பதிப்புகளில்

சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீது ஜி.எஸ்.டியின் தாக்கம் என்ன?

YS TEAM TAMIL
14th Aug 2018
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

இந்திய பொருளாதாரத்திற்கு 2017 ஜூலை-1 வாழ்நாளில் ஒருமுறை தினமாக அமைந்தது. அன்றைய தினம் தான், சரக்குகள் மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. தனிநபர்கள், வர்த்தகம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மீது இது செலுத்தக்கூடிய தாக்கம் தொடர்பாகவும் பல்வேறு யூகங்கள் வெளியிடப்பட்டன. இதன் பார்வை பெரிதாக இருந்தது. அனைத்து மறைமுக வரிகளை வெளிப்படையாகவும், நியாயமான முறையிலும் வசூலிக்க வழி செய்வது இதன் நோக்கமாக இருந்தது. 

எனினும் இதை நிறைவேறி இருக்கிறதா? ஜி.எஸ்.டி சிறுதொழில் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது செலுத்தும் தாக்கம் என்ன?

ஜி.எஸ்.டிக்கு பிறகு?

படம்.பிக்சாபே

படம்.பிக்சாபே


ஒரு நாடு ஒரு வரிவிதிப்பு எனும் கொள்கையையே ஜி.எஸ்.டி மூலம் மோடி அரசி அமல்படுத்த விரும்பியது. இதற்கு முன்னர் சேவைகள் மற்றும் பொருட்கள் பல்வேறு மாநில அரசுகளால் தனித்தனியே வரி விதிக்கப்பட்டன. உதாரணத்திற்கு உற்பத்தி பொருட்கள் மீது மத்திய அரசு வரி விதித்தது. மாநில அரசுகள் விற்பனை அடிப்படையில் நுழைவு வரி விதித்தன. இந்த பல அடுக்கு வரிவிதிப்பிற்கு காகித பணிகள் அதிகம் தேவைப்பட்டதால், இதிலிருந்து தப்பிக்க ஓட்டைகளை பயன்படுத்திக்கொண்டனர்.

இந்த முறை வரி செலுத்துபவர்களுக்கு மட்டும் அல்ல, வரி அதிகாரிகளுக்கும் கூட சிக்கலாக இருந்தது. மேலும் பல அடுக்கு வரி விதிப்பு சுமை நுகர்வோர் மீதே சுமத்தப்பட்டன. பெரும்பாலும் உற்பத்தியாளர் அல்லது சேவையாளர்களின் வரி ஏய்ப்பு இதற்குக் காரணமாக அமைந்தன.

இந்த விரிவான மற்றும் சிக்கலான மறைமுக வரி விதிப்பு முறையை சீராக்கி எளிமையாக்க்கும் வகையில் ஜி.எஸ்.டி அறிமுகமானது.

சிறுதொழில்கள்

சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இந்திய பொருளாதாரர்த்தின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. நாட்டின் உற்பத்தியில் 45 சதவீதம் மற்றும் வேலைவாய்ப்பில் 40 சதவீதம் பங்கு வகிக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்திய பொருளாதாரம் மீது மிகுந்த தாக்கம் செலுத்தி வருகின்றன. ஜி.எஸ்.டி அமலாக்கம் இருவிதமான கருத்துக்களை கொண்டிருந்தாலும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இது பலன் தருவதாகவே அமைந்துள்ளது.

ஸ்டார்ட் அப் துவக்கம் எளிது

இதற்கு முன்னர் புதிதாக சிறு தொழில் துவங்க வேண்டும் எனில் மாநில அரசின் பல்வேறு சட்டங்களுக்கு உட்நடப்பது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு விதமான வாட் வரி பதிவு இருக்கும். ஜி.எஸ்.டியில் இவை எல்லாம் மையமாக்கப்பட்டுள்ளன. வரிகள் சீராகியுள்ளன. தொழில்முனைவோர் புதிய தொழில் துவங்குவது அல்லது விரிவாக்கத்தை எளிதாக மேற்கொள்ளலாம்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்த பல முனை வரிகளுக்கு பதில், ஒருங்கிணைக்கப்பட்ட வரி அமலுக்கு வந்துள்ளது, புதிய நிறுவனத்தை துவக்கும் செலவை குறைத்துள்ளது. மேலும் தொழில்முனைவோர்கள் வரிகள் பற்றி கவலைப்படாமல் வர்த்தகத்தில் கவனம் செலுத்த வழி செய்துள்ளது.

உள்கட்டமைப்பு செலவு குறைவு

ஜி.எஸ்.டி மாநில எல்லைகளுக்கு இடையே விதிக்கப்பட்ட நுழைவு வரிகளை இல்லாமல் செய்துள்ளது. இதனால் சரக்குகளை கொண்டு செல்லும் செலவு குறைந்துள்ளது. மாநில எல்லைகளில் வரிசையில் காத்திருப்பதும் அவசியமில்லாமல் ஆகியிருக்கிறது. சரக்குகள் வேகமாக கொண்டு செல்லப்படுகின்றன. வர்த்தகங்களின் சேவைகளும் விரைவாகியுள்ளன.

குறைந்த வரிச்சுமை

ஜி.எஸ்.டிக்கு முன், ரு.5 லட்சத்திற்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் விநியோக சங்கிலியில் பலவித வரி விதிப்பிற்கு உள்ளாயின. விற்பனை வரி, பொழுதுபோக்கு வரி, கலால் வரி என பல வரிகள் இருந்தன. ஆனால் இப்போது, ஜி.எஸ்.டி வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது சிறுதொழில்களுக்கு ஆசுவாசம் அளிக்கிறது.

ஒரு சந்தை

முந்தைய வரி விதிப்பு முறையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்திய அளவில் வாடிக்கையாளர்களை சென்றடைய அதிக வாய்ப்புகள் இல்லை. உதாரணத்திற்கு வெண்கல பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர் மேற்கு உத்திர பிரதேசத்தில் மட்டும் செயல்பட வேண்டியிருக்கும். மூலப்பொருள் அல்லது இறுதி பொருளை வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனில், மாநிலங்களுக்கு இடையிலான வரி விதிப்பு அமலுக்கு வரும். இதன் உள்ளீடு வரி வாடிக்கையாளர்களுக்கு சாத்தியம் இல்லை என்பதால், சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் போது செலவு அதிகமாகும். ஜி.எஸ்.டியில் இந்த சிக்கல் இல்லை. சிறு தொழில் நிறுவனங்கள் சந்தையை அணுகுவது எளிதாகி இருக்கிறது.

தானியங்கி அமலாக்கம்

மனித தலையீடு குறைந்திருப்பது ஜி.எஸ்.டியின் மற்றொரு முக்கிய அம்சம். ஆன்லைன் வரி செலுத்தல், பல்வேறு துறைகளுடன் செயல்பட வேண்டிய தேவையை இல்லாமல் செய்துள்ளது. இதற்கு முன் வரி செலுத்த அதிக நேரம் தேவைப்பட்டது செயல்திறனை பாதித்தது.

ஜி.எஸ்.டியின் கீழ் எல்லாம் ஆன்லைனில் கொண்டு வரப்பட்டுள்ளது. பதிவு, பணம் செலுத்துவது, ரீபண்ட், கணக்கு தாக்கல் என எல்லாமே ஆன்லைனில் செய்யலாம். ஆன்லைன் பதிவு மூலம் வர்த்தகர்கள் பதிவு சான்றிதழை உடனடியாக பெறலாம். குறித்த நேரத்தில் பணம் செலுத்தலாம். வெளிப்படைத்தன்மை உள்ளது. வரி செலுத்தும் செலவும் செயல்முறை செலவும் குறைந்துள்ளது. ரீபண்டும் விரைவாக கிடைக்கிறது. உள்ளீடு வரி கணக்கீடு எளிதாகி இருக்கிறது.

இவற்றின் காரணமாக ஜி.எஸ்.டிக்கு பிறகு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிப்பாதையில் இருப்பதாக கூறலாம். வர்த்தக பரிவர்த்தனைகள் பதிவாவது மற்றும் வரி செலுத்துவது அவற்றின் கடன் பெறும் தன்மையை அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் வர்த்தக உரிமையாளர்களுக்கு இது அதிக பலன் தரும். வர்த்தக விரிவாக்கத்திற்கு மூலதனம் தேவை. நல்ல கடன் வரலாறு மூலம் எளிதாக மூலதனம் திரட்டலாம். ஆன்லைன் கடன் பல நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். ஜி.எஸ்.டி நல்ல பலனை தொடர்ந்து அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆங்கில கட்டுரையாளர்: ரோகித் அரோரா, பிஸ்2 கிரெடிட் இணை நிறுவனர் | தமிழில் ; சைபர்சிம்மன்

(பொறுப்பு துறப்பு : இந்த கட்டுரையில் தெரிவிக்கப்படும் பார்வை மற்றும் கருத்துகள் அவருடையவை, யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல)

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags