பதிப்புகளில்

’உலகளவில் மாற்றத்தை ஏற்படுத்துவோர்’ விருதுக்கு தேர்வான ஒரே இந்தியப் பெண்!

YS TEAM TAMIL
7th Sep 2018
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

இந்த ஆண்டிற்கான ’உலகளவில் மாற்றத்தை ஏற்படுத்துவோர்’ (Global Changemaker) விருதினை வென்றுள்ளார் 18 வயதான கர்விதா குல்ஹாதி. 42 நாடுகளில் இருந்து பங்கேற்ற 60 பேரில் ஒரே இந்தியர் இவர் மட்டுமே. ’உலகளவிலான மாற்றத்தை ஏற்படுத்துவோர்’ இளைஞர்களுக்கான திட்டமாகும். இது சமூக தொழில்முனைவோர் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கானது. மதிப்புமிக்க இந்த விருதுகள் ஸ்விட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் வழங்கப்படுகிறது.

கர்விதா பெங்களூருவைச் சேர்ந்த பி.டெக் மாணவி. இவர் நீர் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ’வொய் வேஸ்ட்’ (Why Waste) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இந்த ஸ்டார்ட் அப் உணவகங்களுடன் இணைந்து பணியாற்றி அங்கு டம்ளரில் மிச்சமாகும் நீர் வீணாக்கப்படுவதை தடுக்க உதவுகிறது. இவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், அரசு சாரா நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். 

image


பரிசீலனைகளுக்குப் பிறகு இந்த திட்டத்திற்கு சுமார் 60 விண்ணப்பங்கள் தேர்வானது. 1,000 இளம் தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புடன் இவர்கள் இணைவார்கள். கர்விதா தான் தேர்வானது குறித்து குறிப்பிடுகையில்,

”உலகளவில் மாற்றத்தை ஏற்படுத்துவோர் ஒருங்கிணைப்பில் நானும் பங்குபெறுவது குறித்து உற்சாகமடைகிறேன். உலகெங்கிலும் உள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் பிற இளைஞர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் அந்த படிப்பினைகளைக் கொண்டு நம் நாட்டின் இளைஞர்களுக்கு உந்துதலளிக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்ததுள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் என் நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு இளைஞருக்கும் உந்துதலளிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாகும்,” என்றார்.

கர்விதா தனது ஸ்டார்ட் அப்பின் துவக்கம் குறித்து ’தி லாஜிக்கல் இண்டியன்’-க்கு தெரிவிக்கையில்,

’ரீப் பெனஃபிட்ஸ்’ முயற்சியைச் சேர்ந்த குல்தீப் தண்டேவாடியா எங்களது பள்ளிக்கு வந்தபோதுதான் இந்த எண்ணம் துவங்கியது. தினமும் 14 மில்லியன் லிட்டர் தண்ணீர் உணவகத்தில் இருந்து வீணாக்கப்படுவது குறித்து விவரித்து காட்சிப்படுத்தினார். இதுவே. காலத்தை கடத்தாமல் விரைவாக செயலில் இறங்கவேண்டும் என்பதை உணர்த்தியது,” என்றார்.

தேர்வு செய்யப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துவோர் பிரச்சாரம், நிதி உயர்த்துதல், திட்ட மேலாண்மை, தலைமைத்துவம், மக்களைத் தொடர்புகொள்ளுதல் மற்றும் அவர்களிடையே அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட திறன்களை மேம்படுத்திக்கொள்ள உலக இளைஞர் மாநாட்டில் பயிற்சி வகுப்புகள், ஒருங்கிணைதல் மற்றும் பட்டறைகளில் பங்கேற்றனர். ஸ்விசர்லாந்தின் ஆராயூ பகுதியில் நடைபெற்ற இந்த மாநாடு ஆகஸ்ட் 18-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

மாற்றத்தை ஏற்படுத்துவோர் தங்களது திட்டங்களை முன்வைக்கவும் தங்களது தற்போதைய முயற்சியின் வளர்ச்சிக்கும் புதிய ப்ராஜெக்டுகளை உருவாக்குவதற்கும் தேவையான நிதியுதவிக்கு விண்ணப்பிக்கவும் வழிவகுத்தது. 

image


உலகளவில் சமூகத்தில் புதுமை படைப்பவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் மிகப்பெரிய ஒருங்கிணைப்பான ’அசோகா இன்னோவேட்டர்ஸ் ஃபார் பப்ளிக்’ நிறுவனத்தின் அசோகா இளம் துணிகர முயற்சியாளராக (Ashoka Youth Venturer) கர்விதா அங்கீகரிக்கப்பட்டார். Change.org/glasshalffull என்கிற விண்ணப்பம் வாயிலாக சேஞ்ச்.ஓஆர்ஜி கர்விதாவின் பிரச்சாரங்களுக்கு ஆதரவளித்து வருகிறது என என்டிடிவி தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக