்பினர் கட்டுபடி ஆகும் விலையில் வீட்டு வசதி பெறுவர். புதிய நோட்டுகள் புழக்கம் காரணமாக ரொக்கப் பற்றாக்குறை 2017 ஏப்ரல் வாக்கில் அகற்றப்பட்டு விடும்.

image


பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மீதான தாக்கம் தற்காலிகமானதே என்று மத்திய அரசு கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2017 ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின் ரொக்கப்பணம் போதுமான அளவு இந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்படும்போது பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்பி விடும் என்று கூறினார். எனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான வளர்ச்சி 2017-18ம் ஆண்டிற்கு 6 3/4 முதல் 7 ½ சதவீதம் வரை இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கீழே அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி குறுகிய கால சிரமங்களையும் நீண்டகால நன்மைகளையும் உள்ளடக்கியது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. சுருக்கமாக சொன்னால் சிரமங்கள் என்பது ரொக்கப்பண பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மந்தநிலை ஆகியன ஆகும். பயன்களை பொறுத்தவரை கூடுதலான டிஜிட்டல் மயம், கூடுதலான வரிச்சட்டக் கடைப்பிடிப்பு, ரியல் எஸ்டேட் விலைகள் குறைவு ஆகியவற்றால் நீண்ட கால வரிவருவாய் உயர்வு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உயர்வு ஏற்படும்.

பயன்களை பொறுத்தவரை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்துள்ளது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. சிரமங்களை பொறுத்தவரை மொத்த ரொக்க புழக்கம் திடிரென குறைந்தது. டிசம்பர் மாதம் அதிக பட்சமாக 35 சதவீத அளவிற்கும் நவம்பர் மாதம் அதிக பட்சமாக 62 சதவீத அளவிற்கும் ரொக்கப்பண புழக்கம் நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு பழைய உயர்மதிப்பு நோட்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்ததே இதற்கு காரணமாகும் மேலும் புதிய நோட்டுகள் அதிக அளவு புழக்கத்தில் வருவது 2017 ஏப்ரல் வாக்கில் சாத்தியமாகும் என்பதால் ரொக்கப் பற்றாக்குறை முற்றிலும் அகற்றப்பட்டு விடும். 

இதற்கிடையே ரொக்கப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும். 2016-17 ல் இது கால் முதல் அரை சதவீதம் வரை குறையும். பதிவு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி முறைசாராத துறைகளின் மீதான தாக்கத்தை குறைத்து மதிப்பிடும். உதாரணமாக முறைசாரா உற்பத்தி முறையான துறைகளின் குறியீகளைக் கொண்டு மதிப்பிடப் படுகின்றன. இந்த சிரமங்கள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதி வாக்கில் ரொக்கப்பணம் தாராளமாக புழங்கும்போது மறைந்துவிடும். இதனை அடுத்து 2017-18 நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் வழக்கமான நிலைக்கு வந்துவிடும்.

நாட்டின் எட்டு பெரிய நகரங்களில் ஏற்கனவே குறையும் போக்கில் இருந்த ரியல் எஸ்டேட் விலைகள் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 2016 நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு மேலும் சரிந்தன என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த விலைக்குறைவுப் போக்கு விரும்பத்தக்கதே என்றும் இதனையடுத்து நடுத்தர மக்களுக்கு கட்டுபடி ஆகும் விலையில் வீட்டு வசதி செய்து தர இயலும் என்றும் அதிகமான வாடகை காரணமாக தற்போது தடைப்பட்டுள்ள தொழிலாளர்கள் குடிபெயர்வு மீண்டும் மீண்டும் உயரும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நீண்டகால பயன்களை அதிகப்படுத்தவும் குறுகிய கால சிரமங்களை குறைக்கவும் இந்த ஆய்வறிக்கை பல நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது. விரைவாக புதிய நோட்டுகள் அளவை அதிகப்படுத்துதல், டெபாசிட்டுகளை ரொக்கமாக மாற்றுதல், பணம் பெறும் வரம்பை விரைவில் அகற்றுதல் போன்றவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கமளித்து இதற்கான மாற்றத்தை கட்டுபாடுகளுக்கு பதிலாக ஊக்குவிப்புகள் மூலம் படிப்படியாக செயல்படுத்துவதையும் பரிந்துரைத்துள்ளது. மூன்றாவதாக நிலம் மற்றும் ரியல் எஸ்டேட்டை சரக்குகள் சேவைகள் வரியின் கீழ் கொண்டுவந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடருதல்.

நான்காவதாக வரி வீதங்கள், ஸ்டாம்பு வரிகள் ஆகியவற்றைக் குறைத்தல். இறுதியாக மேம்பட்ட வரிமுறைகள் மூலம் அதிக அளவில் வருமானத்தை அறிவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி வரிநிர்வாக துறை தொடர்பான அச்சங்களைக் களைதல் ஆகும்.

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags