பதிப்புகளில்

கஜா புயல்: டெல்டா பகுதியை மீட்கக் களம் இறங்கிய தன்னார்வளர்கள்!

21st Nov 2018
Add to
Shares
94
Comments
Share This
Add to
Shares
94
Comments
Share

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல், டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்து வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. இதில் சுமார் 1,17,624 வீடுகள், 33,868 மரங்கள் மற்றும் 88,102 மேலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

சென்னை வெள்ளத்தின் போது மக்கள் இறங்கி உதவிக்கரம் நீட்டியது போல பாதிப்பு அடைந்த டெல்டா பகுதிகளை மீட்க தமிழகம் முழுவதும் மக்கள் முயன்று வருகின்றனர். அரசாங்க மீட்புப் பணி ஒரு புறம் இருக்க பல சமூக அமைப்பும் தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புயலால் குறைந்தது 39,938 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது.

அதேப்போல் புயல் கடுமையாக தாக்கிய வேதாரண்யத்தை நோக்கி சென்ற பேருந்தின் இளம் கண்டக்டர் வழி நெடுக சாலையில் கிடக்கும் மின் கம்பிகளை அகற்றி பேருந்தை வழி நடத்தி வேதாரண்யம் சென்று சேர்ந்துள்ளார். மின் கம்பியை ஈரமாக உடைந்துக்கிடக்கும் மரக்கிளையையை வைத்து தூக்கிப்பிடித்து பேருந்தை கடந்துச் செல்ல முயற்சி எடுக்கும் அந்த காணொளி காட்சியும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பட உதவி: முகநூல்

பட உதவி: முகநூல்


இதனையொட்டி சமூக வலைதளத்தில் மீட்புப் பணிகள் குறித்தும் உதவிகள் குறித்தும் தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர் ஒருவர் தெருவில் அறுந்து கிடந்த மின்கம்பம்களை பொதுநலனுடன் அகற்றும் வீடியோ பரவி வருகிறது. 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பாலசுப்பிரமணியம் காலை முதல் மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார். தன் பணி அனுபவம் காரணமாக தன்னார்வத்தோடு அவர் தெருவில் இறங்கி உதவி செய்வது பாராட்டத்தக்கது.
பட உதவி: முகநூல்

பட உதவி: முகநூல்


இதேபோல் புதுக்கோட்டையில், அகச்சிப்பட்டி கிராமம் புயலால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. 400 குடும்பம் வரை வசிக்கும் அக்கிராம மக்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலையில் மருத்துவர் ஒருவர் ஜெனரேடர் மூலம் குடி தண்ணீர் வழங்கி வருகிறார். கஜா புயல் தாக்கிய அடுத்த நாளில் இருந்தே தனது உதவியை தரத் தொடங்கி உள்ளார் இவர்.

திருவாரூர் ஆலங்கொட்டை பகுதில் மீட்புப் பணி ஆரம்பம் ஆக சற்று தாமதம் ஆனதால் அங்கிருந்த இளைஞர்கள் ஒன்று கூடி கோடாரிகள், கயிறுகள் மற்றும் மரம் அறுக்கும் ரம்பம் வைத்து சாலையில் விழுந்திருக்கும் மரங்களை அப்புறப்படுத்தி சாலையில் போக்குவரத்தை சுலபமாக்கி வருகின்றனர்.
பட உதவி: முகநூல்

பட உதவி: முகநூல்


இதோடு சென்னை மற்றும் கேரளா வெள்ளத்தின் போது அதிக பங்கினை வகித்த அன்புடன் தமிழகம் அமைப்பு, The New Face of Society (TNFS) முகநூல் பக்கம், சென்னை டிரெக்கிங் கிளப் போன்ற சமூக அமைப்புகள் சென்னையில் இருந்து பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னயில் இருந்து உணவு, மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்கின்றனர். இதோடு ப்ளாக் ஷீப் மற்றும் பல யூடியுப் சானல்களும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று தங்களது உதவிகளை கொடுத்து வருகின்றனர்.

இதனை அடுத்து பிரபலங்களான நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் ரூ. 50 லட்சம், ரூ. 25 லட்சம், ரூ 10 லட்சம் நன்கொடையாக அளித்துள்ளனர். இதோடு இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் டோரோன்டோவில் வரும் டிசம்பர் 24 அன்று நடக்கவிருக்கும் தனது இசை நிகழ்ச்சியில் இருந்து ஓர் தொகையை நிவாரண நிதிக்கு வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

நிவாரண நிதியோடு பாதிக்கப்பட்டவர்களை மீட்க மக்களை எதிர்பார்த்து இருக்கின்றனர் அம்மக்கள். சுயநலம் இன்றி அரசாங்கம் செய்யட்டும் என ஒதுங்கி நிற்காமல் உதவும் தன்னார்வளர்களுக்கு பாராட்டுக்கள்!

மீட்புப் பணிக்கு உங்கள் உதவியை கொடுக்க இங்கு தொடர்புகொள்ளலாம்:

நாகப்பட்டினம்: மாவட்ட கலெக்டர், அண்ணாய் நகர், நாகப்பட்டினம், தமிழ்நாடு 611001

திருவாரூர்: மாவட்ட கலெக்டர், மாஸ்டர் பிளான்மெண்ட் காம்ப்ளக்ஸ், நாகப்பட்டினம் சாலை, திருவாரூர்

புதுக்கோட்டை: மாவட்ட கலெக்டர், கலையன்பூர், புதுக்கோட்டை.

தஞ்சாவூர்: கோயம்புத்தூர் நாகப்பட்டினம் நெடுஞ்சாலை, புதிய கலெக்டர் அலுவலகம், ஏ.வி.பி அஸ்வகம் நகர்.

கடலூர்: மாவட்ட கலெக்டர், குண்டு சாலை சாலை, கடலூர்

ஆகிய இடங்களில் வந்து மீட்புப் பணியில் ஈடுபடலாம்.

தேவைக்கு திருவாரூர் தாசில்தார் ராஜன் பாபு 9443663922, திருவாரூர் தாசில்தார் சோகநாதன் 9443663164, தஞ்சாவூர் தாசில்தார் சுரேஷ் 9655563329 மற்றும் நாகப்பட்டினம் APO மோகன் 9442180785 தொடர்புக்கொள்ளலாம்.

இதோடு நிவாரண பொருள்களை பெறுவதற்காக தன்னார்வலர்கள் சென்னையில் பல அமைப்புகளை அமைத்துள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் உதவிக்கரத்தை நீட்டுங்கள்.

சென்னையில் நிவாரண பொருட்களை இங்கே கொடுக்கலாம்: 

The New face of society - 9176199769 and 9003024282

Anbudan Tamizhagam - Disaster Preparedness Coalition

CTC - Dr Renuka Ramakrishnan (9444087050) Dr N Banupriya (9600142089) 

Add to
Shares
94
Comments
Share This
Add to
Shares
94
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக