பதிப்புகளில்

உங்கள் குப்பைத் தொட்டிதான் ராகுலின் பொக்கிஷங்களின் புதையல்!

11th Jan 2016
Add to
Shares
133
Comments
Share This
Add to
Shares
133
Comments
Share

2007ம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் ராகுல் கதாலியா (வயது 34) பார்த்த இரண்டு சம்பங்கள் அவரது மனதில் ஆழப் பதிந்து விட்டன. அவர் அப்போது பெங்களூர் என்ஐஎப்டியில், அக்சசரி டிசைனிங் மாணவர். பெங்களூரின் அவென்யூ சாலை அருகே உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் அந்தக் காட்சியைப் பார்த்தார்.

ஒரு டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, நடைமேடையில் ஒரு குழந்தை அழுக்குத் துணியைச் சுற்றிய நிலையில் கிடந்ததைப் பார்த்தார். அந்தக் குழந்தையின் தாய் யார் என்று ராகுல் சுற்றுமுற்றும் தேடினார். அப்போது முகமெல்லாம் தூசு படிந்து அழுக்கான ஆடையுடன் தளர்வாகக் கட்டிய முடியுடன் ஒரு பெண் வந்தார்.

அவள் கையில் இரண்டு சிறிய பிளாஸ்டிக் டம்ளர்கள் வைத்திருந்தாள். ஒன்றில் சிறிதளவு பால். மற்றொன்றில் கொஞ்சம் தண்ணீர். குழந்தையைத் தூக்கி மடியில் கிடத்திக் கொண்டு, அந்த இரண்டு டம்ளர்களையும் அருகே வைத்தாள். பின் தனது விரலை பாலிலும் தண்ணீரிலும் அடுத்தடுத்து வைத்து விரல் வழியே வழியும் சொட்டுகளை குழந்தையின் வாயில் விழச் செய்தாள். அவள் விரல்களில் இருந்து இரண்டு சொட்டுகளுக்கு மேல் விழவில்லை. பின் மீண்டும் அப்படியே செய்தாள். இப்படியே அவள் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள்.

இதற்கு நேர்மாறாக மற்றொரு சம்பவம் நடந்தது. ராகுல் அங்கிருந்து கிளம்பி எச்எஸ்ஆர் லேஅவுட்டில் உள்ள தனது கேம்பசுக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் காபி சாப்பிடும் போது ஒரு காட்சியைப் பார்த்தார். இங்கும் ஒரு தாயும் குழந்தையும். அவர்களுக்கு முன்னாள் டேபிளில் ஸ்நாக்ஸ் இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் எழுந்து போய் விட்டனர். ஆனால் அங்கே அந்த ஸ்நாக்ஸ் வீணாகக் கிடந்தது. அந்தப் பெண் நினைத்திருந்தால் அதை பத்திரமாக எடுத்துச் சென்று அடுத்து இரண்டு நாட்களுக்குக் குழந்தைக்குக் கொடுத்திருக்கலாம்.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே இருந்த வேறுபாடு ராகுலை ஸ்தம்பிக்கச் செய்தது. எதையும் வீணாக்கக் கூடாது என்ற எண்ணம் அவருக்குள் ஆழமாய்ப் பதிந்தது. அவர் ஒரு டிசைனிங் மாணவர். தனது டிசைனிலும் எதுவும் வீணாக்கப்படக் கூடாது என்றும் அதில் ஒரு நீடித்தத் தன்மை இருக்க வேண்டும் என்றும் உணர்ந்தார். இது தொடர்பாக அவருக்கு ஒரு சில யோசனைகள் தோன்றி மறைந்தன. ஆனால் அவற்றை எப்படி செயலாக்குவது என்பதில் ஒரு தெளிவில்லாமல் இருந்தது. அதே ஆண்டில் அவர் நீடித்திருத்தல் மற்றும் நிலையான மேம்பாடு எனப்படும் சஸ்டைனபிலிட்டி மற்றும் சஸ்டைனபிள் டெவலப்மென்ட் (sustainability and sustainable development) படிப்பைப் படித்தார். இது அவருக்கு சஸ்டைனபிள் டெவலப்ம்மென்ட் மற்றும் டிசைனில் வித்தியாசமான பல ஐடியாக்களைக் கொடுத்தது.

image


‘எ பேசிக் கான்செப்ட் டிசைன்’ உருவானது

கடைசியாக 2011ல் ஒரு டிசைன் கன்சல்டன்சியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, சொந்தமாக தொழில் தொடங்க தீர்மானித்தார் ராகுல். "ஏபிசிடி" (எ பேசிக் கான்செப்ட் டிசைன்) நிறுவனத்தைத் தொடங்கினார். “தொடங்கியதில் இருந்து பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்தன. ஆனால் அவை ஒவ்வொன்றும் ஒரு சிறு அளவாவது எனது இலக்கை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருந்தது. சஸ்டைனபிலிட்டிக்கான டிசைன் – நீடித்து நிலைப்பதற்கான வடிவமைப்பு – அதுதான் எனது இலக்காக இருந்தது என்கிறார்” ராகுல்.

உணர்வு ரீதியாகவும் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூகப் பின்னணி அடிப்படையிலும் ஏபிசிடி குறித்துப் பல்வேறு பார்வைகள் இருந்தன. ஆனால் அதன் அடிப்படை இலக்கு தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் நீடித்து நிற்கும் வடிவமைப்பு என்பதுதான்.

சந்தையானது, பொருளாதரத்தை மையப்படுத்தி அல்ல, நீடித்து நிற்கும் கண்டுபிடிப்புகளை மையப்படுத்தியே உள்ளது என்கிறார் ராகுல். இதற்கு இன்னும் நிறைய யோசனைகளை உருவாக்க வேண்டியிருக்கிறது என்கிறார் அவர்.

“வெறுமனே ‘கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்பு நடவடிக்கை’களால் (CSR activities) மட்டும் ஒரு பிராண்ட்டை நீடித்து நிலைக்கச் செய்துவிட முடியாது. வர்த்தகத்தின் அடிப்படை உத்தியில் இருந்தே அதைக் கொண்டு வர வேண்டும். இதற்காக வர்த்தகக் கொள்கைகளில் கூட மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்” என்கிறார் ராகுல்.
ராகுல்

ராகுல்


தி செகண்ட் லைப்

ஏபிசிடி நிறுவனத்தில் இரண்டு பிரிவுகள். ஒன்று வடிவமைப்பு சேவைப் பிரிவு. மற்றொன்று தி செகண்ட் லைப் என்ற பிரிவு. இந்தப் பிரிவின் கீழ் காலாவதியான பொருட்களைக் கொண்டு புதிய பொருட்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதன் உற்பத்திச் செலவுகளுக்கு வடிவமைப்புச் சேவை மூலம் வரும் வருமானம் உதவுகிறது.

பொருட்கள் மற்றும் சேவைகளின் மூலம் நீடிப்புத்தன்மை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்டதுதான் ‘தி செகண்ட் லைப்’. “இதன் மூலம் நீடித்து நிற்கும் சிறு தொழில் குறித்த ஆய்வை மேற்கொள்ள முயற்சிக்கிறோம்” என்கிறார் ராகுல்.

அவர்கள் தயாரிக்கும் பொருளுக்கான மூலப் பொருட்கள் பெங்களூருவில் உள்ள பழைய பொருள் வியாபாரிகளிடமிருந்து கிடைக்கிறது. வாடிக்கையாக இவர்களுக்கு மூலப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் சிலருக்கு நிறுவனத்தின் தேவை தெரியும். காலாவதியான திரைப்பட போஸ்டர்கள், வெள்ளைத் தாள்கள், ஒருபக்கம் மட்டுமே எழுதப்பட்ட தாள்கள் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் ‘செகண்ட் லைப்’புக்கு விற்பனை செய்கின்றனர்.

குப்பையில் பொக்கிஷங்களைத் தேடி

பழைய பொருள் விற்பனைக் கடைகளில் வித்தியாசமான பொருள்கள் ஏதாவது கிடைக்கிறதா என்பதைத் தேடி அலைவார் ராகுல். காலாவதியான டாக்குமென்ட் பாக்ஸ்சுகள் அத்தகைய ஒரு பொருள். “அந்த பாக்ஸ்சுகள் மலேசியாவில் இருந்து கார்ப்பரேட் டாக்குமென்ட்டுகளை ஏற்றிக் கொண்டு வருகின்றன. ஒரு முறை பயன்படுத்தப்பட்டதும் அவை தூக்கி எறியப்பட்டு விடுகின்றன. எங்களின் மேற்சுற்று தாள்களைக் கொண்டு அவற்றைப் புதிதாக உருமாற்றியிருக்கிறோம். ஆனால் இது போன்ற வேஸ்ட் கிடைப்பதெல்லாம் அரிதுதான்” என்கிறார் ராகுல்.

புதிய பொருட்களைத் தயாரிப்பதற்கான ஊக்கம் மற்றும் தாக்கத்தை ராகுல் எங்கிருந்து பெறுகிறார் என்ற கேள்விக்கு, மனிதர்களின் நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் சக மனிதர்களுடன் கலந்துரையாடுவது மற்றும் அவற்றில் இருக்கும் சுவாரஸ்யத்திலிருந்து என்று பதிலளிக்கிறார்.

“ஒரு தனிமனிதனின் இருப்போடு தொடர்புடைய பாலினம், சாதி, மதம், சமூகக் கட்டுப்பாடுகள், பொருளாதார அந்தஸ்து, பெருமை போன்றவற்றைக் குறிக்க அவசியமில்லாமல் கூட அவனது இருப்பு உள்ளது. எனினும் அவன் மீது பெருளாதார மேம்பாட்டு கொள்கைகள் தொடர்ச்சியான தாக்கத்தைச் செலுத்துகின்றன” என்கிறார் ராகுல்.

தி செகண்ட் லைப் குழு அடுத்து சில புதிய தயாரிப்புகளை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. தனது தயாரிப்புகளை சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்லவும் செகண்ட் லைப் திட்டமிட்டுள்ளது.

புதிய தயாரிப்புகள் மூலம் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். கைவினைப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். “இதற்காக சாத்தியமான பல வழிகளிலும் எங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டும் வேலையில் இறங்கியிருக்கிறோம்” என்கிறார் ராகுல்.

2013 நிதியாண்டில் அவர்களின் வருமானம் ஒரு கோடியை எட்டியது.

சந்தை

நீடித்து நிலைத்தல் அதிக கவனம் பெற்று வருவதால், பழைய பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் புதிய பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வும் வளர்ந்து வருகிறது. தி செகண்ட் லைப் போலவே, அரோரா பைபர்ஸ், கிரீன் பவர், லிக்யூட் கோல்ட், கிளீனிங் இ வேஸ்ட் லேண்ட் போன்றவையும் இது போன்ற பொருட்களைத் தயார் செய்து வருகின்றன.

அரசாங்கமும் இந்தத் துறையில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்திய மறு சுழற்சி வர்த்தக அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில், குஜராத் மாநிலத்தில் காலாவதியாகிக் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் 10 சதவீதம் மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்றும் நாடு முழுவதும் 400 கோடியே 40 லட்சம் பவுண்ட் பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்றும் தெரியவந்துள்ளது. எனினும் இந்த மறுசுழற்சிப் பொருட்கள் பிரதான சந்தைக்கு இன்னும் பெரிய அளவில் வரவில்லை என்றே கருதப்படுகிறது. ஏபிசிடியின் வெற்றியைக் காலம் தீர்மானிக்கும்.

ஆக்கம்: சிந்து காஷ்பப் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா

Add to
Shares
133
Comments
Share This
Add to
Shares
133
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக