பதிப்புகளில்

புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் - இந்திய ரிசர்வ் வங்கி

25th Jan 2017
Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற செய்தி மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. இது தவறான செய்தி. புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

image


இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களைப் புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் நீண்ட காலத்திற்குப் புழக்கத்திலிருக்கும். ஆகவே, ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் புழக்கத்திலிருக்கும். இந்த வகையில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டன.

2010 ஜூலை 15ந்தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் அந்த குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டன. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 10 ரூயாய் நாணயங்களிலிருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகும் மற்றும் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றவை.

எனவே பொதுமக்கள் இதுகுறித்து வரும் வதந்திகளை புறக்கணித்து 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். இவை சட்டப்படி செல்லுபடியாகும் என இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் உறுதியளிக்கிறது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக