பதிப்புகளில்

ஸ்மார்ட்போனில் செல்ஃபி போட்டோக்களை அழகுப்படுத்த உதவும் 'கேமராப்ளஸ்'

24th Nov 2015
Add to
Shares
38
Comments
Share This
Add to
Shares
38
Comments
Share

ஸ்மார்ட்போன்கள் எல்லோரின் கைகளிலும் சாதாரணமாக தவழத்துவங்கி இருக்கின்றன. அன்றாடம் போட்டோ எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் எல்லா தரப்பினரும் பாரபட்சமில்லாமல் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்மார்ட்போனிலேயே போட்டோ எடுப்பதற்கென தனியே செயலி இருக்கிறது. ஆனால் அதன்மூலம் மிக அடிப்படையான செயல்பாடுகளை மட்டுமே செய்ய முடியும். சில கூடுதலான கருவிகளுக்கு தனியே ஒரு செயலி தரவிறக்கிக்கொள்ள வேண்டும்.

இதற்காகவே 'கேமரா ப்ளஸ்' (Camera Plus) என்ற செயலியை க்ளோபல் டிலைட் என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதை ஆப்பிள் தனது ஐட்யூன்ஸில் "மேட் இன் இந்தியா” என்ற வரிசையில் பட்டியலிட்டிருக்கிறார்கள். இந்தியாவை சேர்ந்தவர்களுக்காக மட்டும் இந்த செயலியை பத்து ரூபாய்க்கு வழங்குகிறார்கள். (மற்றவர்கள் 0.99 டாலர் செலுத்த வேண்டும்)

இது என்ன செய்கிறது?

உடுப்பியில் இயங்கக்கூடிய க்ளோபல் டிலைட் என்ற நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி இருக்கிறது. இது ஸ்மார்ட்போனோடே இருக்கும் கேமராவின் மூலம் சிறப்பாக படம் எடுக்க உதவுகிறது. இந்த செயலியின் முதல் வெளியீடு 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. செப்டம்பர் 2013 வரை இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்டது. முதல் 40 நாட்களில் மட்டும் ஒரு மில்லியன் பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

அக்டோபர் 2013ல் இந்த செயலியின் மூன்றாவது வெளியீடு 1.99 டாலருக்கு வெளியிடப்பட்டது. இது பல்வேறு புகைப்படம் பிடித்தலில் சில கூடுதல் சிறப்பம்சங்களை உள்ளடக்கியது ஆகும். குருபிரசாத் கமத் என்பவர் இந்த நிறுவனத்தின் மார்கெட்டிங் டைரக்டர் ஆவார். இவர் பேசும்போது, “2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏர் ஸ்னாப் எனப்படும் செயலியை அறிமுகப்படுத்தினோம். ஐஓஎஸ் 8ல் உலகம் முழுக்க வெளியிடப்பட்ட ஒரே கேமரா செயலி ஆகும். ஏப்ரல் 2015ல் ஆப்பிள் கடிகாரத்தில் இயங்கக்கூடிய கேமரா ப்ளஸ் செயலியை வெளியிட்டோம்” என்றார்.

இவர்களின் கதை

க்ளோபல் டிலைட் என்பது ரோபோசாஃப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒரு அங்கம் ஆகும். இது ரோஹித் பாட் என்பவரால் 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ரோபோசாஃப்ட் நிறுவனம் இரண்டாம் கட்ட நிதியை ஆஸ்செண்ட் கேபிடல் மற்றும் ஏற்கனவே நிதி பெற்ற நிறுவனமான கலாரி கேப்பிடலிடமிருந்தும் ஏப்ரல் 2015ம் ஆண்டு திரட்டியது. க்ளோபல் டிலைட் நிறுவனம் ஐஓஎஸ் கருவிகளுக்கான பயன்பாட்டு செயலியையும், 99கேம்ஸ் விளையாட்டு செயலியையும் உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராமசந்திர ஆச்சாரியா க்ளோபல் டிலைட்டின் துணைத்தலைவர், 2000ம் ஆண்டிலிருந்து கணினி மற்றும் கைபேசிகளுக்கான செயலிகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப ஆலோசனையை வழங்குகிறார். இவர் முன்னாள் பேராசிரியர், ப்ரவுசிங்க் டெக்னாலிஜிஸில் காப்புரிமை வைத்திருப்பவர், கோடிங்க் எழுதுவதில் தீவிர விருப்பமுள்ளவர். நிறுவனத்தின் ஆரம்பகட்டத்தில் கேம் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர்.

image


ஸ்ரீனிவாசா பிரபு என்பவர் NMAMITயில் இருந்து வந்த கணினி பொறியாளர். இந்நிறுவனத்தின் மிகமுக்கியமான டெவலப்பர்.பூம், கேமரா ப்ளஸ், கேமரா ப்ளஸ் ப்ரோ போன்றவற்றின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர். “முன்பு என்னுடைய முதல் ப்ராஜக்டுக்காக ஐரோப்பாவை சேர்ந்த நிறுவனத்திற்காக பணியாற்றினேன். அதில் என் பங்களிப்பை ரோஹித் பாட் கவனித்தார். இந்த நிறுவனத்தின் ஆரம்பகட்ட டெவலப்பர் குழுவில் நானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்” என தெரிவித்தார்.

க்ளோபல் டிலைட் க்ராபிக் மற்றும் யூஎக்ஸ் டிசைனர்களை உள்ளடக்கிய மூன்று டெவலப்பர்களை கொண்ட குழுவை கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் கேமரா ப்ளஸ் செயலி உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். ஆப்பிள் தனது முதல் ஐபோனை வெளியிட்ட போது க்ளோபல் டிலைட் சில அடிப்படை செயல்பாடுகளை உள்ளடக்கிய கேமரா செயலியை வெளியிட்டது. பயனர்கள் முழுமையான பலன்களை பெற வேண்டும் என்ற நோக்கில் கேமரா ப்ளஸ் என்ற செயலியை கூடுதல் அம்சங்களோடு வெளியிட்டார்கள். இது குறைந்த ஒளியுள்ள இடங்களிலும் படம் எடுக்கும் வகையிலும், நேரம் தாண்டி படம் எடுக்கும் வகையிலும், படங்களை திருத்தவும் உதவுகிறது.

"லைவ் ஃபில்டர் சேவையை முதல் முதலில் அறிமுகபடுத்தியதே நாங்கள் தான். இதன் மூலம் போட்டோ எடுக்கும்போதே ஃபில்டர் செய்ய முடியும். தொழில்நுட்ப அடிப்படையில் இது எளிதான ஒன்றல்ல. ஆனால் எங்கள் குழு இதை சாதித்திருக்கிறது. இத்தனைக்கும் எங்கள் குழு மிகக்குறைந்த நிரலாக்க திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் ஒரு தொடுதலில் புகைப்படம் சார்ந்த எல்லாவற்றுக்கும் தீர்வளிக்க விரும்புகிறோம்” என்கிறார் ராமசந்திரா.

அம்சங்கள்

போட்டோக்களை தொலைதூரத்தில்(remote) இருந்தும் எடுக்கலாம் : ஏர்ஸ்னாப் பயனர்கள் ஏதேனும் இரண்டு ஐஓஎஸ் கருவிகளை வைஃபை மூலமாகவோ ப்ளூடூத் மூலமாகவோ இணைத்துக்கொள்ளலாம் ( ஐபோன், ஐபாட் அல்லது ஆப்பிள் வாட்ச்). இதன் மூலம் மற்றொரு கருவி எங்கிருந்தாலும் செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்கலாம். இதில் ஒரு கருவி ரிமோட்டாகவும் மற்றொரு கருவி கேமராவாகவும் செயல்படுகிறது.

மேக்ரோ புகைப்படம் : "மேக்ரோ ஃபோகஸ்” எனப்படும் அம்சம் புகைப்படத்துடன் சில கூடுதலான தகவல்களை வழங்குகிறது. கேமரா ப்ளஸ் மற்றோரு ஃபோகஸ் மோடான "far" என்ற அம்சத்தை பெற்றிருக்கிறது. இதன்மூலம் தூரத்தில் இருப்பதையும் படம் எடுக்க முடியும் (எ.கா மலைகள், இயற்கை)

குவிப்பு மாற்றம் : (focus shift) ஒளிப்பதிவின் போது zoom-in, zoom-out செய்ய உதவுகிறது. இது சினிமா மற்றும் நாடகத்தன்மையை வழங்க உதவுகிறது. கேமரா ப்ளஸ் 480p மற்றும் 720p வடிவத்தில் வீடியோக்களை எடுக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற அம்சங்கள் : கேமரா ப்ளஸ்ஸில் திருத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவும் வகையில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. லுமி(lumy) புகைப்படம் மற்றும் வீடியோவில் ஒளியை கூட்டவும் குறைக்கவும் உதவுகிறது. பிக்ஸ்ட் (Pix’d) ஒரே தொடுதலில் தானாக புகைப்படத்தை மேம்படுத்த உதவுகிறது. புகைப்பட தலைப்புகள் (photo captions) என்ற அம்சம் புகைப்படங்களில் வார்த்தைகளை உள்ளீடு செய்ய உதவுகிறது. புகைப்படங்களின் கலரை மாற்றவும், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனியாக ஒரு ஃபோல்டரில் பாதுகாப்பாக சேமிக்கவும் உதவுகிறது.

ஐபேட் மற்றும் ஆப்பிள் கடிகாரத்தில் ஒருங்கிணைப்பு : கேமரா ப்ளஸ்ஸில் கவுண்டவுன் டைமர் என்ற அம்சம் இருக்கிறது. போட்டோ எடுத்ததும் உடனடியாக பார்க்கவும், போட்டோ எடுக்கும்போதே நேரடி முன்னோட்டம் பார்க்க முடியும் இதை ஆப்பிள் கடிகாரத்தில் இந்த சேவையை வழங்குகிறது. ஐபாடில் மென்மையான ஃப்ளாஷ் இருக்கிறது. இது சரியான ஃப்ளாஷில் எடுக்கப்பட்ட போட்டோ போன்ற தோற்றத்தை காட்டுகிறது. கேமராவின் ட்ரிக்கரை நமக்கு பிடித்த இடத்துக்கு மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.

இந்த துறை :

புகைப்படங்கள் சமூகவலைதளமான இன்ஸ்டாக்ராம், பிண்ட்ரஸ்ட், ஸ்னாப்சாட், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் உலக மார்கெட்டில் ஆதிக்கம் பெற்றுள்ள நிலையில், அதில் ஏற்கனவே இருக்கும் கேமரா செயலி வழங்கும் அம்சங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. எனவே கேமரா செயலிகளுக்கு மிகப்பெரிய சந்தை இருப்பதை புரிந்துகொள்ள முடியும்.

ஆப் அன்னி (app annie) நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அடிப்படையில் ஐஓஎஸ் மென்பொருளில் போட்டோ மற்றும் வீடியோவுக்காக பயன்படுத்தப்படும் செயலிகளில் இந்தியாவில் முதல் மூன்று இடத்தில் இருப்பவை யூட்யூப், இன்ஸ்டாக்ராம் மற்றும் ப்யூட்டிப்ளஸ் ஆகும். கட்டண செயலி அடிப்படையில் கேமராப்ளஸ், விடியோ டவுன்லோடர் சூப்பர் ப்ரீமியம் மற்றும் கேமரா+க்கு அடுத்த படியான இடத்தில் உள்ளது.

உலகில் முப்பது மில்லியன் பயனர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. குருபிரசாத் சிலவற்றை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

“கேமராப்ளஸ் 17 முதல் 40 வயது உள்ளவர்களால் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. முதல் ஐந்து சந்தையாக ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, ஐக்கிய ராஜ்யம் மற்றும் சீனாவால் பயன்படுத்தப்படுகிறது. இப்போது ஆசிய சந்தையில் தீவிர கவனம் செலுத்தியிருக்கிறோம்” என்கிறார்.

யுவர்ஸ்டோரி தகவல்கள்

கேமராப்ளஸ் பயனர்களுக்கு ஆர்வமளிக்கக்கூடிய வடிவில் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. "ஏர் ஸ்னாப்” ரிமோட்டில் குழு போட்டோ எடுப்பதற்கும் செல்ஃபி எடுப்பதற்கும் உதவுகிறது. எந்த இரண்டு ஐஓஎஸ் கருவியையும் வைஃபை மற்றும் ப்ளூடூத்தில் இணைத்து எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.

லுமி, பிக்ஸ்ட் மற்றும் போட்டோ கேப்சன்ஸ் போன்றவை மிகமுக்கியமான அம்சம் ஆகும். பயனர்கள் தங்களுக்கு பிடித்த வகையில் போட்டோக்களை திருத்த உதவுகிறது, இதற்காக மற்ற செயலிக்கு மாறிக்கொண்டிருக்க தேவையில்லை. மிகச்சிறப்பான டெவலப்பர் குழுவை கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஆசிய சந்தை மற்றும் உலக சந்தையை தன் வசப்படுத்திய கதை கவனிக்கத்தக்கது.

இணையதளம்,செயலி

ஆங்கிலத்தில் : Harshith Mallya | தமிழில் : Swara Vaithee

Add to
Shares
38
Comments
Share This
Add to
Shares
38
Comments
Share
Report an issue
Authors

Related Tags