பதிப்புகளில்

டார்ஜிலிங் டூ கென்யா - எகோம் மேமிக்கின் முருங்கையின் மகத்துவத்தை தேடும் பயணம்!

YS TEAM TAMIL
22nd Dec 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

“நம் மனது சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்?” என ஒரு சிறுவன் வினவினான்.

“ஏனெனில் உன் மனது எங்கிருக்கிறதோ, அங்கு தான் உன்னால் ஒரு புதையலை கண்டுபிடிக்க முடியும்.”

- Paulo Coelho, The Alchemist

எகோம் மேமிக்கிற்கு வாழ்க்கை ஒரு முழு வட்டமாக திரும்பக் கிடைத்தது. அவர் தன்னுடைய பயணத்தை டார்ஜிலிங்கின் தேயிலை தோட்டங்களில் இருந்து தொடங்கினார். அவர் தன் வாழ்க்கை தொடர்பாக சில புரிதல்கள் வைத்திருந்தாலும் புதிதாக சிலவற்றை கண்டுபிடிக்க எண்ணினார், ஆனால் அவரே நினைத்துக் கூட பார்க்காத முக்கியம் வாய்ந்த விஷயங்கள் நடந்தது அவருக்கு வியப்பை அளித்தது.

டார்ஜிலிங்கின் மலைஅடிவாரத்தில் பிறந்து வளர்ந்த எகோம் தன் வாழ்க்கைக்கான அர்தத்த்தை கண்டுபிடிக்கும் தாகத்தோடு பல ஊர்களுக்கு பயணித்தார். இந்த தேடுதலின் போது தான் அவர் மொரிங்காவை (முருங்கை) கண்டறிந்தார். தற்போது ஒரு சிறிய குளிரூட்டி சாரெடுக்கும் யூனிட்டை டார்ஜிலிங்கில் தொடங்கி நடத்தி வருகிறார். அவர் தன்னுடைய அறிவை "மொரிங்காவாட்" (MoringaWhat) நிறுவனம் மூலம் உலகத்தோடு பகிர்ந்து கொள்கிறார்.

image


இதோ அவரின் கதை...

மலையின் குழந்தை

இந்த 27 வயது தொழில்முனைவர் தன் வாழ்வின் பெரும்பாலான ஆண்டுகளை இந்தியாவில் உள்ள டார்ஜிலிங்கின் மலையடிவாரத்திலும், லாரன்ஸ் பள்ளியிலும், தமிழ்நாட்டின் உதகமண்டலத்தில் உள்ள லவ்டேல் உண்டுஉறைவிடப் பள்ளியிலும் செலவிட்டார். அவருக்கு 9 வயது இருக்கும் போது பள்ளியில் சேர்ந்தார்.

தன் குழந்தைப்பருவத்தை நினைவுப்படுத்தி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அவர், “அந்தக் காலகட்டத்தில் எதையும் முயற்சித்து பார்க்கவில்லை. சிறு சிறு மகிழ்ச்சிகளான – எல்லை குறிப்பிடாமல் மனம் போன போக்கில் சைக்கிள் ஓட்டுவது, எல்லா விதமான விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்வது, சிறுத்தைகள் அல்லது காட்டுவழிப் பாதையை கடந்து செல்லும் யானைகளை பார்த்து வியப்பது என முடிவில்லா வானம் போல சுதந்திரமாக சுற்றித் திறிந்தேன். தாவர மற்றும் விலங்குகளை பார்த்து வியந்தது ஒரு பக்கம் என்றால், இந்த இடத்தை எவ்வளவு காதலித்தேன் என்பதை சொல்வதற்கு வார்த்தைகளேயில்லை!”.

லவ்டேல் உண்டு உறைவிடப் பள்ளியில், எகோம் இருந்த காலம் அவரை ஒரு வடிவத்திற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தது.

“இங்கு நாங்கள் தேர்வு செய்யும் நண்பர்களே எங்களின் குடும்பம், அதுவே உறவுகளை உருவாக்க ஒரு உறுதியான அஸ்திவாரம் அமைக்கும் என நான் நம்பியதே எங்களின் வாழ்வில் நாங்கள் வகித்த பன்முக தன்மையில் வெற்றி கண்டதற்கான திறவுகோல். இந்த தீர்க்கமான சிந்தனையே நான் மொரிங்காவாட்டை அணுக உதவியது."

அர்த்தத்தை கண்டுபிடித்தல்

பட்டம் பெற்றவுடன், எகோமின் பயிற்சிகாலம் வேலைவாய்ப்பாக மாறியது, அதைத் தொடர்ந்து அவர் கோல்ட்மேன் சேச்சில் தன்னுடைய பணியை தொடர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் விஷயங்களை வேறு கோணங்களில் அணுக விரும்பினார் ஏனெனில் அவர் புரிந்து வந்த அன்றாட வேலைகள் அவருக்கு சளிப்பை ஏற்படுத்தியது. இந்தப் பணி ஒரு பந்தயம் போல, எகோமால் தன் குடும்பம் மற்றும் உறவினர்கள் உள்பட வேறு விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. எகோம் தன்னுடைய தொழிலில் சாதிக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளவில்லை. குறிக்கோள் என்பது தங்களின் சொந்த விருப்பமும் கூடத்தான் என்பதை மக்கள் சில நேரங்களில் மறந்து விடுகிறார்கள் என்பதே அவருடைய கருத்து. தங்களுக்கு பிரியமானவர்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் அவர்களின் சொந்த கனவு மற்றும் விருப்பத்தை அடைய விரும்புவதும் ஒருவது லட்சியம் தான் என்பதை மக்கள் உணர வேண்டும் என்று சொல்கிறார் அவர்.

இந்த சமயத்தில் அவர் தன் வேலையை விட்டுவிட்டு புதியதொரு அர்த்தத்தையும், வாழ்க்கையையும் தேடி கென்யா செல்ல முடிவெடுத்தார். அதற்கு முன்னர் சில மாதங்கள் தன் குடும்பத்தாருடன் செலவிட்டார்.

“புல் எப்போதும் பசுமை தான். நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நம் சுற்றத்தார்களை கொண்டே அமைகிறது, நம் தேவைகள் மற்றும் எந்த ஒரு விஷயத்தையும் தோல்வி பயமோ அல்லது இழப்போ இல்லாமல் செய்ய நினைப்பது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. நிதர்சனத்தில் உங்களுக்காக நீங்கள் ஏதாவது செய்ய நினைத்தால் அதற்கு உங்களையே நீங்கள் நிறைய சமயம் ஈடுபடுத்த வேண்டும், உங்கள் மொத்த ஈடுபாடு சில நேரங்களில் மொத்த நேரத்தையும் கூட அவை எடுத்துக் கொள்ளும். அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிய சமயத்தில், நான் இதை எனக்காக செய்கிறேன் என்று நினைத்தேன், நான் என்னுடைய சிறிய கனவை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினேன், என் ஆழ்மனதில் இருந்து அவை நினைவிழப்பதற்கு முன்னர் அதை செய்ய நினைத்தேன்.”

அவர் ஆஃப்ரிக்கா பற்றி நிறைய படித்துள்ளார், அதே போன்று நேஷனல் ஜியாகிரபிக் மற்றும் அனிமல் பிளானட்டில் அவை பற்றி சிறு வயது முதலே நிறைய பார்த்துள்ளார், நாட்டிற்காக சில ஆராய்ச்சிகளும் கூட செய்திருக்கிறார். யாராவது அவரிடம் கென்யாவின் பயணம் பற்றிக் கேட்டால், அதற்கும் எகோமிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கும், ஏனெனில் அவர் அங்கு ஒரு கிராமத்தில் பணிபுரிந்துள்ளார். நிலைத்து இருக்கக் கூடிய ஒரு மாதிரி கிராமத்தை உருவாக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. எச்ஐவியால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட குழந்தைகளை மூதாதையர்களின் நிதியைக் கொண்டு வளர்க்கும் அந்த கிராமம் முழுமைக்கும் ஒரு மாற்று வழி தேவைப்பட்டது. அனைத்து பெற்றோரையும் போல, எகோமின் தாயாரும் இதுபோன்ற ஒரு சவாலான பணியை கையில் எடுப்பதை நினைத்து சிறிது கவலையுற்றனர், எனினும் அவர்கள் எகோமிற்கு ஆதரவாகவே இருந்தனர்.

கென்யாவில் மொரிங்காவிற்கான மயாஜாலத்தை கண்டுபிடித்தது

ஆஃப்ரிக்கா பயணம் எகோமின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தது. அவர் ஏதோ ஒன்றை தேடிச் செல்ல அவரின் தேடல் கென்யாவில் முடிவு பெற்றது. “அப்போது நான் எடுத்த ஒரு முடிவு தான் மொரிங்கா வாட். மொரிங்கா ஓலிஃபெரா மரம், மக்கள் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவரும் என நம்பினார், மேலும் அது மக்களுக்கு தேவையாகவும் இருக்கிறது என்பதை உணர்ந்தார்.”

image


மொரிங்கா என்பது இந்தியாவில் முருங்கைக்காய் என்று அழைக்கப்படுகிறது. இது சாம்பாரில் சேர்த்து சமைத்து உண்ணப்படும் ஒரு காய், இந்த காய் மிகவும் பிரபலம், தென் இந்திய சமையல் கலையின் விந்தை. முருங்கை இலைக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் சக்தி உள்ளதாக தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் எகோம். “நாடோடிக் கதைகள், பலதரப்பட்ட கலாச்சாரங்கள், பண்டைய நாகரிகங்கள் அனைத்திலும் இந்த மரத்தின் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்; இது எரிச்சலை தடுக்கும சக்தி மற்றும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்தும் சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. இந்த மரம் மக்களுக்கு மிகவும் தேவையானது மைக்ரோசோம் அளவில் மனித செல்களில் பல்வேறு வியத்தகு ஆச்சரியமிக்க பணிகளை செய்யும் சக்தி படைத்தது,” என்று சொல்கிறார் அவர்.

தனது குழந்தைப்பருவம் முதல் எகோமிற்கு முருங்கை மரத்தை தெரியும் என்றாலும் அவற்றின் மதிப்பையும் பலன்களையும் அவர் கென்யாவில் கண்டார். அவர் அங்கு செலவிட்ட நேரம் ஒரு புது கோணத்தை அவருக்கு வகுத்து கொடுத்ததோடு புதிய நிறுவனத்திற்கான விதையையும் விதைத்து ஒரு இலக்கையும் அவருக்கு நிர்ணயித்தது. எகோம் கென்யா பயணத்தின் போது ஏற்பட்ட மொத்த அனுபவத்தையும் ஒற்றை வார்த்தையில் ‘ஆக்கம்’ என்கிறார்.

மொரிங்காவாட்

“முருங்கை மரம் உலகின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது, இது குறைந்தபட்சம் 200 பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. இவை மலையடிவாரத்திலும் வளர்வதைக் கண்டு (தொடக்கத்தில்) நான் வியந்தேன்.

டார்ஜுலிங் விவசாயிகள்

டார்ஜுலிங் விவசாயிகள்


சில மாத ஆராய்ச்சிக்கு பிறகு அவர் நாடு திரும்பியதும், டார்ஜுலிங்கின் மலையடிவாரத்தில் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் சில விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அவர்களில் பலரோடு எகோம் பிள்ளைப் பருவம் முதல் விளையாடியுள்ளார். அவர்களோடு இணைந்து முருங்கை மரத்தை வளர்த்து அவற்றின் இலைகளில் உள்ள சத்துகள் தொடர்பான விழிப்புணர்வை பரவலாக்க நினைத்தார். “இதில் இருந்த மிகப்பெரிய சவால் “நம்பிக்கை”, ஒரு உறவுமுறையை உருவாக்க இரண்டு வகையிலும் அவருக்கு நம்பிக்கை பாலமாக அமைந்தது. இந்த திட்டம் லாபகரமானது, நான் என்ன செய்கிறேனோ அதுபற்றி முழுமையாக விவசாயிகளிடம் நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் பணியை செய்துள்ளேன்” என்கிறார் எகோம்.

ஸ்டார்ட் அப் அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் 17, 20015 இல் ஆரம்பிக்கப்பட்டது. இணையவழிச் சேவை கடந்த ஜூலை மாத இறுதியில்தான் சாத்தியமானது. முருங்கை விதையிலிருந்து எண்ணெய்யை எடுக்கும் சிறிய யூனிட்டை அமைத்துள்ளார் எகோம். ஒன்றரை ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள முருங்கை மரங்களிலிருந்து விதைகள் சேகரிக்கப்படுகிறது. அவற்றிற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் எண்ணெய் படிமப்படுத்தப்பட்டு, வடிகட்டப்பட்டுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் எண்ணெய் 3 வருடங்களுக்கு குறையாமல் கெடாமல் இருக்கும் வகையில் சுற்றுச்சூழலை பாதிக்காத கண்ணாடி குப்பிகளில் அடைக்கப்படுகிறது. இயற்கை முறையில் தயாரான பொருட்களை பிளாஸ்டிக் குப்பிகளில் அடைத்து விற்பது, அந்த பொருள் மீதான மதிப்பை குறைக்கும் என்று எகோம் நம்புகிறார்.

பெரும்பாலன நேரங்களில் எதை உடல்நலனுக்கு உகந்த சத்தான பொருளாக கருதி உண்கிறோமே, அதை ஏன் வாய் வழியாக மட்டும் உண்ணவேண்டும்? தோல் மற்றும் மற்ற உடல் பாகங்களின் மூலமும் அந்த சத்துக்களை அடைவது தொடர்பாக நாம் ஏன் யோசிக்கவில்லை என்ற கேள்விகளை எகோம் முன்வைக்கிறார். மொரிங்காவாட் மூலம் இந்த நம்பிக்கையை மாற்றுவேன் எனவும் அவர் நம்புகிறார். 

“முருங்கையின் மகத்துவத்தை நீங்கள் ஒருமுறை உணர்ந்தால், அதை நீங்கள் மீண்டும் தேடி வருவீர்கள்” என்கிறார் எகோம்.

முருங்கையின் மாயாஜாலத்தை படிப்படியாக உலகத்திற்கு சொல்லவேண்டும் என எகோம் விரும்புகிறார். முருங்கையின் நற்பலன்களை அறிந்துகொண்டவர்கள், மீண்டும் அதைக்கேட்டு எகோமிடம் வருகிறார்கள். 

கலை மற்றும் இசை – தொழில்முனைவரின் மறுபக்கம்

முருங்கை குறித்த நிபுணத்துவத்தை தாண்டி, எகோம் இன்னும் பல வித்தைகளை மறைத்துவைத்திருக்கிறார். அவருக்குள் கலைஞர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பாத்திரங்கள் அடங்கியிருக்கிறது.

குழந்தைப்பருவத்தின் போது, தனது தாய் மற்றும் பாட்டியும் வண்ணங்களை பயன்படுத்தி வரைவதை பார்த்ததிலிருந்து கலை மேல் ஈர்ப்பு வந்ததாக சொல்கிறார் எகோம். அதற்கு பிறகு எந்த வகுப்பு பயிற்சியுமே எடுக்காமல் ஆயில் கேன்வாஸில் பட்டையைக் கிளப்பிவருகிறார். “நான் எப்பொதெல்லாம் குழப்பத்தில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் முழுமையாக வரைய ஆரம்பித்துவிடுவேன். அது எனக்குள்ளான குழப்பத்தை தீர்க்கும் மருந்தாக அமைந்துவிடுகிறது” என்கிறார் எகோம். வரையும் கலையை போல், இசையிலும் சிறுவயது முதலே ஆர்வமுடன் பங்கேற்றுவருகிறார் எகோம். “இசை எப்போதும் தேவைப்படும் ஒன்றாகும். மனசாட்சிப்படி சொல்லவேண்டும் என்றால் இசையில்லாத வாழ்வை யோசித்துக்கூட பார்க்கமுடியாது” என்கிறார் அவர்.

image


நேர்மையாக தொழிலை கட்டமைக்கவேண்டும்

சவால் என்பது எகோமின் வாழ்வில் ஒரு அங்கம் என்று தான் சொல்லவேண்டும். நிகரில்லாத நேர்மை மட்டுமே வாழ்வை முன்னெடுத்துச்செல்ல உதவும் என நம்புகிறார் எகோம்.

“பாதுகாப்பின்மை என்பது இயற்கையாக பல வகைப்படும். அது உங்களை உணர்வுப்பூர்வமாகவும், உடல் ரீதியாகவும் பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கும். அப்போது பொறுமையாக அமர்ந்து யோசித்தால், ஒருவருடன் எந்தளவு நேர்மையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும். கடும் போராட்டத்திற்கு மத்தியில் தங்களுக்கு தாங்களே நேர்மையாக நடந்துகொள்ளும் பலரில் வெகு சிலரே அங்கீகாரம் பெற்றுள்ளனர். தொழிலை கட்டமைப்பது என்பது நல்ல உறவுகளை பேணிக்காப்பது மட்டுமல்ல, ஒருவருடன் நேர்மையாக நடந்து கொள்வதில் தான் உள்ளது” என்கிறார் எகோம்.

தொடர்ந்து ஓடுபவராக இருங்கள்

உங்கள் வாழ்வில் ஓட்டத்தில் இல்லாத ஒன்றை, கனவை, குறிக்கோளை உங்களால் விரட்டி பிடிக்கமுடியாது. எப்போதெல்லாம் சிறிய விஷயங்களை மறந்துபோகிறோமோ, கவனிக்கத் தவறுகிறோமோ அப்போதெல்லாம் உங்களை விரும்புகிறவர்களுடன் அமர்ந்து இயல்பாக பேசுங்கள். இது உடன்பிறப்புகளுடனோ, காதலருடனோ இருக்கலாம். ஏனென்றால், வாழ்வின் நிலைப்பாட்டில் நாம் பல விஷயங்களை உணராமல், கடினமானதாக நினைக்கிறோம், அதுதான் நாம் திட்டமிட்ட குறிக்கோளை அடைய உதவும். பயணம் மட்டுமே வாழ்க்கை, இறுதிவரை அது ஒன்று மட்டுமே நமது வாழ்வின் உட்பொருள்” என்று முடிக்கிறார் எகோம்.

கட்டுரை: தன்வி துபே | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags