பதிப்புகளில்

பால் கெடாமல் இருக்க புதிய முறை: சர்வதேச ஆராய்ச்சி போட்டியில் சென்னை மாணவர்கள் வெற்றி!

22nd Nov 2016
Add to
Shares
99
Comments
Share This
Add to
Shares
99
Comments
Share

சென்னையை அடுத்து ஸ்ரீபெரம்புதூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் பயோடெக்னாலஜி துறை மாணவர்கள் குழு, பாஸ்டனில் நடைப்பெற்ற ’சர்வதேச ஜெனிடிக் எஞ்சினியரிங் போட்டி’யில் வெள்ளிப்பதக்கத்தை வென்று நம்மூருக்கு பெருமை சேர்த்துள்ளனர். 12 பேர் அடங்கிய இந்த மாணவர் குழு, அறை வெப்பநிலையில் பாலின் வாழ்நாளை அதிகரிக்கும் வீதம் உருவாக்கியுள்ள புதிய உயிரியல் முறைக்காக இந்த பரிசை வென்றுள்ளனர். 

படம்: SVCE தளம்

படம்: SVCE தளம்


”எந்த ஒரு எந்திரத்திலும் ஜெனிடிக் இஞ்சினியரி ங் முறையை பயன்படுத்தமுடியும். இதில், பால் எவ்வாறு நீண்ட நேரத்திற்கு கெடாமல் பாதுகாப்பாக வைத்திருக்கமுடியும் என்று ஆராய்ச்சி செய்தோம். உயிர் எதிரி பொருட்களுடன் பெப்டைட்ஸ், மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது. இந்த உயிர் எதிரி பொருள், பாலில் உள்ள பாக்டீரியாவை கொண்று, சாதரண வெப்பநிலையிலும் பால் கெடாமல் வைக்க உதவியது,” 

என்று மாணவர்களை இந்த ஆய்வில் வழிக்காட்டிய பேராசிரியர் எம்.சிவானந்தம், தி ஹிந்து பேட்டியில் கூறியுள்ளார். 

உலகெங்கும் 300 மாணவர் குழுக்கள் பாஸ்டனில் கடந்த மாதம் நடைப்பெற்ற போட்டியில் கலந்து கொண்டனர். மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் ஆதரவோடு இந்தியாவில் இருந்து 6 குழுக்கள் சென்றன. ஐஐடி, ஐஐஎஸ்சி உட்பட பிரபல கல்லூரி குழுக்கள் இப்போட்டியில் கலந்து கொண்டன. 

மாணவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த முறையில், பாலை பிரிட்ஜில் வைக்காமலே அதை கெடாமல் வைக்க உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் குளிர்சாதன பெட்டி இல்லாமலே பாலை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்து பயன்படுத்த முடியும்.

 “இந்த தயாரிப்பை மேம்படுத்த கூடுதல் ஆராய்ச்சியும், பணிகளும் செய்யவேண்டி உள்ளது. அப்போதே இது ஒரு முழு தயாரிப்பாக உருபெறும்,” 

என்று பேராசிரியரும் மாணவர்க் குழுவின் மற்றொரு வழிகாட்டியான நளின்காந்த் கோனே கூறினார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த ஆராய்ச்சியை, கல்லூரியின் தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் வழிகாட்டி மையத்தின் உதவியோடு ரூ.6.25 லட்சம் நிதி உதவி பெற்று இந்த தயாரிப்பை வெளியிட முடிவு செய்துள்ளதாக சிவானந்தம் மேலும் கூறினார். 


Add to
Shares
99
Comments
Share This
Add to
Shares
99
Comments
Share
Report an issue
Authors

Related Tags