பதிப்புகளில்

இந்தியர்களை விட அமெரிக்கர்கள் அதிக கொடை வள்ளல்களா? அசிம் பிரேம்ஜி கூறியது என்ன?

YS TEAM TAMIL
21st Dec 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

சமீபத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் தன் சொத்தில் 99 சதவீதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்போவதாக தெரிவித்தார். வாரன் பஃப்பெட், பில் கேட்ஸ் என பலரும் தங்கள் சொத்தில் பெரும்பங்கை தொண்டுகளுக்காக கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவிலும் அசிம் ப்ரேம்ஜி மற்றும் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் இது போல கொடுக்கிறார்கள்.

image


இந்தியர்கள் பழங்காலம் தொட்டே சின்ன சின்ன வழிகளில் தங்களால் முடிந்ததை கொடுத்து உதவியிருக்கிறார்கள். ஆனால் பில்லியன் கணக்காக கொடுப்பதென்பது மிகப்பெரிய விஷயம். அசிம் ப்ரேம்ஜி 1999ம் ஆண்டில் இருந்து "அசிம் ப்ரேம்ஜி ஃபவுண்டேசன்" மூலமாக தொடர்ச்சியாக நிதியளிக்கிறார். தன்னிடம் இருக்கும் 40 சதவீத பங்கை அதாவது 52 ஆயிரம் கோடியை (8.5 பில்லியன் டாலர்) தொண்டுகளுக்காக செலவிட்டிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இது போன்ற செயல்களில் மற்றவர்களும் இறங்க ஊக்குவித்தும் வருகிறார்.

ஏன் இந்திய பணக்காரர்கள் அமெரிக்கர்கள் அளவுக்கு தொண்டுகளுக்கு வருமானத்தை கொடுப்பதில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கிறார். “ஒன்று அவர்களின் குடும்பங்களிலேயே பெரும்பங்கு பணம் பிரித்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டாவது பெரும்பாலான பணக்கார இந்தியர்கள் தங்கள் சம்பாத்தியம் முழுவதும் தங்களுக்கு பிறகு தங்களது குழந்தைகளுக்கே செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள்.”

அண்மையில் ஐஐஎம் பெங்களூரில் நடந்த முதல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பேசிய கிரண் மஜும்தார் ஷா, ஒருவேளை அசிம் ப்ரேம்ஜி பற்றி தான் ஒரு புத்தகம் எழுதினால் ”அனைத்தையும் கொடுங்கள்” என்று அதற்கு பெயரிடுவேன் என தெரிவித்தார்.

கிரண் மஜும்தார் மற்றும் அசிம் ப்ரேம்ஜி அங்கு உரையாடியதை இங்கே கொடுக்கிறோம்.

image


கிரண் : எது உங்களை கொடையளிப்பதை நோக்கி தள்ளியது? சிறுவயதில் நடந்த எதாவது ஒன்று தான் உங்களை தூண்டியதா?

அசிம் ப்ரேம்ஜி : என்னிடம் இருக்கும் அந்த சிறந்த பண்பு என் அம்மாவிடம் இருந்து வந்தது. அவர் ஒரு மருத்துவர். ஆனால் அவர் மருத்துவப்பணியில் ஈடுபட்டதே இல்லை. அவர் குழந்தைகளுக்கான எழும்பியல் மருத்துவமனையை பம்பாயில் துவங்கினார். பெருமூளை வாதம் மற்றும் போலியோவால் வாடும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் துவங்கப்பட்டது இது. அவர் தன் 27ஆம் வயதிலிருந்து 77 வயது வரை அதன் தலைவராக இருந்தார். அந்த மருத்துவமனையை நடத்துவதற்கான பணத்தை அரசாங்கத்திடமிருந்து தான் பெற்றார். அதற்கே தன் வாழ்நாள் முழுவதும் அவர் சிரமப்படவேண்டி இருந்தது. அந்த பணமும் கூட ஒரு போதும் சரியான நேரத்திற்கு கிடைத்ததில்லை.

கிரண் : நீங்கள் எப்பொழுதுமே பண விசயத்தில் கவனமாக இருக்கக்கூடிய ஒருவராகவே இருந்திருக்கிறீர்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களையும், விலைமதிப்புள்ள கார் பயணத்தையும் தவிர்த்தே வந்திருக்கிறீர்கள். குறிப்பாக ஸ்டேட்டஸ் சிம்பல்களை பற்றி கவலைப்படாத ஒருவராகவே இருந்திருக்கிறீர்கள். இந்த புள்ளி தான் உங்களை கொடையாளி என்ற மிகப்பெரிய இடத்தை நோக்கி நகர்த்தியதா?

அசிம் ப்ரேம்ஜி : சரியான ஒன்றை செய்வதற்காகத் தான் நான் கொடுத்தேன். ஏழ்மையாலும், நிதியை சரியாக கையாளாததாலுமே இங்கே பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிரண் : பணத்தையும் அறிவையும் பகிர்வது மிகச்சிறந்த ஒன்றாக சொல்லப்படுகிறது. சமூகத்தில் எப்படி நாம் முதலீடு செய்கிறோம் என்று காட்டுவது இதுவே. எப்படி இந்தத் தகவலை சமூகத்திற்கு கொண்டு சேர்க்கிறீர்கள். மக்களிடம் இதை எப்படி வேரூன்றச் செய்கிறீர்கள்?

அசிம் ப்ரேம்ஜி : நான் மிகத்தாமதமாகவே இதை ஆரம்பித்தேன். இது தான் என்னை வருத்தமுறச்செய்கிறது. 14,15 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் உள்ள அரசுப்பபள்ளிகளில் சிறு சிறு கல்வி முயற்சிகளில் ஈடுபட்டேன். உண்மையில் கடந்த நான்கு ஆண்டுகளில் மிகத்தீவிரமாக இதற்காக பணியாற்றி இருக்கிறோம். ஏனென்றால் அரசுப்பள்ளிகளில் தரமான கல்வியை வழங்க வேண்டியதற்கான மிக வலுவான தேவை இருக்கிறது. உண்மையில் இது மிகச்சிறிய வேலை. மிகத்தாமதமாக துவங்கப்பட்ட ஒன்றும் கூட.

image


கிரண் : நான் உங்களின் மற்றொரு செயல்பாடு பற்றி பேச விரும்புகிறேன். பில்கேட்ஸோடு இணைந்து சேவை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறீர்கள். எனக்கு ஒன்று மிகவும் பிடித்திருந்தது, அப்போது கார்ப்பரேட்டில் இருந்த மற்றவர்களையும் கொடுத்து உதவுதல் என்பதை நோக்கி தள்ளினீர்கள். மற்றவர்களிடம் இதை பற்றி சொல்லவேண்டும் என்று ஏன் உங்களுக்கு தோன்றியது. முக்கியமாக, மக்களின் தனிநபர் நுகர்வு அதிகரித்திருக்கிறது, சுயநலமாக சொத்து சேர்க்கும் ஆசையில் இருக்கிறார்கள் என்றெல்லாம் நீங்கள் ஏன் யோசிக்கிறீர்கள்?

அசிம் ப்ரேம்ஜி : (ஒரு நிமிட மவுனத்திற்கு பிறகு) அதெல்லாம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கூற்று. (மக்கள் சிரிக்கிறார்கள்). மக்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டும் என நான் நினைக்கவில்லை. பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் சமூக பொறுப்புகள் என்னவென்று தெரியும். ஏன் பணக்கார இந்தியர்கள், அமெரிக்கர்கள் அளவுக்கு கொடுப்பதில்லை என்பதற்கான காரணமாக நான் நினைப்பது - குறிப்பாக அமெரிக்கர்கள் இந்த விசயத்தில் முன்னோடியாக இருக்கிறார்கள். ஒன்று இந்தியர்களின் குடும்பங்களிலேயே பெரும் சொத்துக்கள் பிரித்து கொடுக்கப்பட்டுவிடுகின்றன. இரண்டாவது பெரும்பாலான பணக்கார இந்தியர்கள் தங்களின் பெரும்பாலான சொத்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கே செல்ல வேண்டும் என நம்புகிறார்கள். அதுவே அவர்களை தடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் இது அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் மிக தாராளமான பகுதியாக நான் தென்னிந்தியாவை நினைக்கிறேன்.

கிரண் : இன்றைய தலைமுறை மற்றும் நாளைய தலைமுறைகளில் பணம் பண்ண போகிறவர்கள் தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை சேவை செய்வதற்கு ஒதுக்க வேண்டும் என்ற செய்தியை எப்படி சொல்ல விரும்புகிறீர்கள்?

அசிம் ப்ரேம்ஜி : இந்த தலைமுறையில் பணக்காரர்களாக இருப்பவர்கள், ஓரளவு பணக்காரர்கள் தாராளமானவர்களாக இருப்பதாகவே நினைக்கிறேன். அவர்கள் தங்கள் நேரம், உழைப்பு அல்லது பணம் போன்றவற்றை வழங்குகிறார்கள். பழைய தலைமுறை இதில் அக்கறையுள்ள முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர்கள் இதற்காக தொடர்ச்சியாக இயங்க வேண்டி இருக்கிறது. நம்மால் நிச்சயமாக ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த முடியும். உண்மையில் அவர்கள் தங்கள் மனைவியை தயார்படுத்த வேண்டி இருக்கிறது.(பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்). மனைவிகள் சமூகத்தில் அதீத தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு சேவை செய்வதற்கு நிறைய நேரம் இருக்கிறது. கணவர்களின் பெரும்பாலான நேரம் பணம் பண்ணுவதிலேயே இருந்துவிடுகிறது. (பார்வையாளர்களின் மிகப்பெரிய சத்தம் கேட்கிறது)

image


கிரண் : இதுவே மனைவிகள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த சான்றாக இருக்கும். நீங்கள் இப்போது ஐஐஎம்பியின் தலைமை உச்சிமாநாட்டில் இருக்கிறீர்கள். எனவே தேசத்தின் கல்விக்காக திருப்பி செலுத்துதல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இது கொஞ்சம் அபத்தமான கேள்வி தான். இது சமாதானப்படுத்த முடியாத ஒரு விவாதம் கூட. ஆனால் சமூகத்திற்கு திருப்பியளிக்காததற்காக ஒருவர் குற்ற உணர்ச்சியடைய வேண்டுமா?

அசிம் ப்ரேம்ஜி : இல்லை. நான் என் தாயக கல்விக்காக எதையும் செய்யவில்லை. (பார்வையாளர்கள் மத்தியில் சத்தம் எழுகிறது). சமூகத்தின் முன்னுரிமையானது தாயக கல்விக்கு செய்ய வேண்டும் என்பதை தாண்டி நகர வேண்டும் என நினைக்கிறேன். இது ஒரு தனிநபரின் முன்னுரிமை சார்ந்தது. ஆனால் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் எல்லாம் அவர்களின் முந்தைய மாணவர்களின் நிதியை பெற்றவையே.

கிரண் : நிச்சயமாக உங்கள் பள்ளியோ கல்லூரியோ உங்களிடம் உதவி கேட்கும்போது நீங்கள் மறுக்க போவதில்லை.

அசிம் ப்ரேம்ஜி : அவர்கள் எப்போதுமே என்னிடம் கேட்கிறார்கள் தான் (பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்)

கிரண் : எனவே ஏன் நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்கள்

அசிம் ப்ரேம்ஜி : நான் என்னுடைய நிதியை நாட்டை சார்ந்தே முன்னுரிமை படுத்த விரும்புகிறேன். (பார்வையாளர்கள் கைதட்டுகிறார்கள்).

கிரண் : உங்களுக்கு வரும் கைதட்டை நான் விரும்பவில்லை அசிம் ( பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்). ஏனென்றால் இது நாம் நம் தாயக கல்விக்கு திரும்பி கொடுக்கிற ஒன்று பற்றியது என நம்புகிறேன். ஏனென்றால் இன்று நாம் இந்த நிலைக்கு இருப்பதற்கு காரணம் நம் கல்வியகங்கள் தான் என நம்புகிறேன்.

(பார்வையாளர்களின் மிகப்பெரிய கைதட்டுதல்)

அசிம் ப்ரேம்ஜி : உங்களுக்கு மிகப்பெரிய கைதட்டு கிடைத்திருக்கிறது ( பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்.)

கிரண் : அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். என்னுடைய இன்னொரு கேள்வி, உலகம் முழுவதும் இருக்கும் வணிக தலைவர்களை பார்க்கும்போது தனிப்பட்ட ஒருவர் கொடையளிக்கிறார் உதாரணமாக பில்கேட்ஸ், எலன் மஸ்க், வாரன் பஃப்பெட் அல்லது மார்க் ஜுக்கர்பெர்க். இன்னும் சொல்லப்போனால் பெரும் பணம் பண்ணக்கூடிய கார்ப்பரேட் உலகத்தில் இருக்கக்கூடிய வங்கிகள் மற்றும் ஹெட்ஜ் நிதிகள் மூலம் நிறைய சம்பாதிப்பவர்கள், பங்குச்சந்தையில் பணம் பண்ணுபவர்கள், அவர்களெல்லாம் ஏன் கொடுக்கக் கூடாது? ஏனென்றால் அவர்களெல்லாம் கொடுப்பதாக நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள்.. சம்பாதிக்கும் தட்டுகளை சேர்ந்தவர்கள் மற்றும் பணியாளர்கள், அவர்களை எப்படி மாற்றுவீர்கள்?

image


அசிம் பிரேம்ஜி : அவர்கள் கொடுக்கிறார்களா? கொடுக்கவில்லையா என்பது எனக்கு தெரியவில்லை. நான் எந்தவிதமான முரட்டு முடிவுக்கும் வரவிரும்பவில்லை. அவர்கள் கொடுப்பது நமக்கு தெரியாமல் இருக்கும், அதற்கு விளம்பரம் கிடைக்காமல் இருக்கலாம்.

கிரண் : சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் உதவிகளை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட வேண்டும் என நினைக்கிறேன்.

வள்ளல் தன்மை பற்றிய தத்துவத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இதை எப்படி நிறுவனப்படுத்த முடியும்? வணிக பள்ளிகளில் இதை ஒரு பாடமாக நம்மால் கொண்டுவர முடியுமா?

அசிம் பிரேம்ஜி : நிச்சயமாக. அவர்கள் உங்களையே பேராசிரியராக ஆக்கிக்கொள்வார்கள். (பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்) இது போன்ற படிப்புகள் ஒரு தீப்பொறியை உண்டாக்கும்.

(முதல் சுற்று பேச்சு முடிந்ததும் பார்வையாளர்கள் கேள்வி கேட்க வாய்ப்பளிக்கப்பட்டது)

அவர் தன் பணத்தை கொடுக்க முடிவெடுத்தபோது சந்தித்த சவால்கள் பற்றி கேட்கப்பட்டது “நாங்கள் சந்தித்த மிகப்பெரிய சவால் என்பது பிரச்சினையின் நீளம், பிரச்சினையின் நோக்கம், பிரச்சினையின் ஆழம். அங்கே மிகப்பெரிய வெறுப்பை ஏற்படுத்தியது. எனினும் பெரிய நிறுவனத்தில் உங்கள் அலைவரிசைக்கு ஒத்த ஆள் இல்லை என்ற வெறுப்பு இருக்கலாம். நாம் அரசாங்க நிறுவனத்தோடு சேர்ந்து செய்யலாம். தொடர்ந்து செய்யுங்கள். தொடர்ந்து அதை செய்யுங்கள்.

நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்ற சுவாரசியமான கேள்வி கேட்கப்பட்டது. "இரண்டு ஆண்டுகளிலேயே அது என்னை கொன்றுவிடும். உணர்ச்சியற்ற தன்மையை தொடர்ந்து ஊட்டினால் தான் அரசியலில் இருக்க முடியும் என நினைக்கிறேன்” என்றார்.

அந்த உரையாடலின் கடைசி கேள்வி இப்படி இருந்தது.எப்போது கொடுப்பது என்று ஒருவர் எப்படி முடிவு செய்வது?

“கொடையளிப்பதை ஊக்குவிப்பது பற்றி நாங்கள் கடந்த வாரம் ஒரு கூட்டம் நடத்தினோம். குழு உறுப்பினரின் ஒருவரின் வீட்டில் தொடர்ச்சியாக கொடையளிப்பவர்கள். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதிருந்தே அவருக்கு வரும் பரிசுகளில் 25 சதவீதத்தை கொடையாக கொடுத்துவிடுவார்கள் என்று சொன்னார். இப்படி தான் நாம் துவங்க வேண்டும்” என்றார்

ஆங்கிலத்தில் : DIPTI NAIR | தமிழில் : Swara Vaithee

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக