பதிப்புகளில்

Dell Startup Challenge; பகுதி 2 அறிவிப்பு- 5000 டாலர் மதிப்புள்ள டெல் தொழில்நுட்பத்தை வென்றிடுங்கள்...

YS TEAM TAMIL
14th Sep 2017
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

தற்போது உள்ள மார்கெட் ட்ரெண்டை மாற்றும் அளவிற்கு புது கண்டுப்பிடிப்பு உங்களிடம் உள்ளதா? அல்லது பெரும் கனவோடு இருக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனமா? 

இது போன்ற யோசனை இருக்கும் பல வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான போட்டி - Dell Startup Challenge, பகுதி 2.

உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியில் தொழில்முனைவோரின் பங்கு அதிகம் உள்ளது என டெல் நம்புகிறது. அதனால் ஒரு சிறந்த தொழில்முனைவோரை அடையாளம் காண, அவர்களை மெருகேற்றும் விதமாக அவர்களுக்கு தேவையான கருவிகள், தொழில்நுட்பம் மற்றும் வளங்களை அளிக்கிறது.

image


ஒரு சிறந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கும் யோசனை உங்களிடம் உள்ளதா? அதை நடைமுறை படுத்த வேண்டுமா? அப்படியென்றால் Dell Startup Challenge உங்களுக்கு ஏற்றது தான். இந்த போட்டிக்கு விண்ணப்பிக்கும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து, டெல் அவர்களுக்கு முதலீட்டாருடன் அவர்கள் தங்கள் தொழில் யோசனைகளை பற்றி பேசவும், ஸ்டார்ட்- அப் நிதி பெறவும் வாய்ப்பு அளிக்கிறது, அதோடு டெல் மடிக்கணினியும் வழங்குகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு 5000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள டெல் தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது; அது உங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும்.

உங்களுக்கு உறுதுணையாக டெல் தொழில்நுட்பம் உள்ளது

டெல், தொழில் முனைவோர்கள் வளரவும் அவர்களை மெருகேற்றவும் உதவுகிறது. அதனால்தான் டெல், ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் ஆரம்பக்காலத்தில் மார்கெட்டின் மிக முக்கியமான நேரத்தில் முழுமையான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குகிறது. இந்த சலுகையை நீங்கள் பெற வெற்றியாளராய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வெற்றி பெறுவோருக்கு நிச்சயம் கூடுதல் பரிசும், வாய்ப்பும் கிடைப்பது உண்மைதான்; ஆனால் அதற்கு அர்த்தம் வெற்றி பெறாதோருக்கு வெறும் கை என்பது அர்த்தம் இல்லை. வெற்றி பெறாதோர் பல அனுபவங்கள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை பெறுவீர்கள். மேலும் வளர்ச்சிக்கு தேவையான வலுவான பல தந்திரங்களை தெரிந்துக்கொள்வீர்கள். பல ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆரம்பத்தில் முறையான வழிக்காட்டி, நெட்வொர்கிங் மற்றும் ஆலோசனை இல்லாதலால் அவர்கள் வெற்றி தடைப்பட்டுள்ளது.

இது உங்கள் யோசனையை முழுமையாக்கும்...

Dell Startup Challenge பகுதி 2-ல் பங்கேற்பது மூலம், உங்கள் ஸ்டார்ட்-அப் யோசனைகளை வலுவாக்க முடியும், தொடக்க நிறுவனத்தை நடத்த ஊந்துதலாய் இருக்கும். முதலில் உங்கள் வணிக யோசனைகளை காகிதத்தில் எழுதத் தூண்டும், உங்கள் எண்ணங்களை ஒழுங்கமைக்கும், உங்கள் வியாபாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் விமர்சிக்க தூண்டும், மேலும் உங்கள் வணிகத்தை இன்னும் மெருகேற்ற வழி செய்யும்.

Dell Startup Challenge-இன் முதல் பகுதி கடந்த வருடம் நடந்தது, அதில் 550-க்கும் மேற்பட்ட ஆரம்ப நிலையில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கலந்துக்கொண்டனர். OroWealth, i2u2, and Project Mudra, Leado and Perpule ஆகிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப் பிடித்து டெல் மடிக்கணினியை வென்றது. அதில் வெற்றி பெற்ற i2u2 நிறுவனம் 5000 மதிப்புள்ள டெல் தொழில்நுட்பத்தை பெற்றது. OroWealth, i2u2, and Project Mudra மூன்று நிறுவனமும் யுவர் ஸ்டோரியில் இடம் பெற்று சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது.

இன்னும் எதற்கு காத்திருக்கிறீர்கள்? உங்கள் யோசனைக்கு உயிர் கொடுங்கள்.

மேலும் Dell Startup Challenge பகுதி2 பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி நாள் அக்டோபர் 10, 2017 ஆகும்.

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக