பதிப்புகளில்

பெண் புலியை காப்பாற்ற சென்னை பெசன்ட் நகரில் போராட்டம்!

’அவ்னி’ என்னும் பெண் புலியை கொல்ல உத்தரவிட்டுள்ள மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர் வனவிலங்கு ஆர்வலர்கள்!
posted on 22nd October 2018
Add to
Shares
88
Comments
Share This
Add to
Shares
88
Comments
Share

பல விலங்கினங்கள் நம் தலைமுறைக்கு முன்னரே அழிந்துவிட்டது அந்த வரிசையில் புலி இன்னமும் அழிவை நோக்கி நகர்கிறது. இந்த நிலையில் மஹாராஷ்ட்ரா யவத்மல் மாவட்டத்தில் பந்தர்கடாவா காட்டில் வசிக்கும் ’அவ்னி’ என்னும் பெண் புலியை கொல்ல மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து பல மாநிலங்களில் உள்ள விலங்கு ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தி, சமூக வலைதளத்தில் ’Let Avni Live’ என்னும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். 

இந்த பிரச்சாரத்தை முன்னிட்டு அக்டோபர் 20 ஆம் தேதி பெசன்ட் நகர் கடற்கரையில் சென்னையைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

image


பந்தர்கடாவா காட்டில் 9 புலிகள் வசித்து வருகின்றனர், அதில் 5 வயதான அவ்னி புலிக்கு 9 மாதங்களான இரண்டு குட்டிகளும் உள்ளன. கடந்த இரண்டு வருடத்தில் பந்தர்கடாவா காட்டில் 15 நபர்கள் இறந்ததாகவும் அதற்குக் காரணம் அவ்னி புலி என்பதால் மக்களின் பாதுகாப்பை கருதி அவ்னி’யை கண்டதும் சுட்டுக் கொல்லும்படி மகாராஷ்டிரா மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதனையொட்டி அவ்னியை சுட்டுத்தள்ளும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர்களான சரிதா சுப்ரமணியன் மற்றும் ஜெரில் பனைத் ஆகியோர் மனு தாக்குதல் செய்துள்ளனர்.

மேலும் பல மாநிலங்களில் போராட்டங்கள் கடந்த செப் 30 முதல் அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் நேற்று முன்தினம் சென்னையில் நடப்பெற்ற போராட்டத்தின்போது பேசிய விலங்கு நல ஆர்வலர் சுமைத் பாய்,

“அவ்னிக்கு இரையானதாக சொல்லப்படும் 13 பேர் சடங்களில் 3 சடலங்கள் மீது மட்டுமே டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த மூவரின் ஒரு சடலத்தில் மட்டுமே அவ்னி புலியின் சாயல் உள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது,” என தெரிவித்தார்.

மேலும் காடுகள் விலங்குகளுக்கான இடம், கிடைத்த அனைத்து சடலங்களும் காட்டின் உட்பகுதியில் கிடைத்தது. புலி ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருந்தால் புலியைக் கொல்லலாம், ஆனால் புலிகள் வாழும் எல்லைக்குள் நாம் சென்றுவிட்டு புலிகளை குறைக்கூறக் கூடாது என பல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடைசியாக வந்த நீதிமன்ற உத்தரவின்படி அவ்னியை கொல்லும் முன் அவனியின் இரண்டு குட்டிகளையும் பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனை தடுக்கத் துவங்கிய ‘Let Avni Live’ பிரசாரத்திற்கு பிரபலங்கள் உட்பட பல்லாயிரக்கணக்காவர்கள் இம்முழக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்காகத் துவங்கிய ஆன்லைன் மனுவிற்கும் இதுவரை 77,603 கையொப்பங்கள் வந்துள்ளது. 

நீங்களும் மனுவில் கைய்ழுத்திட இந்த லின்க் க்ளிக் செய்யவும்: STOP killing tigers! Let Avni and her cubs live!

Add to
Shares
88
Comments
Share This
Add to
Shares
88
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக