பதிப்புகளில்

மூன்று மாத இண்டர்ஷிப்புக்கு நாசா சென்ற கேரள கிராமத்துப் பெண்!

YS TEAM TAMIL
4th May 2018
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
“உங்கள் கனவுகள் அல்லது லட்சியங்கள் உயரமானவையாக இருக்கலாம். ஆனால் உங்கள் பாதங்கள் நிலத்தில் பதிந்திருக்கட்டும்,” என்கிறார் தியோடர் ரூஸ்வெல்ட்.

இந்த வார்த்தைகளுக்கு மிகவும் பொருத்தமானவர் ஆஷ்னா சுதாகர். ஒரு விவசாயியின் மகளான 27 வயதான இவர் கோழிக்கோடு பகுதியில் கொடுவேலி என்கிற ஒரு சிறிய கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தார். காட்டார்ட் விண்வெளி மையத்தில் மூன்று மாதம் இண்டர்னாக இருந்தார்.

image


”நாசாவிற்குச் செல்ல நான் திட்டமிடவில்லை. இஸ்ரோ அல்லது சாராபாய் விண்வெளி மையத்தில் இணையவேண்டும் என்பதே என்னுடைய கனவு,” என்று ’டெக்கான் க்ரான்க்கல்’-இடம் ஆஷ்னா தெரிவித்தார். 

மேலும் படிப்பில் அதிக சுட்டி இல்லை என்றார். 

”நாவல்கள், கதைகள், கவிதைகள் ஆகியவற்றைப் படிப்பேன். கணிதத்தில் அதிக ஈடுபாடு இல்லை. அந்த நாட்களில் விண்வெளி இயற்பியல் என்கிற பிரிவு குறித்து நான் அறியவில்லை,” என்றார்.

அவர் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது பூமியின் வளிமண்டலத்திற்கு மேல் இருக்கும் அனைத்தையும் குறித்து ஆராயும் விண்வெளி இயற்பியல் படிப்பு அவரை வெகுவாக ஈர்த்தது. அந்த ஆண்டுதான் இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா கொலம்பிய விண்கலத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தார். ஆஷ்னா அவரைக் குறித்த அனைத்து தகவல்களையும் படித்தார். அவரது புகைப்படத்தை எப்போதும் உடன் வைத்திருந்தார். விரைவிலேயே ஆஷ்னாவின் நண்பர்கள் அவரை ’விண்வெளி பெண்’ என அழைக்கத் துவங்கினர். 

அவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்றழைக்கப்படும் ஏபிஜே அப்துல் கலாம் கோழிக்கோடு வந்திருந்தார். அங்கு அவர் மூன்று மணி நேரம் உரையாற்றினார். பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்து அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆஷ்னா தனது இரண்டாவது முன்னோடியைக் கண்டறிந்தார்.

இயற்பியல் பிரிவில் பட்டப்படிப்பு மேற்கொள்ள முடிவுசெய்து திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பில் சேர்ந்தார். எம்எஸ்சி இண்டர்ன்ஷிப்பிற்காக அனைத்து மாணவர்களும் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கவேண்டியிருந்தது. பெரும்பாலானோர் ஆர்டர் செய்யப்பட்ட ப்ராஜெக்டையே சமர்ப்பித்தனர். ஆனால் ஆஷ்னா தனது கல்லூரி வளாகத்தில் இருந்த நூலகத்தில் மணிக்கணக்கில் நேரம் செலவிட்டு ஆய்வுக்கட்டுரையை தயார்செய்தார். 

இண்டர்ன்ஷிப்பிற்காக VSSC-யில் விண்ணப்பித்தார். ஆனால் எம்எஸ்சி மாணவர்கள் நேரடியாக இணையமுடியாது என்பதால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து முயன்றார். அவரது விடாமுயற்சி பலனளிக்கும் வகையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆராய்ச்சியைத் தேர்ந்தெடுத்தல்

ஆஷ்னா விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் புவி ஈர்ப்பு மற்றும் அயனிமண்டல (ionosphere) இயற்பியல் தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டார். இந்த அனுபவம் ஆராய்ச்சியில் அவருக்கிருந்த விருப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

”என்னுடைய எம்ஃபில் ஆய்வுக்கட்டுரை இண்டர்ன்ஷிப்பிற்காக நான் நூறாண்டு பழமையான கொடைக்கானல் சோலார் இயற்பியல் ஆய்வகத்தில் விண்ணப்பித்தேன்,” என்றார்.

கடுமையான நேர்காணலுக்குப் பிறகு அவருக்கு அனுமதி கிடைத்தது. பின்னர் அவர் நைனிதாலில் உள்ள ஆர்யபட்டா ஆய்வு மையத்தில் இண்டர்ன்ஷிப் மேற்கொண்டார்.

இந்தியா முழுவதும் நடைபெற்ற விண்வெளி சார்ந்த மாநாடுகளில் பங்கேற்றார். மஹாராஷ்டிராவில் நடைபெற்ற 15 நாள் ப்ரோக்ராம் ஒன்றில் பங்கேற்றபோது நாசாவின் SCOSTEP விசிடிங் ஸ்காலர்ஷிப் குறித்து தெரிந்துகொண்டார். இதில் இளம் விஞ்ஞானிகள் மற்றும் பட்டதாரிகளுக்கு சூரிய மண்டல இயற்பியல் ஆய்வகத்தில் பயிற்சி வழங்கப்படும்.

‘Geo-effectiveness of the energetic phenomena of the sun’ என்கிற தலைப்பில் ஆஷ்னா ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு வருடமும் நான்கு நபர்களுக்கு மட்டுமே ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்பதால் அவருக்கு அதிக நம்பிக்கை இல்லை.

சுவாரஸ்யமளிக்கும் விதத்தில் அவரது திருமண நிகழ்வின் போது ’விண்வெணி பெண்’ என அழைக்கப்படும் ஆஷ்னாவிற்கு அவர் காட்டார்ட் விண்வெளி மையத்தில் ஹெலியோபிசிக்ஸ் பிரிவில் தேர்வாகி இருப்பதாக இமெயில் வந்தது. ஃபெலோஷிப்பிற்கான ஆய்வு திட்டத்தை சமர்ப்பிக்க பத்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இது சாத்தியம் இல்லாமல் போயிருக்கும். ஆனால் திருநெல்வேலியில் புலிகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் அதிகாரியாக பணியாற்றும் அவரது கணவர் உமேஷ் அவருக்கு பெரிதும் ஆதரவளித்தார்.

அவரது கடும் உழைப்பும் நல்வாழ்த்துக்களும் அவர் ஏழு லட்ச ரூபாய் ஃபெலோஷிப் வெல்ல உதவியது. இந்தத் தொகை அவரது பயணம், தங்குமிடம் மற்றும் இதர செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டதாகும்.

உயர் லட்சியம்

சிறிய நகரைச் சேர்ந்த பெண்ணான இவர் இறுதியாக நாசாவைச் சென்றடைந்தார். 

“சோலார் ரேடியோ பர்ஸ்ட் (solar radio burst) சார்ந்த பணிகள் எனக்கு ஒதுக்கப்பட்டது. அது காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையிலான ஆய்வு அல்ல. 24X7 மையம் திறந்திருக்கும். நிறுவனம், வானியல் ஆய்வகம் மற்றும் துறைகளை ஆய்வு செய்தேன். பல்வேறு பட்டறைகளில் பங்கேற்றேன். சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வானிலை ஆய்வாளர்களைத் தொடர்பு கொண்டேன். அது ஒரு உந்துதலளிக்கும் மறக்கமுடியாத வாய்ப்பாக அமைந்தது,” என்றார் ஆஷ்னா.

ஆஷ்னா மற்றும் உமேஷிற்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணமோ தாய்மை அடைந்ததோ அவருக்கு மேலும் உந்துதலளிப்பவையாகவே இருந்தது. அவரது கனவிற்கு தடையாக இருக்கவில்லை என்று ஆஷ்னா குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு குழந்தையும் தங்கள் மீதும் தங்களது அதீத ஆர்வத்தின் சக்தி மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்கிறார் இந்த ஆராய்ச்சி மாணவி. 

”குழந்தைகளின் பெற்றோர் ஏழையாக இருக்கலாம். பள்ளியில் மலையாள வழியில் கல்வி கற்றிருக்கலாம். புத்திசாலியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களது ஆர்வம் தீவிரமாக இருப்பின் அவர்களால் நிச்சயம் சாதிக்கமுடியும்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக