பதிப்புகளில்

முதுமையிலும் சுயம்வரம் காண திரண்ட 250 இந்திய குடிமக்கள் !

YS TEAM TAMIL
25th Jun 2016
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

வாழ்க்கையை வசந்தம் ஆக்குபவர்களுக்கு, வயது என்பது ஒரு எண்ணிக்கை தான். 

கடந்த வாரம், பெங்களூரில் வயதானவர்களுக்கு மண பொருத்தம் அமைக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. இதில் ஐம்பதிலிருந்து அறுபது வயது உடைய 250 மூத்த குடிமக்கள் பங்குகொண்டனர்.

"திருமணமாகாதவர்கள், விவாகரத்து ஆனவர்கள், கணவன்/மனைவி இழந்தவர்கள் முதலிய வயதானவர்கள் பங்கு கொண்டதைக் கண்டு மனம் நெகிழ்கிறது", 

என்றார் அனுபந்தனா நிறுவனத்தின் உறுப்பினரான பாரத்பாய் படேல். (தகவல்: டைம்ஸ் ஆப் இந்தியா)

image


தனித்து வாழ்வதோ அல்லது தங்கள் குழந்தைகளைப் பிரிந்து இருப்பதோ, முதியோர்கள் இன்று சந்திக்கும் முக்கிய சமூக பிரச்சனையாகும். முதியோர்கள், அவர்களுக்கென ஒரு வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுத்து கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ உதவும் வகையில், அகமதாபாத்தில் உள்ள எங்கள் நிறுவனம், நம் நாட்டின் சில முக்கிய நகரங்களில் இந்நிகழ்வை நடத்தி வருகிறது.

"முதன்முதலில் ஜனவரி 2014இல் நடந்த நிகழ்ச்சிக்கு 300 முதியோர் வந்திருந்தினர். இந்த வருடம் மங்களுரு, ஹப்பலி, மைசூரு மற்றும் ராய்ச்சூர் முதலிய கர்நாடகாவின் வெவ்வேறு இடங்களிலிருந்து 250 பேர் கலந்து கொண்டனர், என்று பாரத்பாய் படேல் பகிர்ந்து கொண்டார்.

பங்கு கொண்டவர்களில் அதிகபட்ச வயதான மூத்தவர்களாய், ஆண்களில் 78 வயதும், பெண்களில் 55 வயதிலும் இருந்தனர்.

வந்திருந்தோர்களில் பத்து தம்பதிகள் நிகழ்விடத்திலே நிச்சியம் செய்து கொண்டனர். பன்னிரண்டு ஜோடிகள் மறுபடியும் சந்தித்து, திருமண நாள் குறிக்க முடிவு செய்ய உள்ளனர். பலர், மற்ற நகரங்களில் பதிவு செய்திருக்கும் நபர்களைச் சந்திக்க உதவுமாறு, தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

தனி குடும்பம், தொழில் ஈடுபாடு, மாறிவரும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களினால், முதியோர்களின் வாழ்க்கை தகர்க்கப்படுகிறது. 

அதிலும், படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் மகன்கள்/ மகள்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், பின் தனியாக அதே நகரத்திலோ அல்லது வேறு இடத்திலோ வாழ்வது அவர்களுக்கு பெரும் மன கஷ்டத்தைத் தரும், என்றார் பாரத்பாய் படேல்.

நடுத்தரவர்க்கத்தில் வாழும் பெரும்பாலான மூத்த குடிமக்கள், போதுமான அளவு செல்வம் உடையவராய் இருக்கின்றனர்.

ஆனால், இவர்கள் அனுபவிக்கும் கொடுமையான தனிமை வாழ்வு தான், இவர்களை சாதி, மதம், அந்தஸ்து என சமூக தடைகளை எல்லாம் தாண்டி, மறுமணம் செய்ய வைக்கிறது.  

நன்றி: Think Change India   

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags