பதிப்புகளில்

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தரும் மையம்!

YS TEAM TAMIL
20th Jul 2017
Add to
Shares
38
Comments
Share This
Add to
Shares
38
Comments
Share

டெல்லியைச் சேர்ந்த ’Chhanv’ என்னும் அறக்கட்டளை ஆசிடால் பாதிக்கப்பட்டவர்களை பாதுக்காத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தேடி தரவும் உதவுகிறது.

image


அலோக் தீக்‌ஷித் மற்றும் ஆசிஷ் சுக்லா 2013 ஆம் ஆண்டில் ‘Stop Acid Attack’ என்னும் பிரச்சாரத்தை தொடங்கினர். இதன் நோக்கம், மக்களிடையே ஆசிட் அட்டாக்கிற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆலோசனை வழங்குதல் மற்றும் பாதிக்கப்படவர்களுக்கான முறையான சிகிச்சை வழங்கக் கூறி அரசாங்கத்திடம் கேட்டலாகும். 

லக்ஷ்மி அகர்வால் 2006 ஆம் ஆண்டில் ஆசிடால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதன் விளைவாக 2013ல் உச்ச நீதிமன்றம் ஆசிட் விற்பனையை ஒழுங்க படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் ஆசிட் வன்முறையை தனி குற்றமாக அறிதல் போன்ற ஆணையை பிறப்பித்தது.

ஆணை பிறப்பித்த போதிலும் சிறிதளவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது; இன்னும் சில இடங்களில் ஆசிட் விற்பனையில் தான் உள்ளது அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் எபோழுதும் தாமதமே மற்றும் பதிவு செய்யப்படாத பல வழக்குகளும் உள்ளன. Chhanv அறக்கட்டளையில் உள்ள 30 சதவிகித பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தாக்கியவர் மீது எந்த புகாரும் அளிக்கவில்லை. சில வழக்குகளில் தாக்கியவர்கள், முகம் தெரியாத நபர் என்பதால் புகார்கள் அளிக்க முடியவில்லை.

Chhanv அறக்கட்டளையின் குறிக்கோள்

பிரச்சாரத்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பயனும் இல்லாத காரணத்தினால் இக்குழு தாமாகவே ஒரு அறக்கட்டளையை உருவாக்கியது, அதுவே Chhanv அறக்கட்டளை. ஆசிட் அட்டாக்கில் பிழைத்த பலர் இந்த அறக்கட்டளையில் சேர்ந்த வண்ணம் இருந்ததால் Chhanv அடுத்த கட்டத்துக்கு செல்ல முடிந்தது.

Chhanv-இல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சிகிச்சைக்கான நிதி உதவி, ஆலோசனைகள், பராமரிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கான ஆலோசனையை எதிர்பார்க்கலாம். இது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் கல்விக்காக நிதி திரட்டுதல் மற்றும் அவர்களின் கனவுகளையும் நிறைவேற்ற உதவுகிறது. தற்பொது chhanv-இன் குறிக்கோள் ஆடைகள் வடிவமைக்க விரும்பும் பாதிக்கப்பட்டவர்கலுக்கு ஒரு ஆடையகம் அமைக்க உதவுவதே ஆகும்.

பீகாரைச் சேர்ந்த துபா (பாதிக்கப்பட்டவர்) மருத்துவ நுழைவுத் தேர்விற்க்கான NEET தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார். Chhanv, அவரின் மருத்துவ கனவை நனவாக்க உதவி புரிகின்றது.

image


Chhanv-வில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர் ஆனால் இன்னும் Chhanv- இன் உதவி பல பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படுகிறது. NCRB இன் தகவலின்படி 2015-இல் மட்டும் 249 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“இந்தியா மிகப்பெரிய நாடு என்பதால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைவது என்பது சிரமமே. ஊடகம் இக்குற்றங்களை காட்டும்பொழுது நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை அணுகுகின்றோம்.”

பாதிக்கப்பட்டவர்களை ஊக்குவித்தல்

பல பாதிக்கப்பட்டவர்கள் இது தங்களின் விதி என்று எண்ணி விரக்தியடைந்து விடுகின்றனர். 

“அவர்கள் Chhanv-இற்கு வந்தபிறகு பிற பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஊக்கமடைகின்றனர்” என்கிறார் அலோக்.

அலோக்கை பொறுத்தவரை, வேலை கிடைப்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக பெரிய நிகழ்வாக அமைகிறது. சில பெற்றோர்கள் பாதிக்கப்பட்டவர்களை வெளியில் வேலை தேட அனுமதிப்பதில்லை, இதனை கருத்தில் கொண்டு Chhanv 2014-ல் ஆக்ரா’வில் Sheroes cafe-ஐ நிறுவியது. அதைத் தொடர்ந்து உதய்பூர் மற்றும் லக்னோவில் இரண்டு கிளைகளை திறந்துள்ளது. இங்கு இதுவரை 30 பாதிக்கப்பட்டவர்கள் வேலை செய்கின்றனர்.

SHEROES CAFE

SHEROES CAFE


Sheroes மட்டுமல்லாமல் பிற வாய்ப்புகளையும் Chhanv பாதிக்கப்பட்டவர்களுக்காக எதிர்நோக்குகிறது. ஆனால் அவர்களுள் பெரும்பாலானோர்க்கு போதிய கல்வித்தகுதி இல்லாததால் வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது. இதைத்தவிர பாதிக்கப்பட்டவர்களை தனிமையில் இருந்தும், நியாயம் கிடைக்காதவர்களை ஊக்கப்படுதியும் வருகிறது Chhnav.

Chhnav அறக்கட்டளையின் புதிய கட்டிடம் டெல்லியில் முடியும் தருவாயில் உள்ளது, அக்கட்டிடத்தில் இன்னும் பல பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து பராமரிக்க உதவும். அவர்களது தற்போதிய மையம் லக்ஷ்மி நகரில் உள்ள இரண்டு பெட் ரூம் அபார்ட்மென்ட் ஆகும். மத்திய மற்றும் மாநில அரசிடம் தொடர்ந்து புதிய கட்டிடத்துக்கு கேட்டப்போதிலும், அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே Chhanv தாங்களே கட்டிடம் கட்ட முன் வந்தனர்.

ஆசிடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை, ஆனால் பல கிராமங்களில் உள்ள மருத்துவமனையில் அதற்கான போதிய மருத்துவ வசதியில்லை. 23 வயதான பாட்னாவை சேர்ந்த சான்ச்சல் குமாரி படுக்காயம் அடைந்து டெல்லிக்கு சென்று சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்தார். பிகாரில் உள்ள எந்த மருத்துவமனையிலும் 50 சதவிகத்து மேல் உள்ள பாதிப்பை சரி செய்யும் வசதி இல்லை. இதில் பல பேர் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர் .

இதை விட மிகவும் கவலைக்கிடமான நிலைமை 7 வயதான, யூபி-ஐ சேர்ந்த ஜூலிக்கு நேர்ந்தது. ஜூலியின் தந்தை அவரது மனைவியின் மீது ஆசிடை எரிய முயன்றபோது அது ஜூலியை தாக்கியது. அலோக், ஜூலியின் சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகிறார்.

அலோக் டிக்சித்

அலோக் டிக்சித்


“NCRB 2014-யின் தகவலின்படி ஆசிடால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சகவிதம் ஆண்களே,” என்று உலகிற்கு முரண்பாடான புதிய தகவலை தருகிறார் அலோக். 

ஆண்கள், சொத்து பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளால் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆசிட் எரிய முற்படுகின்றனர். பொதுவாகவே அனைவரும் பெண்களுக்கும் குழந்தைகக்ளுக்கும் உதவவே முன் வருகின்றனர். 

ஆனால் அலோக், “உதவியில் ஆண், பெண் என பிரிவினை இருக்கக்கூடாது. பெரும்பாலான முயற்சிகள் பெண் முன்னேற்ற நிறுவனங்களால் எடுக்கப்படுகிறது,” என்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே அதிக கவனம் இருப்பதால், அங்கேயே அதிக ஆதரவும் ஏற்படுகிறது. இதை Chhanv மாற்ற முயற்சிக்கிறது, இந்த அரக்கட்டளையில் 12 பாதிக்கப்பட்ட ஆண்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறே ஆண் பெண் பேதம் இன்றி உதவே Chhanv முயல்கிறது.

Add to
Shares
38
Comments
Share This
Add to
Shares
38
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக