பதிப்புகளில்

சிஐஐ தெற்கு மண்டல ‘வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது’- விண்ணப்பங்கள் வரவேற்பு!

18th Jan 2018
Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share

சிஐஐ- தெற்கு மண்டலத்தின் 2017-க்கான 8-வது ’Emerging Entrepreneur Award’ அதாவது ‘வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது’ வரும் பிப்ரவரி மாதம் சென்னையில் நடைப்பெற உள்ளது. 

இந்த எட்டாவது பதிப்பு விருது விழாவிற்காக தெற்கு மண்டல சிஐஐ தலைவர் மற்றும் தொழிலதிபருமான சிகே.ரங்கனாதன் தலைமையில் பரிந்துரை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் உள்ளனர். தெற்கு மண்டல மாநிலங்களான (தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுவை) ஆகியவற்றில் இருந்து விண்ணப்பங்கள் பெற்று விருதுக்கு தகுதியானவர்களை இக்குழு தேர்வு செய்யும்.  

image


விருதின் முக்கிய நோக்கம்

வளர்ச்சிப் பாதையில் இருக்கும் தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலையும், தொழிலை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லும் வழிமுறைகளையும் அளிக்க உதவுவதே இந்த விருதின் முக்கிய நோக்கமாகும். சிஐஐ; கருத்து மற்றும் சிறப்பு (Concept & Excellence), யுக்திகள் மற்றும் வளர்த்தல் (Strategy & Scaling-up), தனித்துவம் வாய்ந்த சந்தை முயற்சிகள் (Niche Market Initiative), மற்றும் சமூகப் பார்வையுடன் கூடிய தொழில்முனைவு முயற்சி (Entrepreneurship with a social face) ஆகிய அடிப்படைகளில் கடந்த ஆண்டுகளின் விருதுகள் வழங்கப்பட்டது. 

2010-ல் சிஐஐ தொடங்கிய இந்த வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது, தமிழ்நாட்டில் தொழில்முனைவோர் மத்தியில் நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் பார்வையையும் இவ்விருதாளர்கள் பக்கம் திருப்பியது. தெற்கில் உள்ள இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், தேசிய-சர்வதேச அளவில் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும் வழங்குகிறது இந்த அங்கீகாரம். 

சிஐஐ-எஸ்ஆர் வளர்ந்துவரும் தொழில்முனைவோர் விருதுகளை கடந்த ஆண்டுகளில் பெற்றவர்கள்: ஃப்ளிப்கார்ட் நிறுவனர்கள், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, யூனிவர்செல், சக்தி மசாலா, ஐஎம்ஐ மொபைல், க்ரேட் ஸ்போர்ட்ஸ் இன்ப்ரா, எடு ஸ்போர்ட்ஸ், போலண்ட் இண்டஸ்ட்ரீஸ், ரெட்பஸ்.இன் மற்றும் பலர், தெற்கு மண்டல இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து இவ்விருதை பெற்றுள்ளனர். 

இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைப்பெற உள்ள சிஐஐ-எஸ்ஆர் ‘வளர்ந்துவரும் தொழில்முனைவோர் விருது’-க்கு விண்ணப்பிக்க: விண்ணப்பப்படிவம். விருதுக்கு விண்ணப்பிக்கவேண்டிய கடைசி நாள்: 21 ஜனவரி 2018. 

விருதுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:

* முதல் தலைமுறை தொழில்முனைவர்

* உண்மையான, புதுமையான, வளர்ச்சி அடையக்கூடிய தொழில் ஐடியா

* தென் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் 

* நிறுவனம் தொடங்கி 2 முதல் 4 ஆண்டுள்ளவை 2016-17 விற்றுமுதல் குறைந்தபட்சம் 3 கோடி ரூபாய் இருத்தல் வேண்டும் 

* நிறுவனம் தொடங்கி 4 முதல் 15 ஆண்டுள்ளவை 2016-17 விற்றுமுதல் 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக இருத்தல் வேண்டும் 

இந்த ஆண்டு சுமார் 300 விண்ணப்பங்களை எதிர்ப்பார்ப்பதாக சிஐஐ தெரிவித்துள்ளது. 

மேலும் விவரங்களுக்கு: CIIEEAwards

To Apply for Award: CII SR Emerging Entrepreneurs Award 2017 Application Form

Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share
Report an issue
Authors

Related Tags