பதிப்புகளில்

தேசக்கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முயலும் 'பிரகார் பார்தியா'

17th Feb 2016
Add to
Shares
41
Comments
Share This
Add to
Shares
41
Comments
Share

பிரகார் பார்தியா கான்பூரில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். இவர் பிறந்த உடனேயே இவரது குடும்பம் கான்பூருக்கு குடிபெயர்ந்தது. அங்கிருக்கும் மிகப்பெரிய பள்ளியில் இவரை படிக்க வைத்தார்கள். அந்த பள்ளியை ஒட்டி ஒரு சேரி இருக்கும். தினமும் பள்ளிக்கு செல்லும்போது, அந்த சேரியை நோட்டம் விட்டபடியே தான் செல்வார். அங்கிருக்கும் குழந்தைகள் ஒரு போதும் பள்ளிக்குச் செல்வதில்லை. அது ஏன்? என அடிக்கடி யோசிப்பார்.

image


ஒவ்வொரு முழு ஆண்டு விடுமுறைக்கும் தன் பெற்றோரோடு, அவர்களின் சொந்த கிராமத்திற்கு செல்வார். அங்கு மின்சாரம் இருக்காது, எந்த வித அடிப்படை வசதியும் இருக்காது. நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடையேயான இந்த வித்தியாசம் பிரகார் பார்தியாவை உலுக்கி எடுத்தது. இப்போது பார்தியாவுக்கு 30 வயது ஆகிறது. எனினும் தன் பழைய நினைவுகளை கச்சிதமாக அசைபோடுகிறார். இவர் காசியாபாத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பயின்றவர்.

அங்கே 2500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தார்கள். அதில் 25 பேருக்குக் கூட ஏன் பொறியியல் படிக்கிறோம் என தெரியாது. நீங்கள் நான்கு ஆண்டுகள் எலக்ட்ரானிக் இஞ்சினியரிங் படிக்கிறீர்கள். ஒரு நாள் ஒரு ஐடி கம்பெனி உங்களை வேலைக்கு எடுத்துக்கொள்கிறது. பிறகு அங்கே ஜாவா கோடிங் எழுதுகிறீர்கள் எனில் இது அபத்தம் இல்லையா?. 

இன்னொரு விஷயம் கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையேயான இடைவெளி. நம்மிடம் மிகப்பெரிய இளைஞர் பட்டாளம் இருக்கிறது. அவர்களில் நிறைய பேர் உண்மையான இந்தியாவை விட்டு தள்ளியே இருக்கிறார்கள். அது ஒரு நாளைக்கு அவர்களுக்கு தெரியவரும்போது, அதை மாற்ற எதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள்.

இவர் 2009 -ம் ஆண்டு ‘Teach for India' என்ற அமைப்பில் இணைந்து பணியாற்றினார். "டீச் ஃபார் இந்தியாவில் இணைந்ததே, உண்மையான இந்தியாவின் முகத்தை தெரிந்துகொள்ளத்தான். அந்த மக்களோடு இணைய வேண்டும். அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக வேண்டும். இளைஞர்களையும் அவர்களையும் இணைக்கும் புள்ளியாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அந்த இளைஞர்கள் இவர்களின் பிரச்சினை எல்லாவற்றையும் தீர்ப்பார்கள்” என்றார். டி.எஃப்.ஐயில் இருக்கும் இளைஞர்களோடு பணியாற்றியது ப்ரகாருக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது.

image


பள்ளிகளில் பாடம் எடுத்தது நிறைய கற்றுக்கொடுத்ததாக ப்ரகார் தெரிவிக்கிறார்.

ஆசிரியராக இருந்தது வித்தியாசமான அனுபவம். அது கஷ்டமான ஒன்றும் கூட. ‘நீங்கள் என்ன சொல்லி தருகிறீர்களோ’ அதை கடைபிடிக்க வேண்டும் என கற்றுக்கொண்டேன். எனக்குள் இருக்கும் என்னையே புரிந்துகொள்ள உதவிய பரிசோதனை முயற்சி அது.

ஒருவர் தனக்கு வெளியே மாற்றத்தை கொண்டு வருவதைவிட தனக்கு உள்ளே மாற்றம் கொண்டுவருவதே முக்கியம் என்கிறார் அவர். 

யூத் அல்லையன்ஸ் உருவானது

டீச் ஃபார் இந்தியாவில் கிடைத்த அனுபவங்கள் இவருக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்தது. யூத் அல்லையன்ஸ் என்ற ஒரு அமைப்பை துவங்கினார். அதில் இளைஞர்களையெல்லாம் இணைத்துக்கொண்டு இந்தியாவின் பிரச்சினைகளை தீர்க்க விரும்பினார். மரம் நடுவது, தெருவை சுத்தப்படுத்துவது, தண்ணீர் சேமிப்பு குறித்த பிரச்சாரம் போன்றவற்றில் இந்த அமைப்பு ஈடுபட்டது. இதன் ஒரு பகுதியாக டாடா டீ நிறுவனத்தை சேர்ந்த ஜனக்ரஹாவோடு இணைந்து “ஜாகோ ரீ"என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன் ஒரு அங்கமாக காசியாபாத் பகுதியை எடுத்துக்கொண்டார். அப்போது வந்த தேர்தலில் எல்லா இளைஞர்களையும், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்து கொள்ள செய்ய வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருந்தது. அது மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது. இது கொடுத்த உற்சாகத்தில் எல்லா இளைஞர்களையும், கிராமத்தை நோக்கிய பணிகளில் ஈடுபடுத்த முடிவெடுத்தார். எனவே 2011 -ம் ஆண்டு யூத் அல்லையன்ஸ் அமைப்பை முறைப்படி பதிவு செய்திருக்கிறார்.

image


இரண்டு திட்டங்கள்

இந்த அமைப்பின் மூலமாக இரண்டு திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். கிராமிய மந்தன் என்ற திட்டத்தின் அங்கமாக 9 நாட்கள் கிராமத்தில் தங்க வேண்டும். அங்கே பணியாற்ற வேண்டும். இதன்மூலம் கிராமத்தின் உண்மையான நிலை என்ன என்பது நகர இளைஞர்களுக்கு புரியும். இதன் ஒரு பகுதியாக கான்பூர் தேகத் என்ற கிராமத்தில் பணி செய்கிறார்கள். இந்த திட்டம் ஐந்தாண்டுகளை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறது.

இன்னொரு திட்டத்திற்கு பெயர் 'ONUS'. இதன்மூலம் கல்லூரி மாணவர்கள் தங்கள் தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்ளவும், தொழில்முனைவோராக வளரவும் உதவுகிறார்கள். இது ஓராண்டு பயிற்சி திட்டம் ஆகும். இதன் மூலம் பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்துகிறார்கள். அதில் வடிவமைப்பு சிந்தனை, இருப்புகளை திரட்டுதல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியாக, திறமையாக தங்களை வெளிப்படுத்துவது எப்படி என கற்றுத்தருகிறார்கள். இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக கிராமங்களுக்கு சென்று அங்கிருக்கும் பிரச்சினையை சரிசெய்ய உதவுகிறார்கள்.

நிதி

இந்த அமைப்பு செயல்படுவதற்கான பெரும்பாலான நிதி விருதுகளின் மூலமாக தான் கிடைக்கிறது. “கூகிள் தொழிமுனைவோர் விருது” ரோத்ஸ் யூத் ஃபாரம் போன்ற விருதுகளை உதாரணமாக சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் பிரவாத், சி.ஒய்.சி, கூன்ச் போன்றோரிடமிருந்தும் நிதி திரட்டுகிறார்கள். யுனைடட் நேசன்ஸ் பாபுலேசன் ஃபண்ட், யூ.என்.வி மற்றும் நேசனல் ஃபவுண்டேசன் ஆஃப் இந்தியா ஆகியோரிடமிருந்தும் நிதி பெறுகிறார்கள்.

image


சில தனிநபர்களும், முன்பு இவர்கள் அமைப்பில் பணியாற்றியவர்களும் கூட நிதியுதவி அளிக்கிறார்கள். “எங்கள் ஆலோசனை குழு மிகப்பெரிய உதவியாக இருக்கிறார்கள். எங்கள் திட்டத்தின் மூலமாகவும் நிதி திரட்டுகிறோம். எங்களின் மொத்த பணத்தில் 25லிருந்து 30 சதவீதம் அதிலிருந்தே கிடைக்கிறது” என்றார்.

அமைப்பின் அங்கத்தினர்

இந்த அமைப்பில் தற்பொழுது 350 பேர் நேரடியாக பணியாற்றுகிறார்கள். இந்த அமைப்பிலிருந்து வெளியே சென்றவர்கள் வேறு வேறு அமைப்புகளில் உள்ள 35 செயல்பாடுகளில் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 80 பேர் சமூக முன்னேற்றத்தில் பங்காற்றுக்கிறார்கள். சில இளைஞர்கள், வீட்டில் பேசி புரியவைத்து, பெரும் போராட்டத்திற்கு பிறகே இந்த அமைப்பில் இணைகிறார்கள். உதாரணமாக பல்லவி. அவரது வீட்டில் சம்மதம் வாங்க பெரும்பாடு பட்டிருக்கிறார். கிராமிய மந்தன் திட்டத்தில் பணியாற்றிய இன்னொரு பெண்ணும் அதே போல தான். அவர் தற்பொழுது பிகாரில் கல்விப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

image


சிரமங்கள்

வீட்டில் பேசி புரியவைப்பது தான் மிகச்சிரமமான ஒன்றாக இருப்பதாக தெரிவிக்கிறார் பிரகார். காரணம் பெற்றோர்களின் கனவுகள் வேறு, எங்களது கனவுகள் வேறு. ஆரம்பத்தில் தனக்கும் இந்த பிரச்சினை இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் இந்த பணிகளில் இவரது ஆர்வத்தையும், அதனால் இவருக்குக் கிடைத்த மகிழ்ச்சியையும் பார்த்த பெற்றோர்கள் படிப்படியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

image


”எங்கள் அமைப்பின் நோக்கம் மனமாற்றத்தை உருவாக்குவது தான் என்பதால், உடனடியாக இதன் தாக்கத்தை அளவிட முடியவில்லை. இதற்கு கொஞ்சம் காலம் ஆகும். அதே போல நிதி திரட்டுதலும் சவாலாக இருக்கிறது” என்றார்.

மூன்று ஆண்டுகள் முழுமையாக பணியாற்றிய ஒருவரிடம் இந்த அமைப்பை ஒப்படைத்துவிடப் போவதாக தெரிவிக்கிறார்.

இந்த அமைப்பு ஒரு ஐடியாவை போல பரவ வேண்டும். பல முன்மாதிரி இளைஞர்களையும், சமூக தொழில்முனைவோர்களையும் உருவாக்க வேண்டும். இதற்கு பிறகு நான் இளைஞர்கள் மத்தியில் மிகத்தீவிரமாக பணியாற்றப்போகிறேன். ஒரு நிறுவனத்தை துவங்கி “தேச கட்டுமானத்தில்” ஈடுபடப்போகிறேன். இந்தியன் ஸ்கூல் ஆஃப் டெமாக்ரசி போல ஒன்றை உருவாக்கி, இளைஞர்களை அதில் முழு நேரமும் தங்க வைத்து, ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் கட்டமைப்பது பற்றி கற்றுத்தர வேண்டும். நீதிமன்றம், அரசாங்கம், சட்டமன்றம், ஊடகம் போன்றவை பற்றி சொல்லித்தர வேண்டும்.

பிரகாரின் கனவு மிகப்பெரியதாக இருக்கிறது. “இது மிகப்பெரிய வேலை. இதை செய்து முடிக்க இரண்டு நூற்றாண்டுகள் வரை ஆகும். என்னுடைய வேலை எல்லாம் இதற்கான விதையை தூவுவது தான். அன்பு, நம்பிக்கை, நம்பகத்தன்மை இதை விதைக்கிறேன். அவ்வளவே” என்று புன்னைகைக்கிறார்.

இணையதளம் : Young Alliance

ஆங்கிலத்தில் : SNIGDHA SINHA | தமிழில் : Swara Vaithee

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


தொடர்பு கட்டுரைகள்:

இந்தியா ஏன் ஆசிரியர்களை தனிமைப்படுத்தக்கூடாது?

வகுப்பறை அனுபவத்தை மாற்ற முயலும் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள்


Add to
Shares
41
Comments
Share This
Add to
Shares
41
Comments
Share
Report an issue
Authors

Related Tags