பதிப்புகளில்

அமேசான் பொருட்கள் டெலிவரியில் சென்னையை கலக்கும், ‘கூரியர் கேர்ள்ஸ் சர்வீஸ்’

YS TEAM TAMIL
13th Oct 2017
Add to
Shares
125
Comments
Share This
Add to
Shares
125
Comments
Share

ஆண்களுக்கு நிகராக எல்லாத்துறைகளிலும் பெண்கள் நுழைந்துவிட்டாலும், அடிப்படையில் சில துறைகளில் விரல் விட்டு எண்ணும் அளவு குறைவாக தான் செயல்படுகின்றனர். எல்லாத்துறைகளிலும் எண்ணிக்கையிலும் அதிகரிக்கும் போதே முழுவெற்றியாகும்.

ஆண்களே ரிஸ்க்காக எண்ணும் வேலையில் தற்போது பெண்களும் துணிந்து சுதந்திரமாகத் தடம் பதித்து, சிறப்பாக இயங்கி வருகின்றனர். காலம் காலமாக ‘கூரியர் பாய்’ தான் கேள்விப்பட்டு இருப்போம். சென்னையில் ’கூரியர் கேர்ள் சர்வீசை’ துவங்கியுள்ளார் ராமாபுரத்தை சேர்ந்த ‘ஜமுனாராணி’ என்பவர்.

ஜமுனா ராணி தன் குழுவினருடன்

ஜமுனா ராணி தன் குழுவினருடன்


‘‘மன்னர்கள் காலத்தில் ஓலைச்சுவடியில் தூது கொண்டு செல்பவரில் தொடங்கி, தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களின் விநியோகம் வரை ஆண்களின் வசமாகவே இருந்து வருகிறது டெலிவரித் துறை. பயணமும் வாகனங்களைக் கையாள்வதும் ஆண்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நினைப்புதான் பெண்களை இந்தத் துறையில் இருந்து தள்ளிவைத்துள்ளது,’’ என்று ஆதங்கத்துடன் பேசத்துவங்கினார் ஜமுனா ராணி.

“திருமணத்துக்குப் பிறகு தொழில் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆண்களை போல உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்யவேண்டும் என்று ஆவலில் இருந்தேன்.”

அப்போதுதான் அமேசான் நிறுவனம் பெண்கள் டெலிவரி குழுக்களை துவங்க இருப்பதாகச் செய்தித்தாளில் படித்தேன். உடனே அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று நினைத்தேன். அப்போது தான் என் தோழிகள் ஜெயசுதாவும், கோமதியும், ‘‘நாங்களும் இந்த வேலைக்கு வருகிறோம்,’’ என்று ஆவலோடு முன்வந்தாங்க. தற்போது ஐடி நிறுவனங்கள், மற்றும் சில குறிப்பிட்ட குடியிருப்புகளுக்கு தான் டெலிவரிக்கு செல்கிறோம். பாதுகாப்பு கருதி இதை நாங்களே திட்டமிட்டுக் கொண்டோம்.

டெலிவரிக்கு செல்லும் இடங்களில் முதலில் எங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு. ‘எப்படிமா பயமே இல்லாம இந்த வேலையை செய்றீங்க?’ என்றார்கள் தொடர்ந்து கவனித்த வாடிக்கையாளர்கள் இப்போது எங்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

தற்போது போருர், ராமாபுரம் பகுதியின் தனி அடையாளமாக இருக்கும் இவர்கள், தங்கள் அனுபவங்களை வார்த்தைகளாக்கினார்கள். ‘அலைச்சல் மிகுந்த வேலைச் சிரமமாக இல்லையா?’ என்று கேட்டால்,

“எந்த வேலையில்தான் சிரமம் இல்லை சார்? இப்போ தான் சுதந்திராமக வேலை செய்றோம், தினமும் பட்டாம்பூச்சி மாதிரி பைக்ல பறந்துட்டு இருக்கோம்,’’ என்று பதில் வருகிறது கோமதியிடம் இருந்து. 
டெலிவரி செய்யும் பெண்கள்

டெலிவரி செய்யும் பெண்கள்


தற்போது பதிமூன்று பெண்கள் வேலை செய்துவருகிறார்கள். பலரும் முதல் முறையாக வேலைக்குச் செல்கிறவர்கள். காலையில் பத்துமணிக்கு துவங்கி மாலை ஐந்து மணி வரை தான் டியூட்டி டைம்.

“காலையில் எனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, பார்சல் பேக்கை முதுகில் மாட்டுவேன் மாலை 5 மணிக்குள் 30-ல் இருந்து 35 பார்சல்களை டெலிவரி செய்துவிடுவேன். மீண்டும் மாலை குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்வேன்.

‘‘வாழ்வாதாரத்திற்கு தேவையான வருமானம் கிடைக்கிறது. இவ்வேலை எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளது. முன்பை விட தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. உற்சாகமாகவே பணியைச் செய்துவருகிறோம்,’’ என்கிறார் ஜமுனாராணி.

‘‘பதட்டமோ பயமோ இந்த வேலையில் இல்லை லேசான துணிச்சல் இருந்தால் போதும். பெண்கள் துணிந்து செய்யலாம். தற்போது போர்ரூர் சுற்றி உள்ள 15 கிலோமீட்டர் பகுதியில் மட்டும் டெலிவரி செய்துவருகிறோம். விரைவில் நிறையப் பகுதிகளுக்கு டெலிவரி செய்ய உள்ளனர். எங்களுக்கு இருக்கும் ஒரே சிரமம் மழை வெயில் தான். ஆண்களைப் போல எங்கள் உடல் சீதோஷனை நிலையைச் சமன் செய்ய முடியவில்லை. வெயில் அதிகம் இருக்கும் நேரங்களில் மட்டும் சிரமம் அதிகமாக இருக்கும் என்கிறார் டெலிவரி கேர்ள் ஜெய சுதா.

ராமாபுரம் டெலிவரி ஸ்டேஷனைப் பொறுத்தவரை, காலை எட்டு மணிக்கு வரும் நிறுவன வேனிலிருந்து பொருட்களை இறக்கி, ஒவ்வொருவரும் தங்களுடைய வழித்தடத்தைப் பிரித்துக்கொள்வோம். தங்கள் பகுதிக்கான விநியோகப் பொருட்களைப் பெரிய பையில் போட்டுக்கொண்டு. ஹெல்மெட், யூனிபார்ம் அணிந்துகொண்டு இருசக்கர வாகனங்களில் கிளம்புகின்றனர். சுற்றி ஆண்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் இவர்கள் மட்டும் தனித்த அடையாளம்.

ஒருவருக்கு 30-35 பொருட்கள்வரை வழங்கப்படுகின்றன. பெரிய பொருட்களாக இருந்தால், வேனில் இருவர் எடுத்துச் செல்கிறார்கள். அனைத்துப் பொருட்களையும் டெலிவரி செய்துவிட்டு, வீடு திரும்புகின்றனர். மீண்டும் மாலை மூன்று மணிக்கு டெலிவரி ஸ்டேஷன் வந்து, மறுபடியும் பொருட்களைப் பிரித்துக்கொண்டு பறந்துவிடுகின்றனர். ஆறரை மணிக்குள் டெலிவரிகளை பனியை முழுதாக முடித்துவிடும்.

image


“பெண்கள் முன்னேற்றம் குறித்து சில ஆய்வுகளை மேற்கொண்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பெண்கள் டெலிவரி சர்வீசை ஊக்கப்படுத்த திட்டமிட்டோம். ஆனால் யாருமே எங்களை தொடர்புகொள்ளவிள்ளை. திடீரென தமிழகத்தில் முழுக்க முழுக்கப் பெண்களே பணியாற்றும் டெலிவரி ஸ்டேஷனை செய்யத் தயாராக உள்ளேன் என்று ‘ஜமுனா’ குழுவினர் முன்வந்தனர். தற்போது சிறப்பாகச் செய்தும் வருகின்றார்கள். இவர்களின் சேவை திருப்தி தருவதாக வாடிக்கையாளர்களும் கருத்தும் தெரிவித்துவருகின்றனர்,’’

என்கிறார் தென் இந்திய பகுதி அமேசான் டெலிவரி மேலாளர் அஸ்வினி.

‘‘அடிப்படைத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தந்திருக்கிறோம். பாதுகாப்புக்காக அனைவரும் பெப்பர் ஸ்பிரே வைத்திருக்கின்றனர். அத்துடன் பாதுகாப்பான இடங்கள் என உறுதி செய்த பின்னரே டெலிவரி கேர்ள்கலை அனுப்புவோம்,” 

என்கிறார் ஜமுனா ராணி. புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் கூறி விடைப்பெற்றோம்.

கட்டுரையாளர் -வெற்றிடம்

Add to
Shares
125
Comments
Share This
Add to
Shares
125
Comments
Share
Report an issue
Authors

Related Tags