பதிப்புகளில்

’மதிப்புகள், மதிப்பு மற்றும் மதிப்பீடு'- இந்திய சில்லறை வணிகர்கள் சங்கம் நடத்திய சென்னை மாநாடு!

ஏழாவது சிறப்பு மாநாட்டில் தமிழகத்துடன் ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா மற்றும் கேரளாவை சார்ந்த சில்லறை வணிகர்கள் பங்கேற்பு.

2nd Dec 2017
Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share

சில்லறை வணிகர்களின் தலைமை அமைப்பான இந்திய வணிகர்கள் சங்கம் (Retailers Association of India -RAI), தனது ஏழாவது, தி சென்னை ரீடைல் சம்மிட் 2017 (The Chennai Retail Summit 2017) எனும் தென்னிந்திய வணிக மாநாட்டினை நடத்தியது. 

இப்பகுதியில் சில்லறை வணிகத்தில் சிறந்து விளங்கும் நல்லி சில்க்ஸ், லூலூ மால், விவேக்ஸ் மற்றும் நீல்கிரிஸ் போன்ற மேலும் பல முன்னணி நிறுவனங்கள் தேசிய அளவில் பெரும் முத்திரை பதித்துள்ளது. தங்களின் உறுதியான கோட்பாடுகளின் அடிப்படையில் வலுவான வணிகத்தினை, மாறிவரும் காலத்திற்கேற்ப தங்கள் வணிகத்தை நிர்வகித்து வருகின்றனர். வணிக வளர்ச்சியில் உறுதியான கோட்பாடுகளின் முக்கிய பங்களிப்பினை கண்டுணர்வும் வகையில், 'மதிப்புகள், மதிப்பு மற்றும் மதிப்பீடு' என்கின்ற அடிப்படை கருத்தினை கொண்டதாக சிஆர்எஸ் 2017 (CRS 2017) அமைந்துள்ளது.

image


இம்மாநாட்டில் பேசிய இந்திய வணிகர்கள் சங்க தலைமை நிர்வாக அதிகாரி குமார் ராஜகோபாலன்,

"தென்னிந்தியா முழுவதும் நவீன புதுப்பாணியில் உறுதியான கோட்பாடுகளுடன் வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கும் வணிகர்கள் உள்ளனர். இதில் பெருபாலானோர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்து வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் அவர்களின் வாடிக்கையாளர்கள் மையப்படுத்திய கோட்பாடுகளே ஆகும்,” என்றார்.

மேலும் தி சென்னை ரீடைல் சப்மிட், கோட்பாடுகளுடன் திகழுக்கூடிய சில்லறை வணிக சூழலை ஏற்படுத்துவதற்கான பல்வேறு கூறுகளை ஆய்வு செய்யும் நோக்கத்தோடு நடைபெற்றது. இது மேம்பட்ட மதிப்பீட்டுக்கு வழிவகுக்கும். சில்லறை வணிக சந்தையின் வளர்ச்சிக்கு அதிக அளவில் முதலீடு தேவைப்படும் இக்கால கட்டத்தில் இது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு சந்தை முறையினை ஏற்படுத்திய ஜிஎஸ்டி யினால் வெளிநாட்டிலிருந்து மட்டும் அல்லாமல் இந்திய அளவில் போட்டியினை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சூழலில், மதிப்புக்கள் மட்டுமே சில்லறை வணிகர்களுக்கு மதிப்பினை வழங்கமுடியும். மேலும் சந்தையில் நிலவும் போட்டிகளில் முதன்மையாக திகழ்வதுடன் தேவையான மதிப்பீடும் வழங்கும், எனக் கூறினார்.

இந்த ஆண்டு மாநாட்டிற்கான முன்னிலை பங்களிப்பாளர்கள், இந்தியாவில் மிகப் பெரிய நிறுவனம் சார்ந்த வாழ்க்கை-முறை வணிக-வளாகங்களில் மேம்பாட்டாளர்கள் மற்றும் செயல்படுத்துபவர்களுமான வெர்ச்சுவஸ் ரீடைல் சவுத் ஏசியா பி. லிட் (Virtuous Retail South Asia Pvt. Ltd) ஆகும். இந்நிறுவனத்தின் முக்கிய சில்லறை வர்த்தக மையமாக, விஆர் சென்னை (VR Chennai) யினை 2018 ஆம் ஆண்டு துவக்க உள்ளார்கள். வெர்ச்சுவஸ் ரீடைல் சவுத் ஏசியா வின் நிர்வாக இயக்குனர் ரோஹித் ஜார்ஜ் கூறுகையில், 

"வெர்ச்சுவஸ் ரீடைல், உலகளாவிய நுண்திறன் மற்றும் உள்ளூர் அறிவுதிறன் கொண்டு, உயர் செயல்திறன் கொண்ட வணிகச் சூழலை வலுவான நகர்ப்புற இணைப்புடன் உருவாக்க முனைந்து வருகிறது. நாங்கள் விஆர் சென்னையை உயர்தர வாழ்க்கை-முறை இடமாக வடிவமைப்பதுடன் மக்களுக்கு வெறும் பொருட்கள் வாங்கும் இடமாகவும், பொழுது போக்கும் இடமாக மட்டும் அமையாமல் அவர்களின் கொண்டாட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்க விழைகிறோம்,” என்றார்.

விஆர் சென்னை, ஒரு சமூக சேருமிடமாக திகழ்கிறது. இதில் உலக சில்லறை வணிகர்கள் மற்றும் அதிகம் ஈர்க்கப்படும் பொருட்களை கொண்டு தனித்துவம் வாய்ந்த சிறப்பு கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். நகரத்தில் உள்ள பல்வேறு சில்லறை வணிக நிறுவனங்களை இங்கு வர எதிர்நோக்குகிறோம். இதன் மூலம் விஆர் சென்னை, ஒரு பொருளாதார, சமூக, பண்பாட்டு அடையாள மையமாக திகழும். ராய் (RAI) யுடன் இணைந்து எங்கள் உலக தரம் வாய்ந்த வணிக வளாகம் குறித்து உரையாற்றுவதில் வெர்ச்சுஸ் ரீடைல் பெருமகிழ்ச்சி அடைகிறது,” என்றார் மேலும்.

image


கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த மாநாடுகளில், டாக்டர் நல்லி குப்புஸ்வாமி செட்டி, நிறுவனர், நல்லி சில்க் சாரீஸ் போன்ற முக்கிய பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றியுள்ளனர். இந்த ஆண்டிற்கான சிறப்புரையினை டாக்டர் ஏ வேலுமணி, நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர், தைரோகேர் (Thyrocare) அவர்கள் சிறப்புரை வழங்கினார். “வலுவான மதிப்புகள் கொண்டும் வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனத்திற்கு என்றென்றும், வலுவான மதிப்பீடு பெற்றிருக்கும். இதுவே சென்னை சில்லறை வணிக மாநாட்டின் அறைகூவலாகும்.”

”எனது தொழில், மக்கள் நலன் தொடர்புடைய தொழிலாகும். இரத்தத்தில் உள்ள உயிர்வேதி அளவுகளை துல்லியமாக வழங்குவது வாடிக்கையாளர்களிடம் பெரும் நன் மதிப்பாகும். இதை செய்ய, எனது பணியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒருங்கிணைக்கும் மதிப்புக்கள் மீது கவனம் செலுத்தினேன். இதன் மூலமாக, எனது நிறுவனத்திற்கு நல்ல மதிப்பீடு கிடைத்து. மேலும், முதலீட்டாளர்களை மகிழ்ச்சி பெறச் செய்தது,” என்றார்.

குறிப்பாக, சிஆர்எஸ், சில்லறை வணிகர்களுக்கு தொடர்புடைய தலைப்புகளில் உள்ள ஆழ் கருத்துக்களுக்காக அறியப்படுகிறது. சிஆர்எஸ் 2017 ல் நடைபெரும் கலந்துரையாடலில் இடம் பெற்ற முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு :

· மதிப்புகள், மதிப்பு, மதிப்பீடு

· சில்லறை வணிக வளர்ச்சிக்கு தனியார் பங்குகள்.

· சில்லறை வணிகத்தில் பெண்கள்: அதிகாரமளித்தல், ஊக்குவித்தல், நம்புதல்

· மனிதவள மாற்று யோசனை : பணிசேர்ப்பு, தக்கவைத்தல் மற்றும் ஈடுபாடு, இவற்றில் புதிய அணுகுமுறை

· மாறிவரும் காலத்திற்கு ஏற்ப - குடும்பம் நிர்வகிக்கும் தொழில்களுக்கான சிறப்பு அமர்வு கூட்டம்.

இந்திய சில்லறை வணிகர்கள் சங்கம் பற்றி :

இந்திய சில்லறை வணிகர்கள் சங்கம் என்பது இந்திய வணிகர்களுக்கான ஒருங்கிணைந்த குரல் ஆகும். தங்களுடன் இணைத்தவர்களை கொண்டு இந்தியாவில் நவீன சில்லறை வணிகத்தை வளர்ச்சி பெரும் வகையில் சரியான சூழலை உருவாக்க பாடுபடும் அமைப்பாக திகழ்கிறது. இந்தியாவில் சில்லறை வணிகத்தை பாதுகாப்பதுடன் அரசாங்கம் சார்ந்த அனைத்து மட்டத்திலும் இணைந்து வேலைவாய்ப்பு வளர்ச்சி மற்றும் பணித்துறை வாய்ப்புகள் ஏற்படுத்துதல், முதலீடுகளை ஊக்கப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை மற்றும் தொழில் போட்டிகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக