பதிப்புகளில்

சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கான வெள்ள நிவாரணம்- தமிழக அரசு அறிவிப்பு

YS TEAM TAMIL
16th Jan 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் அமைப்புகளுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். கடனை திருப்பி செலுத்தும் காலநீட்டிப்பு, வட்டியில்லாக்கடன் மற்றும் சுயதொழிலில் ஈடுபடும் வேலையில்லாத இளைஞர்களுக்கான விதிகளில் சலுகை ஆகியவை பற்றிய அறிவிப்பை சென்னையில் வெளியிட்டார்.

image


சிறுமற்றும் குறுந்தொழில் செய்வோர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்திடம் பெற்றக் கடனை திருப்பி செலுத்தும் காலமானது, தேவையை பொருத்து இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் வட்டிகட்டுவதற்கு உதவும் வகையிலான கடன் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இயந்திரங்களை சரிசெய்யவும் மாற்றவும் உதவும் வகையிலும், மூலப்பொருள் கொள்முதல் செய்வதற்கும் சரக்கு சேமித்து வைப்பதற்கும் தேவையான பணம் எந்தவிதமான ஆவணமும் இன்றி கடனாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மூலதனக்கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தையும் நீட்டிப்பதாக சென்னையில் அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் கடந்த டிசம்பர் 31, 2015ம் ஆண்டுக்குள் செலுத்த வேண்டிய கடனுக்கு கட்ட வேண்டிய வட்டி மீதான தண்டத்தொகைக்கு, நிறுவனம் மீண்டெழும் வரையோ அல்லது ஆறு மாதங்கள் வரையோ விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்தார். இதில் எது சீக்கிரமோ அது பொருந்தும். “தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் அடிப்படை கட்டுமானத்தை மேம்படுத்துவதற்காக 25கோடி ரூபாய் நான் ஒதுக்கியிருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

மின்மீட்டர்களை மாற்றித்தருவதற்கான கட்டணத்தை செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளித்திருப்பதாக தெரிவித்தார் அவர். மின்மீட்டர் விலையானது உயர் இழுப்பு நுகர்வோருக்கு 26,000 ரூபாய் மற்றும் சிறு இழுப்பு நுகர்வோருக்கு 3,500ரூபாயும் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் மூலமாக அளிக்கப்படும் என தெரிவித்தார். சிறு வியாபாரிகள், நடைபாதையில் பூ, பழங்கள் மற்றும் காய்கறி விற்பவர்களுக்கும், பெட்டிக்கடை வியாபாரிகளுக்கும் கூட்டுறவு வங்கி மூலமாக 5000 ரூபாய் வட்டியில்லாக்கடனாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த பணம் 25 வாரங்கள் திருப்பி செலுத்தப்பட்டபின், வழங்கப்படும் கடனுக்கு 4 சதவீத வட்டி வசூலிக்கப்படும் என்றார் அவர். “கூட்டுரவு வங்கி மூலம் பத்து நாட்கள் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என்றார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிக்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அவர்கள் 5லட்சம் ரூபாய் மதிப்பில் துவங்கும் நிறுவனத்திற்கு 25 சதவீத பணம் மானியமாக அரசாங்கம் சார்பில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார் அவர்.

போட்டோ உதவி : shutterstock

தமிழில் : Swara Vaithee

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக