பதிப்புகளில்

இனி நடக்கவே முடியாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட அபர்ணா, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த எழுச்சிக் கதை!

24th Jul 2017
Add to
Shares
371
Comments
Share This
Add to
Shares
371
Comments
Share

நான்கு வருடங்களுக்கு முன்னால் அபர்ணா பிரபுதேசாயிடம், எந்தவித ஆதரவுமின்றி அவரால் நடக்கமுடியாது என்றனர் மருத்துவர்கள். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 47 வயதான இவர் கடந்த மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

image


பொதுவாக பலருக்கு ஒரு மோசமான சூழலிலிருந்து தப்பிக்கும்போது அதைவிட மோசமான மற்றொரு சூழலுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படும். ஆனால் அபர்ணா பிரபுதேசாய்க்கு வேறு விதமாக நடந்தது. இனிமேல் உதவியில்லாமல் அவர் நடக்கமுடியாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதே கனவாக இருந்தது.

”சக்கரநாற்காலியில் இரண்டு மாதங்களைக் கழித்த பிறகு எனக்கு இரண்டு வாய்ப்புகளே இருந்தது. அதே நிலையில் தொடர்ந்து காலத்தைக் கழிப்பது அல்லது ஏதாவது புதிய செயலில் ஈடுபடுவது.” என்றார் அபர்ணா.

வீட்டில் கீழே விழுந்துவிட்டார். தொடர்ந்து பல பரிசோதனைகள் செய்யப்பட்டது. சற்றும் எதிர்பார்க்காத பிரச்சனை கண்டறியப்பட்டது. விவரிக்க இயலாத நிலையில் அவர் இருப்பதை மருத்துவர்களும் சிறப்பு மருத்துவர்களும் உணர்ந்தனர்.

அபர்ணா எந்தவித மருந்துகளையும் அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ள விரும்பவில்லை. அவரது சகோதரர் ஒரு மருத்துவர். அவரிடம் ஆலோசனை கேட்டார் அபர்ணா. தசைகளை வலுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார். இதனால் எலும்புகளுக்கு ஏற்படும் அழுத்தம் குறைந்து வலியும் குறையும் என்றார். அபர்ணா மெல்ல மெல்ல ஓடத் தொடங்கினார். முதல் மூன்று கிலோமீட்டர் ஓடியதும் இப்படிப்பட்ட பாதையைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று தீர்மானித்தார். 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவரது வாழ்க்கையில் இரண்டாவது முறை மலையேற்றமாக எவரெஸ்ட் அடிவாரத்தில் போடப்பட்டிருந்த முகாமிற்குச் சென்றார்.

image


மலையின் அழகைக் கண்டு வியந்தார். திரும்பச் சென்று அடுத்த முறை சிகரத்தின் உச்சிக்குச் செல்ல முடிவெடுத்தார். சிகரத்தின் உச்சிக்கு ஏறும் கனவிலேயே அடுத்த நான்காண்டுகள் கழிந்தன. மே மாதம் 22-ம் தேதி அவரது கனவு நனவானது.

சிகரத்தின் உச்சியை நோக்கிப் பயணம்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான நிதிக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தார். அந்த சமயத்தில் போதிவிருக்‌ஷ் (Bodhivriksh) என்கிற அவரது நிறுவனத்திற்கு தேசிய ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். நிதியை சேகரிக்கத் துவங்கினார். அப்போது சிகரம் குறித்து அவர் அதிகம் அறிந்திருக்கவில்லை. அவரது நண்பர் மூலமாக அவர் இணைந்திருந்த ஓட்டப்பயிற்சி க்ளப்பில் இருந்த ஒரு நபரின் அறிமுகம் அபர்ணாவிற்குக் கிடைத்தது. அவர் தனது மலையேற்ற அனுபவம் குறித்து அபர்ணாவிடம் பகிர்ந்துகொண்டார். தான் மலையேற்றத்தில் ஏற்கெனவே ஈடுபட்டிருப்பதாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்புவதாகவும் அவரிடம் தெரிவித்தார் அபர்ணா. எவரெஸ்ட் சிகரம் குறித்தும் எந்தப்புறத்தில் இருந்து ஏறலாம் என்றும் ஆய்வு செய்யுமாறு அவர் அபர்ணாவிடம் அறிவுறுத்தினார்.

வடக்குப்புறத்தில் Changtse glacier-ன் நீட்டிப்புப் பகுதி இருந்தது. இதனருகிலுள்ள பகுதியிலேயே பல வருடங்கள் பணிபுரிந்துள்ளார் அபர்ணாவின் அப்பா. அவரது சிறு வயது நாட்களை ஞாபகப்படுத்தும் விதத்தில் அமைந்ததாலும் அவரது அப்பா ஐந்தாண்டுகள் அதே பகுதியில் பணிபுரிந்ததாலும் வடக்குப்புறத்தைத் தேர்ந்தெடுத்தார். அடிப்படை மற்றும் மேம்பட்ட மலையேற்றங்களைத் துவங்கினார். அதன் பிறகு மிகப்பெரிய பணிக்குத் தயாராகத் துவங்கினார்.

வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே

image


47 வயதான அபர்ணாவிற்கு அவரது வயதோ அல்லது பாலினமோ ஒரு தடையாக இருக்கவில்லை. 

“மலையேற்றத்தில் ஈடுபடும்போது வயதானவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அதற்கென பிரத்யேகமாக அமைதியான மற்றும் முதிர்ந்த மனநிலை அவசியம். பல நாட்கள் எதுவும் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்கவேண்டும். சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது. இதனால் இணையம் இல்லை. இணைப்பும் இல்லை.” என்கிறார் அவர்.

வயதானவர்களைக் காட்டிலும் இளம் வயதினரே பலவற்றைப் பொறுத்துக்கொண்டு சகிப்புத்தன்மையுடன் நீடித்து இருக்கமுடியும். என்றாலும் இவர் மேற்கொண்ட முயற்சிக்குத் தேவையான குறிப்பிட்ட மனநிலை இவருக்கு உருவானதில் மகிழ்ச்சியடைகிறார் அபர்ணா.

மன வலிமை மற்றும் உறுதி

எவரெஸ்ட் மலையேற்றத்திற்கு உடலளவிலான சவால்களுடன் அதிகப்படியான மன வலிமையும் உறுதியும் அவசியம். குறிப்பாக அடுத்தவரின் கடினமான அனுபவத்தை அருகிலிருந்து பார்க்கும்போது அதிக வலிமையும் உறுதியும் தேவைப்படும். அத்தகைய ஒரு சாதனையை நிறைவேற்றிய பிறகு கீழே இறங்கும்போதும் மன அழுத்தம் நிறைந்த பயணமாகவே இருக்கும். 

”இருட்டில் நடந்து கொண்டிருப்பீர்கள். மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும்போது முழு பள்ளத்தாக்கையும் உங்களுக்குக் கீழே பார்க்கலாம். அந்தச் சூழல் உங்களுக்குக் கவலையளிப்பதாக இருக்கக்கூடும்.”

சில சமயம் சோர்வு ஏற்பட்டு தனது முயற்சியை கைவிடலாம் என்றும் எண்ணியுள்ளார். அப்போது அபர்ணா, “நான் இதை கட்டாயம் மேற்கொள்ளவேண்டுமா? ஏற்கெனவே நான் 8,400 மீட்டரில் இருக்கிறேன். மேலே ஏறிச் செல்லவேண்டுமா?” என்று எண்ணியுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை அடையும் அந்த வெற்றித் தருணத்தை அனுபவிக்க நான்காண்டுகள் மேற்கொண்ட கடும் உழைப்பை நினைவுகூர்ந்தார். உடனே உற்சாகமாக முயற்சியைத் தொடர்ந்தார்.

வீடு திரும்பினார்

அபர்ணா தனது கனவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில் மற்றவருக்கு எப்படிப்பட்ட ஊக்கத்தை அளித்தார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

image


அவர் அதுவரை சந்தித்திராத பலர் அவரை சந்தித்தார்கள். அவருக்கு எழுதினார்கள். ’பூனே ரன்னிங்’ எனப் பெயரிடப்பட்ட ஒரு அழகான சமூகம் எனக்குக் கிடைத்தது. அவர்களுடன்தான் என்னுடைய ஓட்டப் பயணம் துவங்கியது.” அபர்ணா நேர்மறை எண்ணத்துடன் இருக்கவும் தன்னை மெருகேற்றிக்கொள்ளவும் இவர்கள் பெரிதும் உதவினர். அபர்ணாவின் பெற்றோர்களும் அவருக்கு ஆதரவளித்தனர். 

“நான் எதில் ஈடுபடுகிறேன் என்பது என்னுடைய அப்பாவிற்கு நன்றாகவே தெரியும். அவர் பனிப்பாறை சரிவுகளில் சிக்கியிருக்கிறார். அதன் அருகிலேயே இருந்துள்ளார். இருந்தும் அவர் எனது முயற்சியை தடுக்கவில்லை.” 

அவர்களது ஆதரவு அபர்ணாவிற்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமளித்தது.

பயணத்தின் மூலம் கிடைத்த படிப்பினை

இந்த ஒற்றை நோக்கத்திற்காக அனைத்தையும் கைவிட்டார் அபர்ணா. அவரது முயற்சி மட்டுமே அவர் வசம் இருந்தது. நான்காண்டுகள் பயிற்சியில் ஈடுபட்டபோது தினசரி கடுமையாக உழைத்தார். சில சமயம் அதிகாலை இரண்டு மணிக்குக் கண்விழிப்பார். இதை நிறைவேற்றமுடியும் என்கிற நம்பிக்கை அபர்ணாவிடம் இருந்தது. ஆனால் நீடித்திருப்பதற்கான திறனை அடைய கடுமையாக உழைக்கவேண்டும் என்றும் நம்பினார். முழு ஈடுபாடு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றுடன் தன்னம்பிக்கையும் இணைந்ததால் மட்டுமே அவரால் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்ட முடிந்தது.

பணிவு, நன்றியுணர்வு ஆகியவற்றை புதுமையான விதத்தில் உணர்ந்துகொள்ள இந்தப் பயணம் கற்றுத் தந்துள்ளது. 

”மலையில் நாம் எவ்வளவு சிறியவர்களாக உணர்கிறோம் என்பதைப் பார்க்க அற்புதமாக இருந்தது. நான் அங்கே செல்வதற்கு சிகரம் என்னைத் தேர்ந்தெடுத்தது. நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை மனிதர்களாக நாம் உணர்வோம்.”

ஆங்கில கட்டுரையாளர் : ராகினி ஸ்ரீகிருஷ்ணா

Add to
Shares
371
Comments
Share This
Add to
Shares
371
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக