பதிப்புகளில்

'தகவல் திங்கள்'- வன்பொருளில் புதுமை செய்வோம் வாருங்கள்!

1st May 2016
Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share

சில ஆண்டுகளுக்கு முன் லிட்டில் பிரிண்டர் எனும் சாதனம் அறிமுகமானது. இந்த சாதனம் பெரிய அளவில் வரவேற்பையும் பெறவில்லை. அதை தயாரித்த நிறுவனமும் பின்னர் மூடப்பட்டுவிட்டது என்பதால், இந்த தகவல் எந்த ஊக்கத்தையும் அளிக்கப்போவதில்லை.

இருப்பினும், லிட்டில் பிரிண்டரை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள காரணம் இல்லாமல் இல்ல. அது நம் காலத்து சாதனமாக இருந்தது என்பதோடு, ஹார்டுவேர் என குறிப்பிடப்படும் வன்பொருள் சார்ந்த புதுமைக்கான அடையாளமாகவும் இருந்தது என்பது தான் விஷயம். அதன் காரணமாகவே அதன் தேவையை உலகம் உணராமல் போனதே என்ற வருத்தமும் இருக்கிறது.

லிட்டில் பிரிண்டர் என்ன செய்தது, ஏன் வரவேற்பை பெறாமல் போனது, அதையும் மீறி ஏன் கவனத்தை கோருகிறது என்றெல்லாம் பார்ப்பதற்கு முன்னர், இப்போது இணைய உலகில் கவனத்தை ஈர்க்க முயலும் சீநோட் சாதனத்தை பார்க்கலாம்.

நன்றி- digitalworldnative

நன்றி- digitalworldnative


சீநோட் (SeeNote) பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், டிஜிட்டல் ஒட்டுச்சீட்டு என குறிப்பிடலாம். எப்போதும் இயக்கத்தில் இருக்கும் எனும் வார்த்தைகளையும் சீநோட் தனக்கான அறிமுகத்தில் சேர்த்துக்கொள்கிறது. ஒட்டுச்சீட்டு என்றால் குறிப்புகளுக்கான ஸ்டிக்கி நோட் என புரிந்து கொள்ளவும்.

எந்த ஒரு நல்ல தயாரிப்பை போலவும், இந்த டிஜிட்டல் சாதனம் பற்றியும் அதன் ஒரு வரி அறிமுகத்தை விளக்கிக் கூற நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.

செயல்திறன் மேன்மையில் அக்கரை கொண்டவர்களுக்கு, ஒட்டுச்சீட்டுகளின் (ஸ்டிக்கி நோட்ஸ்) அருமையை விளக்க வேண்டியதில்லை. முக்கிய விஷயங்கள் மற்றும் செய்து முடிக்க வேண்டிய பணிகளை மறக்காமல் இருப்பதற்கான குறிப்புகளை எழுதி வைக்க இந்த சீட்டுகள் உதவுகின்றன. உள்ளங்கை அளவு உள்ள இந்த மஞ்சள் வண்ண காகிதங்களை கண் பார்வையில் படும் இடங்களில் ஒட்டி வைத்துக்கொள்ளலாம்.

இந்த வகை சீட்டுகளை எப்படி திறம்பட பயன்படுத்துவது என்பது பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் என்றாலும், இவை பயனுள்ளவை, பரவலாக பயன்படுத்தப்படுபவை என்பதை மட்டும் இங்கு நினைவில் வைத்துக்கொண்டால் போகும்.

இந்த சீட்டுகளை டிஜிட்டல் வடிவிலும் கூட உருவாக்கிக் கொள்ளலாம்: இவற்றுக்கான இணைய செயலிகள் மற்றும் மொபைல் செயலிகள் இருக்கின்றன. கூகுள் கீப் செயலி மூலமும் எளிதாக டிஜிட்டல் வடிவ ஒட்டுக் குறிப்பு சீட்டுகளை உருவாக்கி கொள்ளலாம்.

இந்த சீட்டுகளை மேலும் சிறந்த முறையில் டிஜிட்டல் வடிவமாக்கும் வகையில், இவற்றை உள்ளங்கை அளவு சாதனமாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் பெயர் தான் சீநோட்! மூன்ரூப் எனும் புதிய நிறுவனம் இதை உருவாக்கி இருக்கிறது. 3.5 இன்ச் சதுர வடிவில், 4.2 இன்ச் இ-காகித டச் ஸ்கிரீன் வசதியுடன் இது அமைந்துள்ளது.

image


வீட்டில் பிரிட்ஜ் அல்லது சுவற்றில் என எளிதில் கண்ணில் படக்கூடிய இடத்தில் இந்த உள்ளங்கை அளவு சாதனத்தை ஒட்டி வைத்துவிடலாம். இதன் காகித சகாவான குறிப்புச்சீட்டு போலவே இதிலும் குறிப்புகளை பார்க்கலாம். ஆனால், வேலை முடிந்ததும் காகித சீட்டை தூக்கி எறிந்துவிட வேண்டும். இந்த டிஜிட்டல் சாதனம் அப்படியே இருக்கும். அதில் இடம்பெறும் குறிப்புகள் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இந்த தன்மை தான் ஆல்வேஸ் ஆன், அதாவது எப்போதும் இயக்கத்தில் இருப்பது என குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல, இந்த குறிப்பேடு மிகவும் புத்திசாலித்தனமானது. பயனாளிகள் இதில் எதையும் எழுதாமலே இது தானாக அப்டேட் செய்து கொள்ளும். இது எப்படி சாத்தியம்?

இங்கு தான் இந்த டிஜிட்டல் குறிப்பு ஒட்டு சீட்டின் முக்கிய பரிமானம் வருகிறது. இந்த டிஜிட்டல் சாதனம், வயர்லெஸ் முறையில் சீ நோட் கிளவுட்டில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கிளவுட் சேவை பயனாளிகளின் ஸ்மார்ட்போனில் இருந்து அப்டேட்களை உருவி, டிஜிட்டல் குறிப்பேட்டில் தோன்றச்செய்யும்.

ஆக, பயனாளிகள் டிஜிட்டல் குறிப்பேட்டில் எதையும் குறித்து வைக்க வேண்டிய தேவையில்லை. ஸ்மார்ட்போன் செயலிகளில் பதிவு செய்யும் விஷயங்கள் தானாக இந்த சாதனத்தில் தெரியும். அவ்வளவு தான்! அந்த வகையில், இது உங்கள் குறிப்புகளுக்கான டிஜிட்டல் திரை போன்றது.

காகித வடிவிலான குறிப்பு சீட்டின் டிஜிட்டல் வடிவமாக இருக்கும் இந்த சாதனம், குறிப்பு சீட்டின் பயன்பாட்டையும் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அதில் உள்ள வரம்புகள் இல்லாமல் மேம்பட்ட அம்சங்களை பெற்றிருக்கிறது.

image


குறிப்பு சீட்டுகள் நல்ல உத்தி என்றாலும், முதலில் அது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக இன்றைய குறிப்பு சீட்டு வேலை முடிந்ததும் பயனற்றதாகிவிடும். மீண்டும் புதிதாக எழுதி வைக்க வேண்டும்.

இந்த குறைகளை போக்கும் வகையில் சீநோட் டிஜிட்டல் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை காகித சீட்டு போலவே கண் பார்வைக்கான இடத்தில் ஒட்டி வைக்கலாம். அதன் பிறகு, ஸ்மார்ட் போனில் பதிவாகும் குறிப்புகள் இதில் தானாக தோன்றிக்கொண்டே இருக்கும். இன்றைய வானிலை முதல், டின்னருக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கான நினைவூட்டல் வரை அனைத்து குறிப்புகளையும் இதில் பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு ரிமைண்டர் செயலி, கூகுள் காலெண்டர், விங்க் உள்ளிட்ட செயலிகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு கூகுள் வரைபடம், ஆப்பிள் வரைபடம் மற்றும் இணைய பணிகளுக்கான தானியங்கி வழியான ஐ.எப்.டி.டி.டி சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போனில் இந்த செயலிகளில் குறித்து வைக்கும் விவரங்கள் டிஜிட்டல் குறிப்பு சீட்டில் தெரியும் என்பதால், ஸ்மார்ட் போனை எடுத்து பார்க்கமாலேயே எதையும் மறக்காமல் இருக்கலாம்.

ஆக, ஒரு வாரம் கழித்து காலெண்டரில் முக்கிய பணியை குறித்து வைத்தால் அன்றைய தினம் அந்த பணி சரியாக நினைவூட்டப்படும்.

இவைத்தவிர வீட்டில் உள்ளவர்களுக்கு நினைவூட்ட விரும்பும் தகவலை இமெயில் வாயிலாக அனுப்பினாலும் அது இந்த திரையில் தோன்றும்.

சுருக்கமாக சொன்னால், இந்த டிஜிட்டல் சாதனம் ஸ்மார்ட்போனுக்கான இன்னொரு திரை போன்றது. ஆனால் இந்த திரை டிஜிட்டல் குறிப்பு சீட்டு வடிவில் கண்முன் தோன்றிக்கொண்டிருப்பது தான் இதன் சிறப்பம்சம்.

ஸ்மார்ட்போனை கையில் எடுத்து பார்க்காமலே அதில் இடம் பெற வைத்துள்ள திட்டமிடல் குறிப்புகளை பார்த்துக்கொள்ளலாம் என்பது இந்த சாதனத்தின் பயன்பாட்டு அம்சம்.

ஆனால் இன்னொரு சாதனமாக கூடுதல் சுமையாக அமைந்துவிடாமல் மிக எளிமையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நோட்டிபிகேஷன் அம்சங்கள் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. பழைய செய்திகளை பார்க்க முடியாது. மெனு வரிசையும் இல்லை. முக்கிய குறிப்புகளை மட்டும் அவ்வப்போது பார்த்துக்கொண்டிருக்கலாம். தினசரி வாழ்க்கையில் அதிகம் ஊடுருவாமல், அன்றாட வாழ்க்கை பணிகளுக்கு உதவக்கூடியது.

எதிர்காலத்தில் மேலும் சில முக்கிய வசதிகள் அறிமுகம் ஆக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றில் இதற்கு நிகரான வசதிகள் இருந்தாலும், குறிப்புச் சீட்டின் டிஜிட்டல் வடிவமாக அமைந்திருப்பதால் இந்த சாதனம் நவீன வாழ்க்கையில் தேவையான ஒன்றாக அமையலாம்.

பலவித சாத்தியங்களை கொண்டுள்ள இந்த சாதனம் அடுத்த அண்டு விற்பனைக்கு வருகிறது. அதற்கு முன் 99 டாலருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இது பற்றி சீநோட் பின்னே உள்ள மூன் ரூப் நிறுவனர் மேத்யூ பிளியஸ்டர்ன் (Matthew Bleistern) விளக்கம் அளித்து விரிவான வலைப்பதிவும் எழுதியிருக்கிறார்.

இன்னமும் விற்பனைக்கு வராத நிலையில் இந்த சாதனம் எந்த அளவு வரவேற்பை பெறும் என்பது பற்றி உறுதியாக கூற முடியவில்லை. ஆனால் கருத்தாக்க அளவில் இது பயனுள்ள சாதனமாக இருப்பதால் தான் கவனத்தை ஈர்க்கிறது.

இண்டெர்நெட் ஆப் திங்ஸ் என்று சொல்லப்படும், இணைக்கப்பட்ட பொருட்களுக்கான அருமையான உதாரணமாகவும் இது அமைகிறது.

அன்றாடம் பயன்படுத்தும் எல்லா பொருட்களையும் இணையத்துடன் இணைக்கலாம் என்பது தான் இண்டெர்நெட் ஆப் திங்சின் பின்னே உள்ள கருத்தாக்கம். அது வெறும் புதுமை அல்ல, பயன்பாடு சார்ந்தது என்பதை உணர்த்தும் ஆற்றல் கொண்டதாக சீநோட் டிஜிட்டல் சாதனம் அமைகிறது.

இதன் வெற்றி தோல்வியை மீறி, நமக்கான வன்பொருள்களில் இன்னமும் எந்த அளவுக்கு புதுமைகள் சாத்தியம் என்பதையும் இது உணர்த்துகிறது. இணையம், மென்பொருட்கள், செயலிகள் இவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க கூடிய வகையில் புதுமையான வன்பொருள் சாதனத்தை வடிவமைக்க முயற்சி செய்தால் பல அற்புதங்களை நிகழ்த்தலாம்.

லிட்டில் ப்ரின்டர் நன்றி- reddit.com

லிட்டில் ப்ரின்டர் நன்றி- reddit.com


தினசரி வாழ்க்கையில் பிரச்சனைக்குத் தீர்வாக அவை இருக்குமாறு பார்த்துக்கொண்டால் போதுமானது.

இப்போது லிட்டில் பிரிண்டரை மீண்டும் நினைத்துப்பார்க்கலாம். ஒரு சின்ன பெட்டி அளவிலான இந்த சாதனம், டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளை நமக்கான செய்திகளாக அச்சடித்துக்கொள்ளும் வசதியை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. சமூக ஊடகங்கள் வழியாக பலரும் தங்களுக்கான செய்திகளை பெறுவது வழக்கமாக இருக்கும் காலத்தில், நமது வலைப்பின்னலில் தோன்றும் செய்திகளை, நாமே ஒரு சின்ன காகித நாளிதழாக அச்சடித்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதை தான் லிட்டில் பிரிண்டர் செய்ய முடிந்தது.

ஆனால் பல காரணங்களினால் அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் என்ன அது நம் காலத்து சாதனம் என்பதில் சந்தேகமில்லை. எதிர்காலத்தில் உருவாகக்கூடிய இன்னும் எண்ணற்ற டிஜிட்டல் சாதனங்களுக்கு எல்லாம் அது முன்னோடி தான்!.

சீநோட் பற்றி அறியலிட்டில்பிரிண்டர் பற்றி அறிய

தகவல் திங்கள் தொடரும்...

முந்தைய பதிவுகள்: விக்கிபீடியாவுக்கு வேண்டும் ஒரு ஆதாரமாணி!

70 ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தை ஊகித்த எழுத்தாளர்!

ஃபேஸ்புக் காலத்தில் காபி கோப்பை மூலம் நட்பு வளர்க்கும் இணையதளம்

Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக