பதிப்புகளில்

எஸ்டிடி பூத் வைத்து தொழில் தொடங்கிய அருண் கரத், இன்று ரூ.140 கோடி மதிப்புள்ள ட்ராவல்ஸ் நிறுவனத்தை நிறுவியது எப்படி?

YS TEAM TAMIL
12th Oct 2016
Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share

49 வயது ஆகும் அருண் கரத் ஒரு காலத்தில் புனேவில் ஒரு சிறிய இடத்தில் வாழ்ந்து எஸ்டிடி பூத் ஒன்றை நடத்தி வந்தவர். ஆனால் இன்று அவர் வாழ்வதோ நகரத்தின் மிக பணக்காரப் பகுதிகளில் ஒன்றாகும். அங்கே வாழ்ந்து கொண்டு வெற்றிகரமான ட்ராவல்ஸ் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் அருண். ’விங்க்ஸ் ட்ராவல்ஸ்’ எனும் அவரது நிறுவனம்; வாடகைக்கு கார், ரேடியோ கேப் மற்றும் போக்குவரத்து ஊழியர் மேலாண்மை ஆகிய சேவைகளை அளிக்கும் நிறுவனம் ஆகும். இதில் சுமார் 600 ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். ஆண்டு விற்றுமுதலாக 140 கோடி ரூபாய் ஈட்டுகிறது இவரது நிறுவனம்.

ஆரம்பகாலத்தில் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்த அருணுக்கு பாடப்புத்தகங்களை கண்டாலே அலர்ஜியாம். ஆனால் அவருடைய சகோகதரர் ஒரு டாக்டர். பத்தாம் வகுப்பு முடித்துள்ள அருண், தனது மாமாவின் சிறிய காலணி கடையில் தன் நேரத்தை செலவிட்டு வந்தார். அவரைக் கண்டு தானும் சுய தொழில் செய்ய முடிவு எடுத்து, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் டிப்ளமா படிப்பை முடித்தார் அருண்.

image


சில வருடங்கள் ஆங்காங்கே பணியாற்றிவிட்டு, அருண் தன் சொந்த தொழிலை தொடங்க முடிவெடுத்து, எஸ்டிடி பூத் ஒன்றை வைத்தார். மெல்ல அதில் இருந்து தனியார் பஸ் டிக்கெட் ஏஜெண்ட்டாக மாறினார். 1993-94 இல் கார் வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றை நிறுவி சொந்தமாக கார்களை வாங்கினார்.

விங்க்ஸ் ட்ராவல்ஸ் என்ற பெயரில் இன்று இந்தியாவில் 9 நகரங்களில் இவரது நிறுவனம் இயங்கி வருகிறது. மும்பை, புனே, குர்காவ்ன், சென்னை, ஹைதராபாத், பெங்களுரு, சண்டிகர், அகமதாபாத் மற்றும் பரோடா ஆகிய இடங்களில் இவர்களது சேவை உள்ளது. அண்மையில் அருண் தனது நிறுவன சேவையை தாய்லாந்து வரை விரிவு செய்துள்ளார்.

“எங்கள் நிறுவனத்தில் தற்போது 475 கார்கள் இயங்குகிறது. மாலிக் சலக் என்னும் திட்டத்தின் கீழ் 800 கேப்களும், காண்ட்ராக்ட் அடிப்படையில் 5500 கேப்களும் இயங்கிவருகிறது,” என்று அருண் வீக்எண்ட்லீடர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அருணின் வெற்றிக்கு முக்கியக் காரணமே அவர் எடுக்கும் புதுமை முயற்சிகள் மட்டும் திட்டங்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய திட்டமாக, மும்பையை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் எல்ஜிபிடி என்று அழைக்கப்படும் குழு உறுப்பினர்கள் சுமார் 300 பேருக்கு ஓட்டுனர் பயிற்சி அளித்து தனது நிறுவனத்தில் பணியமர்த்தி கொண்டுள்ளார் அருண். ஹம்சபர் என்ற ட்ரஸ்டுடன் இணைந்து இந்த முயற்சியை அவர் மேற்கொண்டு சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட இந்த உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளார்.

அதேபோல் பெங்களுரு நகரில், எஸ்ஓஎஸ் சேவை உள்ள கார்களை அறிமுகம் செய்துள்ளார். இதில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆபத்தோ, பிரச்சனையோ ஏற்பட்டு கத்தினால் உடனடியாக அந்த எச்சரிக்கை மணி இயங்கத்தொடங்கும்.

“பயணி எவரேனும் பிரச்சனையில் உள்ளார் என்று எங்களுக்கு தெரிய வந்தால், உடனடியாக அந்த இடத்துக்கு வேறு ஒரு கார் உதவிக்கு அனுப்பி வைக்கப்படும்,” 

என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் கூறியுள்ளார் அருண்.

கட்டுரை: Think Change India

Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக