பதிப்புகளில்

ஸ்டார்ட் அப், பிரபல நிறுவனங்களில் சேர TiE நடத்தும் 'ஆட்சேர்ப்பு முகாம்'- கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

23rd May 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

"வணிகத்தை நீங்கள் கட்டமைக்கத்தேவையில்லை, மனிதர்களை கட்டமையுங்கள், பின்பு அவர்களே வணிகத்தை கட்டமைப்பார்கள்..." - ஜிக் ஜிக்லர்

இன்றைய சூழலில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், பிரபலமான நிறுவனங்களும் புதுமுக திறமையாளர்களை தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்திக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பலர், ப்ளேஸ்மென்ட் மூலம் பணியமர்த்தப்படாமல் உள்ளனர். 

இதனை மனதில் கொண்டு, 'டை சென்னை' TiE Chennai "Zero cost Campus Hiring" எனும் இலவச சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு கல்லூரி முடித்துள்ள மாணவர்ளுக்காக இந்த முகாம் நடத்தப்படும் என்று TiE சென்னை அறிவித்துள்ளது. 

image


இதன் முதல் கட்டமாக, கல்லூரிகள் மற்றும் மாணவர்களுக்கு ஒற்றை சாளர முறையில் இலவசமாக ஆன்லைன் டெஸ்ட் நடத்தப்படும். பின்னர் இந்த ப்ளேஸ்மென்டில் முகாமில் பதிவுசெய்துள்ள நிறுவனங்கள், தேர்வு பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுதும் குறிப்பிட்ட மையங்களில் நேர்காணல் நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலுக்குச் செல்வதற்கான பயணக்கட்டணத்தை மட்டும் அந்தந்த கல்லூரிகள் ஏற்கவேண்டும் என்றும் ஆன்லைன் டெஸ்ட் ஜூன் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். 

ஆட்சேர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

தொழில்நுட்பமல்லாத பிரிவு Non-Technical List:

1) Logical Reasoning, 2) Numeric Reasoning, 3) Data Interpretation, 4) Verbal Reasoning, 5) Comprehensive Questions , 6) Psychometric Questions, 7) Emotional Intelligence, 8) Spatial Reasoning

தொழில்நுட்பப் பிரிவு Technical Section List:

1) Java, 2) C Programming, 3) PHP, 4) MySQL, 5) C++, 6) Generic Programming

இந்த முகாமின் மூலம் மாணவர்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், மே 27 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவேண்டும். 

பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags